திருப்பாச்சி (திரைப்படம்)

பேரரசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

திருப்பாச்சி (Thirupaachi) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 2004-ல் வெளியான கில்லி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

திருப்பாச்சி
இயக்கம்பேரரசு
தயாரிப்புஆர்.பி சௌத்ரி சூப்பர் குட் கம்பைன்ஸ்
கதைபேரரசு
இசைதீனா
தேவி ஸ்ரீ பிரசாத்
மணி சர்மா
நடிப்புவிஜய்
த்ரிஷா
சாயா சிங்
எம்.என் ராஜம்
ஒளிப்பதிவுஆர். ரத்னவேலு
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு2005
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்32 கோடி

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

திருப்பாச்சிக்கு அண்மையில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான ஊரில் அரிவாள் செய்யும் கொல்லனாக வாழ்ந்துவருகிறார் சிவகிரி (விஜய்). தங்கை கற்பகத்தின் (மல்லிகா) மீது பெரிதும் பாசம் பாராட்டும் சிவகிரி, அவள் இப்படி ஒரு சிற்றூரில் அன்றாடம் சிரமப்படுதலைக் கண்டு, ஒரு நகரத்திலேயே அவளை மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என உறுதி பூணுகின்றார். இவ்வேளையில், சாளிக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் கற்பகத்தை பெண்கேட்டுவந்த போது நல்ல வரன் என்று மணமுடித்தும் கொடுக்கின்றார். தங்கைவீட்டுக்கு வந்தவர், சுபா (திரிஷா கிருஷ்ணன்) உடன் காதலும் கொள்கின்றார்.

பின்னர் தான் நகர வாழ்க்கையுடன் ஒன்றிய துன்பங்களையும் அறிந்து கொள்கிறார். சென்னையை வட, நடு, தென் என்று பிரித்து ஆட்டிப்படைக்கும் பாண்பராக் ரவி, பட்டாசு பாலு, சனியன் சகடை ஆகியோரை பற்றியும் அறிகிறார். நண்பன் கண்ணப்பன் கொல்லப்படவும், ஆடைத்தொழிற்சாலையில் வேலைகிடைத்ததாக பொய் கூறிவிட்டு, சென்னைக்கு இவர்களை அழிக்கும் நோக்குடன் செல்கிறார். தன் தங்கையின் பிள்ளை பிறக்கும் போது இந்நகரத்தில் ரவுடிகள் ஒருவரும் இருக்கக்கூடாது எனும் கொள்கையுடன் விரைந்து செயலாற்றி, அதில் எப்படி அவர் வெற்றியும் பெறுகின்றார் என்பதே கதையாகும்.

வெளியிணைப்புகள்

தொகு