அன்பு
அன்பு (ⓘ) (Love) என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. பொதுவாக அன்பு வலுவாகவும், நேர்மறையான அனுபவமாகவும் இருக்கிறது. எளிமையான மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது. அன்பு என்ற சொல் குறிக்கும் பொருள்களின் எல்லைகளை விளக்க வேண்டுமெனில் இவ்எளிய எடுத்துக்காட்டை எண்ணி உணரலாம். ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒருசில பரிமாணங்களை உணரலாம். பொதுவாக அன்பு என்பது ஒரு வலுவான ஈர்ப்பு மற்றும் தனிப்பட்ட உறவுமுறை இணைப்பின் உணர்வைக் குறிக்கிறது [1].
மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. மேலும், மற்றொருவரின் நன்மைக்காக பரிபூரணமான அக்கறையும் தன்னலமற்ற விசுவாசம் கொண்ட ஒரு ஒழுக்கமான மனநிலையை அன்பு எனலாம் [2]. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம் [3].
பண்டைய கிரேக்க தத்துவவாதிகள் நான்கு விதமான அன்பை அடையாளம் கண்டனர்: அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia) காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) என்பனவாகும். இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் என நவீன எழுத்தாளர்கள் அன்பின் வகைகளை மேலும் வேறுபடுத்தி காட்டியுள்ளனர். மேற்கத்திய நாடுகள் அல்லாத பாரம்பரியத்தினரும் இந்த அன்பின் மாறுபாடுகள் அல்லது அறிகுறிகளை வேறுபடுத்தியுள்ளனர் [4][5]. கூடுதலாக அன்பு என்பது மதம் அல்லது ஆன்மீகம் சார்ந்த பொருளையும் உள்ளடக்கியுள்ளது. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட பொருளும் பயன்களும் சேர்ந்துள்ள உணர்வுகளின் சிக்கலான தன்மையால் அன்பு என்ற சொல்லை வரையறுப்பது மிகவும் கடினமானச் செயலாக உள்ளது.
இரு நபர்களுக்கிடையேயும் தனிமனித உறவு சார்ந்தும் அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் முக்கிய உதவியாளராகச் செயல்படுகிறது. மைய உளவியல் சார்ந்த முக்கியத்துவம் காரணமாக படைப்பு கலைகளிலும் அன்பு மிகவும் பொதுவான கருத்துக்களில் ஒன்றாகத் திகழ்கிறது [6].
மனிதர்கள் மனிதர்களுக்கு எதிராக ஈடுபடும் கெடுதல்களை மன்னித்து அவர்களை ஒன்றாக இணைக்கவும், இனங்களாக ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதை எளிதாக்கும் ஒரு செயல்பாடாகவும் அன்பை புரிந்துகொள்ளலாம்[7].
வரையறைகள்
தொகுஅன்பு என்ற சொல் வெவ்வேறு சூழல்களில் பல்வேறு ஆனால் தொடர்புடைய வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற்போல வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஆங்கிலத்தில் பல்வேறு வகையான சூழலிலும் கிரேக்க மொழியில் agape, eros என்ற சொற்களை உள்ளடக்கிய லவ் என்ற சொல் பயன்படுவது போல ஆங்கிலத்திலும் பயன்படுகிறது [8].அன்பை கருத்தில் கொள்ளும் கலாச்சார வேறுபாடுகள் அன்பு என்ற சொல்லுக்கு ஒரு உலகளாவிய வரையறையை உருவாக்குவதை தடுக்கின்றன [9].
