சைவம் (திரைப்படம்)

ஏ. எல். விஜய் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சைவம் (ஆங்கில மொழி: Vegetarian) என்பது 2014ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது ஏ. எல். விஜய் தயாரித்து, எழுதி இயக்கப்பட்டது. முக்கிய கதாப்பாத்திரங்களாக நாசர் (நடிகர்) மற்றும் சாரா அர்ஜுன் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைதுள்ளார். இது 6 சூன் 2014ல் வெளிவந்தது. இத்திரைப்படம் தெலுங்கில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு வெளிவந்தது.

சைவம்
இயக்கம்ஏ. எல். விஜய்
தயாரிப்புஅழகப்பன்
கதைஏ. எல். விஜய்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புநாசர் (நடிகர்)
சாரா அர்ஜுன்
பாஷா
துவரா தேசாய்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்திங் பிக் ஸ்டூடியோஸ்
விநியோகம்ரெட் கியான்ட் மூவீஸ்
வெளியீடுசூன் 27, 2014 (2014-06-27)
நாடு இந்தியா
மொழிதமிழ்

பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணனின் எட்டுவயது மகள் உத்தரா உன்னிகிருஷ்ணன் இத்திரைப்படத்திற்காகப் பாடிய "அழகு.." என்ற பாடல் அவருக்குத் தேசிய விருதினைப் பெற்றுத்தந்தது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Eight-year old Uthara croons for 'Saivam'". Sify.com. 2013-11-19. Archived from the original on 2014-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-02-06.
  2. "62nd National Film Awards: Complete list of winners". IBN Live. 24 March 2015. Retrieved 24 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவம்_(திரைப்படம்)&oldid=4113504" இலிருந்து மீள்விக்கப்பட்டது