ஏ. எல். விஜய்

ஏ. எல். விஜய் இவர் இந்திய நாட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். அவரது தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். இவருக்கு உதயா என்ற சகோதரும் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

ஏ. எல். விஜய்
பணிதிரைப்பட இயக்குனர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2007-அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
அமலா பால் (தி. 2014–தற்காலம்) «start: (2014)»"Marriage: அமலா பால் to ஏ. எல். விஜய்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D)

ஆரம்ப வாழ்க்கைதொகு

இவர் இந்திய திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். அதன் மூலம் 2009ஆம் ஆண்டு சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை வென்றார். 2007ம் ஆண்டு அஜித் மற்றும் திரிஷா நடித்த கிரீடம் என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு பொய் சொல்லப் போறோம் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குனர். 2010ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஏமி சாக்சன் நடித்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் ஆனார். 2011ஆம் ஆண்டு விக்ரம், அனுஷ்கா, அமலா பால் மற்றும் சாரா அர்ஜுன் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தையும், 2013ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவா என்ற திரைப்படத்தை இயக்கினார்.

திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் மொழி குறிப்புகள்
2007 கிரீடம் அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன் தமிழ் மலையாளம் கிரீடம் ரீமேக் (1989 படம்)
2008 பொய் சொல்ல போறோம் கார்த்திக் குமார், பியா பஜ்பை தமிழ் இந்தி கோஸ்லா கா கோஸ்லா படம் ரீமேக்
2010 மதராசபட்டினம் ஆர்யா, ஏமி சாக்சன் தமிழ் பரிந்துரை, பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருது
பரிந்துரை, விஜய் சிறந்த இயக்குநர் விருது
2011 தெய்வத்திருமகள் விக்ரம், சாரா அர்ஜுன், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால் தமிழ் பரிந்துரை, பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருது – தமிழ்
2012 தாண்டவம் விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, ஏமி சாக்சன் தமிழ்
2013 தலைவா விஜய், அமலா பால் தமிழ்
2014 சைவம் நாசர், சாரா அர்ஜுன், பாட்ஷா, ரே பால் மனோஜ், சண்முகராஜன் தமிழ்
2015 இது என்ன மாயம் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா ஷெட்டி தமிழ்

வெளி இணைப்புகள்தொகு

முகநூலில் ஏ. எல். விஜய்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._விஜய்&oldid=2703704" இருந்து மீள்விக்கப்பட்டது