சிவாஜி கணேசன்

நாடக மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan, அக்டோபர் 1, 1928 - சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும்.[2] இவர், பி. ஏ. பெருமாள் முதலியார்[3] என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

சிவாஜி கணேசன்
SivajiGanesan 19620824.jpg
சிவாஜி கணேசன், 24 ஆகத்து, 1962 பிலிம்பேரில் வெளியானது
பிறப்புவிழுப்புரம் சின்னையா மன்ராயா்.கணேசமூர்த்தி (வி.சி.கணேசன்)
அக்டோபர் 1, 1928(1928-10-01)
விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இறப்பு21 சூலை 2001(2001-07-21) (அகவை 72)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்நடிகர் திலகம் சிம்மகுரலோன்[1]
செயற்பாட்டுக்
காலம்
1952 – 1999
சமயம்இந்து
பெற்றோர்தந்தை: சின்னையா மன்ராயா்
தாயாா்: ராஜாமணி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
கமலா கணேசன்
பிள்ளைகள்சாந்தி
இராம்குமார்
பிரபு
தேன்மொழி
உறவினர்கள்உடன்பிறந்தோா் :- 1)வி. சி. திருஞானசம்பந்தமூர்த்தி
2)வி. சி. கனகசபைநாதன்
3)வி. சி. தங்கவேல்
4)வி. சி. சண்முகம்
5)வி. சி. பத்மாவதி.வேணுகோபால்
விருதுகள்பத்ம பூசன், தாதாசாஹெப் பால்கே விருது, என். டி. ஆர் தேசிய விருது, செவாலியர் விருது

வாழ்க்கைக் குறிப்பு

'சிவாஜி' கணேசன், சின்னையா மன்ராயா் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார்.

திரைப்பட வாழ்க்கை

சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.

அதே போல் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேச தலைவர்களின் பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடிக்க செய்தார்.

மேலும் புராணகால கடவுள்கலான அனைத்து கடவுளின் கதாபத்திரங்களில் நடித்துள்ளார். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் கந்தன் கருணை, திருமால் பெருமை மேலும் திரைப்படத்தில் இவர் சிவபெருமாளாக நடித்தபோது அந்த லிங்கமாக பார்த்த மக்கள்யாவும் சிவபெருமாளுக்கே உருவம் கொடுத்தவர் சிவாஜி கணேசன் என்று மக்களால் புகழ பெற்றவர். ஆனால் பாசமலர், பாவ மன்னிப்பு, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பலே பாண்டியா, ஆலயமணி, பார் மகளே பார், குலமகள் ராதை, இருவர் உள்ளம், பச்சை விளக்கு, புதிய பறவை, ஆண்டவன் கட்டளை, சாந்தி, பழநி, மோட்டார் சுந்தரம் பிள்ளை, செல்வம், நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு, இரு மலர்கள், கலாட்டா கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், உயர்ந்த மனிதன், தங்கச் சுரங்கம், தெய்வமகன், சிவந்த மண், எங்க மாமா, வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை, பாரத விலாஸ், கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்

 
கூண்டுக்கிளி திரைப்படத்தில் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர்

தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் "பாசமலர்", "பாவ மன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

புகழ்

எகிப்து அதிபர் கமால்அப்தெல்நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்கும் ஆவேசமான கதாபாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசனை நேரில் காண வேண்டும் என்பதற்காக அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து சென்ற முதல் நடிகர் என்ற பெருமைக்கு உரியவர் சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.[4]

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

 
சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசனின் சிலை

நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

தெலுங்கு திரைப்படங்கள்

 • பெம்புடு கொடுக்கு (1953) .... மோகன் வேடம்
 • தால வன்சானி வீருடு (1957)
 • பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (1960)
 • பவித்ர பிரேமா (1962)
 • ராமதாசு (1964)
 • பங்காரு பாபு (1972)
 • பக்த துகாரம் (1973) .... சிவாஜி
 • சானக்ய சந்திரகுப்தா (1977)
 • விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)

மலையாளத் திரைப்படங்கள்

 • ஒரு யாத்ர மொழி (1997)

மேற்கோள்கள்

 1. S. Muthiah (1987). Madras discovered: a historical guide to looking around, supplemented with tales of "Once upon a city". Affiliated East-West Press. பக். 269. http://books.google.com/books?id=smtuAAAAMAAJ. பார்த்த நாள்: 12 ஜூலை 2012. 
 2. Raman, Mohan V. (2014-11-08). "What’s in a name?" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/cinema/whats-in-a-name/article6578238.ece. 
 3. "கண்டதும் கேட்டதும்" (in தமிழ்). தினமணி. 2017. https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/oct/04/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---16-2784352.html. 
 4. http://www.imdb.com/name/nm0304262/bio
 5. Sivaji Ganeshan பரணிடப்பட்டது 2012-03-24 at the வந்தவழி இயந்திரம், telugucinema.com, 4 செப்டம்பர் 2002 – 10:25:00 am
 6. http://www.sify.com/movies/boxoffice.php?id=14254366&cid=13154571[தொடர்பிழந்த இணைப்பு] சிவாஜி சிலை திறப்பு விழா
 7. "சிவாஜி கணேசன் டூடுலை லெளியிட்டது கூகுள்". பார்த்த நாள் 01-10-2021. (ஆங்கில மொழியில்)
 8. "சிவாஜி கணேசன் டூடுல் குறித்த விக்ரம் பிரபுவின் டுவிட்டர் பதிவு". பார்த்த நாள் 04-10-2021. (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாஜி_கணேசன்&oldid=3292783" இருந்து மீள்விக்கப்பட்டது