விக்ரம் பிரபு

தமிழ்த் திரைப்பட நடிகர்

விக்ரம் பிரபு (Vikram Prabhu, பிறப்பு: சனவரி 15, 1986) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். இவர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் பிரபு
பிறப்பு15 சனவரி 1986 (1986-01-15) (அகவை 38)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது வரை
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
பெற்றோர்பிரபு
புனிதா பிரபு
வாழ்க்கைத்
துணை
இலக்குமி உச்சயினி (தி. 2007)
பிள்ளைகள்2
உறவினர்கள்சிவாஜி கணேசன்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

விக்ரம் இலண்டனில் பட்டப்படிப்புப் பயின்றார். சந்திரமுகி திரைப்படத்திற்கு உதவியாக சென்னை திரும்பினார். [1] சர்வம் திரைப்படத்தின் தயாரிப்பின்போது விஷ்ணுவர்த்தனுக்கு உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார்.[2]

லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக யானைகள் வளர்ப்பகத்திற்கு சென்று பழகிவந்தார்.[3][4]

நடிகர் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படத்தில் பணியாற்றுகிறார். கார்த்திகா, பியா பாஜ்பாய், ரீமா சென் ஆகியோருடன் நடிக்கிறார்.[5] இவரது திருமணத்தி்ல் திரைத்துறையினரும் அரசியல்வாதிகளும் பெருமளவில் பங்கேற்றனர். [6]

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2012 கும்கி பொம்மன் வெற்றி: விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2013 இவன் வேற மாதிரி குணசேகரன்
2014 அரிமா நம்பி அர்ஜுன் கிருஷ்ணா
2014 சிகரம் தொடு முரளி பாண்டியன்
2014 வெள்ளக்கார துரை முருகன்
2015 இது என்ன மாயம் அருண்
2016 வாகா வாசு
வீர சிவாஜி சிவாஜி
2017 சத்திரியன் குணா
நெருப்புடா குரு
2018 பக்கா பாண்டி
2019
2020 அசுரகுரு சக்தி
2021 புலிக்குத்தி பாண்டி புலி பாண்டி

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.imaphsy.com/entertainment/movies/taanakkaran-review-vikram-prabhu-a-true-story-of-police-training-academy/[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://expressbuzz.com/entertainment/news/prabhu%E2%80%99s-son-makes-his-big-debut/293501.html[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-08. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
  4. http://www.thehindu.com/arts/cinema/article2153427.ece
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
  6. http://www.indiaglitz.com/channels/tamil/events/11677.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_பிரபு&oldid=3732731" இலிருந்து மீள்விக்கப்பட்டது