மாலை மலர்
மாலை மலர் தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ். மாலை நேரங்களில் வெளியாகும் இந்த செய்தித்தாள், 1977 இல் சி. பா. ஆதித்தனாரால் கோவையில் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கோவை, சென்னை, சேலம், ஈரோடு, புதுச்சேரி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், வேலூர் போன்ற நகரங்களில் இருந்து எட்டு பதிப்புகளாக வெளியாகின்றது.
வகை | தின நாளிதழ் |
---|---|
வடிவம் | தாள் |
உரிமையாளர்(கள்) | சி. பா. ஆதித்தனார் |
வெளியீட்டாளர் | தினத்தந்தி குழுமம் |
நிறுவியது | 1977 ஆம் ஆண்டு |
மொழி | தமிழ் |
தலைமையகம் | தமிழ் நாடு |
இணையத்தளம் | http://www.maalaimalar.com |
இச்செய்தித் தாளின் இணைய தளத்தில் செய்திகள் மட்டும் அல்லாமல் திரைப்படத்துறைக்காக தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் தொடர்பான செய்திகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.[1]