அன்பின் இயல்பு அல்லது சாராம்சம் அடிக்கடி நிகழ்கின்ற விவாதத்திற்கு உட்பட்ட ஒரு தலைப்பு என்றாலும், அன்பு என்ற சொல்லின் வேறுபட்ட அம்சங்களை எவையெல்லாம் அன்பு அல்லாதவை (அதாவது அன்பின் எதிர் சொற்கள்) என்பதைக் கண்டறிவதன் மூலம் தெளிவுபடுத்தப்படுத்திக் கொள்ள முடியும். நேர்மறை உணர்வின் ஒரு பொது வெளிப்பாடாக அதாவது விருப்பத்தின் வலுவான வடிவமாக அன்பு கருதப்படுகிறது. குறைந்த பாலுணர்வும் அதிக உணர்வுப்பூர்வ நெருக்கமும் கொண்டதாக அன்பு வெறுப்பு அல்லது நடுநிலையான அக்கறையிலிருந்து வேறுபடுகின்றது. அன்பு பொதுவாக காமத்துடனும் வேறுபடுகிறது. ஒருவருக்கொருவர் காதலுடன் உறவு கொள்வதுபோன்ற அன்பு சில நேரங்களில் நட்புடன் வேறுபடுகிறது. என்றாலும் அன்பு பெரும்பாலும் ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள், நல்ல நண்பர்கள் என நட்பிலிருந்தும் வேறுபடுகிறது.
ஒட்டு மொத்தமாக அன்பைப் பற்றி கலந்தாலோசிக்கும்போது அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது எனலாம். இவ்வனுபவம் பெரும்பாலும் ஒரு நபருக்கான அல்லது ஒரு பொருளுக்கான பாதுகாப்பாக அல்லது அடையாளமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அன்பைப் புரிந்துகொள்வதில் குறுக்கு-கலாச்சார வேறுபாடுகளுடன் கூடுதலாக அன்பைக் குறித்த கருத்துக்களும் காலப்போக்கில் பெரிதும் மாறிவிட்டன. சில வரலாற்றாசிரியர்கள் மத்திய காலத்தின் போது அல்லது அதற்குப் பின்னர் ஐரோப்பாவிற்கான காதல் உணர்வின் நவீன கருத்தாக்கங்களைக் குறிப்பிடுகின்றனர், இருப்பினும் அதற்கு முந்தைய காலத்திலும் வாழ்க்கையுடன் காதல் இணைந்திருந்தது என்பதற்கு பழங்கால காதல் கவிதைகள் உரிய சான்றுகளாகும் [10].
தனிநபர் சாரா அன்பு
தொகுதங்களை பெரிதும் கவர்ந்த, பெரிதும் மதிக்கின்ற ஒரு பொருள், கொள்கை அல்லது குறிக்கோள் மீது அன்பு செலுத்துவதாகக் மக்களால் கூறமுடியும். உதாரணமாக, கருணை கொண்ட வெளிக்கள பனியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொழிலாளர்கள் காட்டும் அன்பு சில சமயங்களில் ஒருவருக்கொருவர் நேசிப்பதால் உருவானதாக இருக்கலாம். ஆனால் தனிமனித அன்பு என்பது, மாற்றுப்பிரச்சாரம், மற்றும் வலுவான மதப்பற்று அல்லது அரசியல் நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிறக்கலாம் [11].
மேலும் மக்கள் பொருள்கள், விலங்குகள், அல்லது நடவடிக்கைகள் போன்ற அவர்களுடன் பிணைந்துள்ள ஒன்றின் மீதும் அன்பு செலுத்துவதை அடையாளம் காணலாம்.
பாலியல் நாட்டத்தால் உண்டாகும் அதிகபட்ச ஈர்ப்பு பாலியல் நெறிபிறழ்வு எனப்படுகிறது. இது பொருட்கள், சூழ்நிலைகள் அல்லது தனிப்பட்டவர்கள் மீதான ஆர்வமிக்க பாலியல் தூண்டலின் அனுபவமாகும்.[12] பாலியல் நெறிபிறழ்வுக்கும் மாறான பாலியல் விருப்பத்திற்கும் இடையேயான வரையறுக்கப்பட்ட எல்லை பற்றி இதுவரை எவ்வித பொதுக்கருத்தும் இல்லை.[13][14] பொதுவாக மக்கள் வாழ்க்கையே அன்பு என்று குறிப்பிடுகின்றனர்.
