காதல் (Love) என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்பவனவற்றை உடைய ஓர் ஆசை ஆகும்.[1] பொருட்கள், இயற்கை, தொழில், கலை, கருத்தியல்கள் என பலவற்றை நோக்கியும் காதல் ஏற்படும் என்று கூறப்பட்டாலும், அவற்றின் பொருள் வேறுபட்டது.

காதலின் வேதியியல் அடிப்படை

தமிழ், தமிழர் வாழ்வில் காதல்

தமிழ் இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, திருக்குறள், அகநானூறு, குறுந்தொகை போன்ற நூல்களிலும், காதலைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. இவைகளில் காதல் என்ற சொல் அகம் என்ற சொல்லில் கையாளப்பட்டுள்ளது.[சான்று தேவை] தொல்காப்பியத்தில் தலைவன், தலைவி தொடர்பான இலக்கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான திரைப்படங்கள் காதலை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன.

ஒருதலைக்காதல்

கைக்கிளை என்னும் ஒருதலைக்காதல் என்பது தலைவன்/தலைவி ஒருவர் மட்டுமே ஆசைப்படுவதாகும்.

காதல் தோல்வி

காதல் தோல்வி காரணமாகச் சிலர் தற்கொலை செய்வதும் அதிக அளவில் நடந்துவருகிறது.[2]

சாதிக் கலவரங்கள்

வேறு சாதி/மதம் சார்ந்தவரைக் காதலிப்பதால் இது சாதிக் கலவரமாகவும்,[3][4][5] மதக் கலவரமாகவும் உருவாகின்றது.[6]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "காதல் நோயின் அறிகுறிகள் என்ன ?". மார்ச் 30, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காதலித்து ஏமாற்றிய மாணவர் - தற்கொலை செய்த மாணவி". மார்ச் 30, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "வேறு சாதிப் பெண்ணை காதலித்த 17 வயது சிறுவனை நிர்வாணமாக்கி ஊர்வலம்". மார்ச் 30, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "தர்மபுரியில் கலவர தினம் : 3 கிராமங்களில் மக்கள் கருப்பு கொடியேற்றம". 2015-10-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச் 30, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "இளவரசனின் நத்தம் காலனி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா... தர்மபுரியில் 144 தடை". மார்ச் 30, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. "parents-ostracize-from-native-due-the-help-lov". மார்ச் 30, 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்&oldid=3725411" இருந்து மீள்விக்கப்பட்டது