ஆசை (ஒலிப்பு) (want) என்பது தமக்கெது தேவையோ அதனைக் கொண்டு வருதற்கான உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும் ஏதாவது தேவைகள் கண்டிப்பாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கிறது.

உளவியலும் சமூகவியலும்

தொகு

ஒரு விஷயம் தேவை என்று எண்ணும் எண்ணமே ஆசைக்கு வித்தாகும் என உளவியல் மற்றும் சமூகவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொருளாதாரம்

தொகு

ஒருவர் தன்னோடிருக்கும் பொருள்களின் தன்மையும் தன்னிடம் உள்ள பணத்தின் அளவினையும் பொறுத்து தனது ஆசைகளை உருவாக்கிக் கொள்வார். ஆசைகள் அளவில்லாது இருப்பினும் தன்னிடம் உள்ள பொருளின் அளவிற்கு ஒரு வரைமுறை இருப்பதால் மக்கள் தாம் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அடைய இயலாது. எனினும் அவர்கள் வாழ்வில் நன்றாக வாழப் பல வகையான மாற்றுப் பொருட்களைத் தகுதியான ஆசையால் அடைவதியலும்.

ஆசையா தேவையா

தொகு

ஆசை மற்றும் தேவை என்ற சொற்களை மாற்றி மாற்றி உபயோகித்தாலும், இவை இரண்டிற்கும் மிகுதியான வேறுபாடுகள் உண்டு.

தேவை

தொகு

வணிக மொழியில் தேவைகள் என்பது ஒருவரின் அத்தியாவசியமான தேவை என்றும் இதற்கு உணவு, உடை, இருப்பிடம் என்பதனை எடுத்துக்காட்டாக சொல்வர்[1].

ஆசைகொண்ட பொருட்கள் அத்தியாவசியமானவையாக இல்லாவிடினும் நன்றாக வாழ உதவும் பொருட்கள் என்பர்.

இவ்வாறான பிரிவினை பற்றிய அறிவினை வைத்து எவ்வாறு சந்தையில் பொருட்களை விற்பதென்று ஆளுமை ஆய்வாளர்கள் முடிவெடுத்து வெற்றியும் அடைவர்.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை&oldid=3398222" இலிருந்து மீள்விக்கப்பட்டது