தனிமனித காதல்
தொகுமனிதர்களிடையே தோன்றும் அன்பு நேசிப்பவர்களுடனான அன்பை குறிக்கிறது. இது ஒரு நபர் மீது கொண்டுள்ள எளிய விருப்பம் என்பதைத்தாண்டிய விட மிகவும் சக்திவாய்ந்த உணர்வு ஆகும். ஒருதலைக் காதல் என்பது திரும்பக்கிடைக்காத அன்பின் உணர்வுகளை குறிக்கிறது. இது காதல் தொடர்பான ஓர் உளவியல் கோளாறாகக் கருதப்படுகிறது. தனிமனித காதல் என்பது பெரும்பாலும் நெருக்கமான தனிமனித உறவுகளைக் குறிக்கிறது [11]. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் காதல் சோடிகள் போன்றவர்களுக்கிடையில் இத்தகைய அன்பு இருக்கலாம்.
உயிரியல் அடிப்படை
தொகுஉயிரியல் மாதிரிகளில் உருவாகும் அன்பு பாலூட்டிகளில் நிகழும் பசி அல்லது தாகம் போன்ற ஒருபாலினச் செயலாக கருதப்படுகிறது [15]. காதல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு முன்னணி நிபுணரான எலன் பிசர் அன்பின் அனுபவத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கின்ற நிலைகளைக் குறிப்பிடுகின்றார். அவை காமம், ஈர்ப்பு மற்றும் இணைப்பு என்பவையாகும். காமம் என்பது பாலியல் ஆசையால் தோன்றும் உணர்வு ஆகும்.
ஈர்ப்பு என்பது இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் கவர்ச்சியைக் குறிக்கிறது. இதைத் தொடர்ந்து நேரத்தையும் காலத்தையும் செலவழித்து ஈர்ப்பை தொடர்ந்து காப்பாற்றுவது தீர்மானிக்கப்படுகிறது. இணைப்பு என்பது ஒரு வீட்டின் மீது கொண்டுள்ள அன்பு, பெற்றோரின் கடமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வது ஆகியனவற்றைக் குறிக்கிறது [16]. நரம்பியக்கடத்திகள், மூன்று நடத்தை முறைகள், மூன்று தனிப்பட்ட நரம்பியல் சுற்றுகள் போன்றவை இத்தகைய மூன்று வகையான அன்பு தொடர்பு பனிகளோடு இணைந்துள்ளன [16].
காமம் என்பது பாலியலின் ஆரம்ப உணர்ச்சியினால் ஏற்படும் ஆசையாகும். இது இனச்சேர்க்கையை ஊக்குவிக்கிறது. டெசுடோசிடிரோன் மற்றும் ஈசுட்ரோசென் போன்ற இரசாயனங்களின் அதிகரித்த வெளியீட்டை உள்ளடக்கியுள்ளது. இந்த விளைவுகள் சில வாரங்கள் அல்லது மாதங்கள் மட்டுமே நீடிக்கும். ஈர்ப்பு ஒரு குறிப்பிட்ட நபரின் தனித்துவம் மற்றும் காதல் உணர்வு போன்ற ஆசைகளால் உண்டாகிறது. இதனால் ஒரு தனிப்பட்ட துணையை நாடும் அர்ப்பணிப்பும் காமமும் தோன்றுகின்றன. மக்கள் காதலில் விழுகையில், மூளை தொடர்ச்சியாக சில வேதிப்பொருட்களை வெளியிடுவதாக சமீபத்திய நரம்பியல் விஞ்ஞானத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயக்குநீர்கள், டோபமைன், நோர்பைன்ப்ரைன் மற்றும் செரோடோனின் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இரசாயனங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இதய துடிப்பு அதிகரிப்பு, பசியின்மை மற்றும் தூக்கம் இழப்பு, மற்றும் உற்சாகமின்மை போன்ற பக்க விளைவுகளுக்கும் இதே வேதிப்பொருட்கள் காரணமாகின்றன.
இந்நிலை பொதுவாக ஒன்றரை முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன [17].
மேற்கோள்கள்
தொகு- ↑ Oxford Illustrated American Dictionary (1998) + Merriam-Webster Collegiate Dictionary (2000)
- ↑ "Love - Definition of love by Merriam-Webster". merriam-webster.com.
- ↑ Fromm, Erich; The Art of Loving, Harper Perennial (1956), Original English Version, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-095828-2
- ↑ Liddell and Scott: φιλία
- ↑ Mascaró, Juan (2003). The Bhagavad Gita. Penguin Classics. Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-044918-3. (J. Mascaró, translator)
- ↑ "Article On Love". Archived from the original on 30 May 2012. பார்க்கப்பட்ட நாள் 13 September 2011.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Helen Fisher. Why We Love: the nature and chemistry of romantic love. 2004.
