முதல் மரியாதை

பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

முதல் மரியாதை (1985) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

முதல் மரியாதை
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புபாரதிராஜா
கதைபாரதிராஜா
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
ராதா
சத்யராஜ்
வடிவுக்கரசி
தீபன்
ரஞ்சனி
ஜனகராஜ்
ஏ.கே.வீராச்சாமி
ஒளிப்பதிவுகண்ணன்
படத்தொகுப்புராஜகோபால், மோகன் ராஜ்
வெளியீடு1985
ஓட்டம்160 நிமிடங்கள்
மொழிதமிழ்

கிராமப்படம் / கலைப்படம் வண்ணப்படம்

அறம் பிழன்ற பெண்ணைத் தன் உறவினரின் மானம் காக்க மணம் புரிந்துகொண்டாலும், தன் மனைவியால் எப்போதும் நிந்திக்கப்பட்டு வரும் மனிதர். ஊருக்குப் புதிதாக வரும் தன் மகளின் வயதுடைய பெண்மேல் காதல் கொள்கின்றார். அவர்மேல் காதல் கொள்ளும் அறிவார்ந்த அப்பெண்ணும் ஊராரின் வசவுகளை ஏற்று அவருடைய குடும்ப மானம் காக்கக் கொலை செய்து சிறை செல்கின்றாள். அவளுக்கு இழுக்கு வராவண்ணம் அப்பெண்ணின் வீட்டிலேயே வாழ்ந்து தன் இறுதிக்காலத்தில் அவளை மீண்டும் கண்டபின் உயிர் துறக்கின்றார். அன்றில் பறவையைப் போல் அப்பெண்ணும் உயிர் துறக்கின்றார்.

பாத்திரங்கள்

தொகு

ஒலிப்பதிவு

தொகு

இந்தப் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை இளையராஜா செய்திருந்தார். அனைத்துப் பாடல் வரிகளையும் வைரமுத்து இயற்றியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே புகழ்பெற்று படத்தின் வெற்றிக்குத் துணைபுரிந்தன.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நேரம்
1 "அந்த நிலாவத்தான்" இளையராஜா, சித்ரா வைரமுத்து 4:31
2 "பூங்காற்று திரும்புமா" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வைரமுத்து 4:52
3 "வெட்டிவேரு வாசம்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வைரமுத்து 4:28
4 "ஏ குருவி" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வைரமுத்து 1:16
5 "ராசாவே உன்ன நம்பி" எஸ். ஜானகி வைரமுத்து 4:32
6 "ஏ கிளியிருக்கு" இளையராஜா வைரமுத்து 1:08
7 "ஏறாத மலை மேல" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வைரமுத்து 2:08
8 "நான் தானே அந்தக்குயில்" எஸ். ஜானகி வைரமுத்து 0:28

விருதுகள்

தொகு

1986 தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

  • வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து
  • வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த வட்டாரத் திரைப்படம் - முதல் மரியாதை - பாரதிராஜா

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_மரியாதை&oldid=3959121" இலிருந்து மீள்விக்கப்பட்டது