ராஜ்யலட்சுமி
ராஜ்யலட்சுமி சாந்து என்பவர் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.[1] இவர் 1980 களில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். தெலுங்கு திரைப்படமான சங்கராபரணம் படத்தில் நடித்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டார், இதில் இவர் தனது பதினைந்து வயதில் சந்திர மோகனுடன் கதாநாயகியாக நடித்தார். சங்கரபாரணத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜ்யலட்சுமி, என். டி. ராமா ராவ், நாகேஸ்வர ராவ், ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, சங்கர், மோகன்லால், திலீப், ஜிதேந்திரா, மம்முட்டி, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இந்திய திரைப்படத் துறையின் அனைத்து பகுதிகளிலும் பல முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார். தற்போது இவர் தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் அவ்வப்போது தோன்றுகிறார்.[2]
சங்கராபரணம் ராஜ்யலட்சுமி | |
---|---|
பிறப்பு | 18 திசம்பர் 1964 |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1980-1990 2003-தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | கே. ஆர். கிருஷ்ணன் (1990 - தற்போதுவரை) |
பிள்ளைகள் | ரோகித் ராகுல் |
குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
தொகுராஜ்யலட்சுமி 1964 திசம்பர் 18 அன்று ஆந்திராவின் தெனாலியில் பிறந்தார். தனது குழந்தை பருவத்திலேயே நாடகக் குழுவில் இருந்த தனது தாயுடன் சிறிய நாடகங்களில் நடித்துள்ளார். 1980 இல் சங்கராபரணத்தில் "சாரதா" என்ற பாத்திரத்தில் நடித்தார்.
1990 ஆம் ஆண்டில் கே. ஆர். கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு ரோகித் கிருஷ்ணன் மற்றும் ராகுல் கிருஷ்ணன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்துடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வசிக்கிறார்.
திரைப்படவியல்
தொகுதமிழ்
தொகு- சுஜாதா (1980)
- கோடீஸ்வரன் மகள் (1981)
- மூன்று முகம் (1982)
- அதிசய பிறவிகள் (1982)
- அர்ச்சனைப் பூக்கள் (1982)
- கருடா சௌக்கியமா (1982)
- நலந்தானா (1982)
- பகவதிபுரம் ரயில்வே கேட் (1983)
- இமைகள் (திரைப்படம்) (1983)
- கை கொடுக்கும் கை (1984)
- நாணயம் இல்லாத நாணயம் (1984)
- சங்கநாதம் (1984)
- தேன் கூடு (1984)
- கடிவாளம் (1985)
- பெருமாள் (1985)
- மீண்டும் பல்லவி (1986)
- மனிதனின் மறுபக்கம் (1986)
- ஆனந்தக் கண்ணீர் (1986)
- தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
- பூக்கள் விடும் தூது (1987)
- பூவிழி வாசலிலே (1987)
- சங்கர் குரு (1987)
- சூரசம்ஹாரம் (திரைப்படம்) (1988)
- காதல் கீதம் (1988)
- கைவீசம்மா கைவீசு (1989)
- திராவிடன் (1989)
- என் அருமை மனைவி (1989)
- நியாயங்கள் ஜெயிக்கட்டும் (1990)
- புதுப்பாடகன் (1990)
- தாலாட்டு பாடவா (திரைப்படம்) (1990)
- பரசுராம் (2003)
- டிரீம் (2004) 2003
- பிரியசகி (2005)
- திருப்பாச்சி (திரைப்படம்) (2005)
- வரலாறு (திரைப்படம்) (2006)
- எம் மகன் (2006)
- திருப்பதி (2006)
- சாது மிரண்டா (2008)
- தனம் (2008)
- யாரடி நீ மோகினி (திரைப்படம்) (2008)
- பிரிவோம் சந்திப்போம் (2008)
- குட்டி (2010)
- உத்தம புத்திரன் (2010)
- சைவம் (திரைப்படம்) (2014)
- காலக்கூத்து (2018)
தொலைக்காட்சித் தொடர்கள்
தொகுஆண்டு | தலைப்பு | அசல் தலைப்பு | பாத்திரம் | அலைவரிசை | மொழி |
---|---|---|---|---|---|
1991 | பெண் | சுஜாதா | தூர்தர்ஷன் | தமிழ் | |
2007-2010 | மேகலா | மேகலா | திலகா | சன் தொலைக்காட்சி | தமிழ் |
2009 | கண்மணியே | கண்மணியே | |||
2011–2012 | பிரிவோம் சாந்திப்போம் 1 | பிரிவோம் சாந்திப்போம் 1 | தனம் | விஜய் தொலைக்காட்சி | |
2013 | பிரிவோம் சாந்திப்போம் 2 | 2 இல் | |||
2012–2014 | பிள்ளை நிலா | பிள்ளை நிலா | நீலவேனி | சன் தொலைக்காட்சி | |
2012–2014 | பார்த்த ஞாபகம் இல்லையோ | கலைஞர் தொலைக்காட்சி | |||
2013–2015 | தெய்வமகள் | தெய்வமகள் | சம்பூர்ணம் சுந்தரம் | சன் தொலைக்காட்சி | |
2014 | அம்மா | అమ్మ | ஜெமினி தொலைக்காட்சி | தெலுங்கு | |
2017–2019 | ராஜா ராணி | ராஜா ராணி | லட்சுமி ராஜசேகர் | விஜய் தொலைக்காட்சி | தமிழ் |
2017–2019 | அழகு | அழகு | தேவி மணிமறன் | சன் தொலைக்காட்சி | |
2019 | கண்ணுலு மூசினா நீவே | ஜெகதம்பா | ஸ்டார் மா | தெலுங்கு | |
2020 - தற்போது | பாக்யலட்சுமி | பாக்யலட்சுமி | ஈஸ்வரி | விஜய் தொலைக்காட்சி | தமிழ் |
குறிப்புகள்
தொகு- ↑ http://www.thehindu.com/features/cinema/grill-mill-rajalakshmi/article931302.ece
- ↑ "Face to Face-Tv9-Telugu". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 14 November 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Rajyalakshmi
- [1]
- எம்.எஸ்.ஐ.யில் ராஜலட்சுமி
- [2][தொடர்பிழந்த இணைப்பு]
- [3] பரணிடப்பட்டது 2017-06-15 at the வந்தவழி இயந்திரம்
- [4]