- ↑ Anders Nygren, Agape and Eros.
- ↑ Kay, Paul; Kempton, Willett (March 1984). "What is the Sapir–Whorf Hypothesis?". American Anthropologist. New Series 86 (1): 65–79. doi:10.1525/aa.1984.86.1.02a00050. https://archive.org/details/sim_american-anthropologist_1984-03_86_1/page/65.
- ↑ "Ancient Love Poetry". Archived from the original on 30 September 2007.
- ↑ 11.0 11.1 Fromm, Erich; The Art of Loving, Harper Perennial (5 September 2000), Original English Version, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-095828-2
- ↑ American Psychiatric Association (சூன் 2000). Diagnostic and Statistical Manual of Mental Disorders-IV (Text Revision). Arlington, VA, USA: American Psychiatric Publishing, Inc. pp. 566–76. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1176/appi.books.9780890423349. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89042-024-9.
- ↑ Joyal, Christian C. (2014-06-20). "How Anomalous Are Paraphilic Interests?". Archives of Sexual Behavior 43 (7): 1241–1243. doi:10.1007/s10508-014-0325-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-0002. http://link.springer.com/article/10.1007/s10508-014-0325-z.
- ↑ The Journal of Sexual Medicine - Volume 12, Issue 2 - February 2015 - Wiley Online Library. doi:10.1111/jsm.2015.12.issue-2/issuetoc. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/jsm.2015.12.issue-2/issuetoc.
- ↑ Lewis, Thomas; Amini, F.; Lannon, R. (2000). A General Theory of Love. Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-375-70922-3.
- ↑ 16.0 16.1
"Archived copy" (PDF). Archived from the original (PDF) on 28 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Defining the Brain Systems of Lust, Romantic Attraction, and Attachment by Fisher et. al - ↑ Winston, Robert (2004). Human. Smithsonian Institution. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-093780-9.
ஆதாரங்கள்
தொகு- Chadwick, Henry (1998). Saint Augustine Confessions. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-283372-3.
- Fisher, Helen. Why We Love: the Nature and Chemistry of Romantic Love. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8050-6913-5.
- Giles, James (1994). "A theory of love and sexual desire". Journal for the Theory of Social Behaviour 24 (4): 339–357. doi:10.1111/j.1468-5914.1994.tb00259.x. https://archive.org/details/sim_journal-for-the-theory-of-social-behaviour_1994-12_24_4/page/339.
- Kierkegaard, Søren (2009). Works of Love. New York City: Harper Perennial Modern Classics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-171327-9.
- Oord, Thomas Jay (2010). Defining Love: A Philosophical, Scientific, and Theological Engagement. Grand Rapids, MI: Brazos. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58743257-6.
- Singer, Irving (1966). The Nature of Love. Vol. (in three volumes) (v.1 reprinted and later volumes from The University of Chicago Press, 1984 ed.). Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-76094-4.
- Sternberg, R.J. (1986). "A triangular theory of love". Psychological Review 93 (2): 119–135. doi:10.1037/0033-295X.93.2.119. https://archive.org/details/sim_psychological-review_1986-04_93_2/page/119.
- Sternberg, R.J. (1987). "Liking versus loving: A comparative evaluation of theories". Psychological Bulletin 102 (3): 331–345. doi:10.1037/0033-2909.102.3.331. https://archive.org/details/sim_psychological-bulletin_1987-11_102_3/page/331.
- Tennov, Dorothy (1979). Love and Limerence: the Experience of Being in Love. New York: Stein and Day. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8128-6134-5.
- Wood Samuel E., Ellen Wood and Denise Boyd (2005). The World of Psychology (5th ed.). Pearson Education. pp. 402–403. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-205-35868-3.
மேலும் படிக்க
தொகு- Bayer, A, ed. (2008). Art and love in Renaissance Italy. New York: The Metropolitan Museum of Art.
புற இணைப்புகள்
தொகு விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Friendship குர்லியில்
- Philanthropy குர்லியில்
- Romance குர்லியில்