காதல் திருமணம்

காதல் திருமணம் என்பது காதலித்தவர்கள் செய்து கொள்ளும் திருமணமாகும். சங்க இலக்கியக் குறிப்பின்படி உடன்போக்கு எனப்படுகிறது. இருவரும், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ளுதல், பாசம், அன்பு, அரவணைப்பு முதலியவற்றை பகிர்ந்துகொள்ளும் காதல் செய்து பிறகு திருமணம் செய்துகொள்கிறார்கள்.

உடன் போக்கு தொகு

தலைவனும், தலைவியும் பலகாலம் களவொழுக்கத்திலே ஈடுபடுகின்றனர். தலைவனுக்கு தமது பெண்ணைக்கொடுக்க விரும்பாத பெற்றோர் தலைவியைக் கண்டிக்கின்றனர். இவ்வாறான சூழலில் காதல் வயப்பட்ட தலைவி, தலைவனின் இடம் தேடி அவனோடு இணைதல் உடன்போக்கு எனப்படும். மேலும் சங்க இலக்கியங்கள் இதைப்பற்றி இரவுக்குறி, பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி இடையீடு, உடன்போக்கு என முறைமைப்படுத்துகின்றன.[1]

கலாச்சாரம் தொகு

இது மேற்கத்திய நாடுகளில் பரவலாக நடைபெறும், தற்போது தமிழகத்திலும் நடைபெறுகிறது.[2] காதல் திருமணங்கள் பெற்றோரின் சம்மதத்தின்பேரிலும் நடைபெறுகின்றன; பெற்றோரின் எதிர்ப்பை மீறியும் நடக்கின்றன. நாடு, பண்பாடு, குமுகப் பழக்கவழக்கங்கள் பொறுத்து சம்மதமும் எதிர்ப்பும் வேறுபடுகின்றன.

சங்க இலக்கியம் தொகு

சங்க இலக்கியங்களில் காதலுக்கு என்று தனி இடம் இருந்தது.[3]

  • நற்றிணை
  • புறநானூறு
  • அகநானூற்றில்-285வது பாடல், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், பாலை நிலத்துத் தலைவன் கூற்று.
  • கலித்தொகையின் 9ஆம் பாடல் உடன்போக்கு பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.[4]

சமீப காதல் தொகு

திருமணத்திற்கு முன் கூடி வாழ்வதையும் ("Living together"), குடும்பம், அல்ல குழந்தைகளுடன் இருப்பதும் சகஜம்.

இவற்றையும் பார்க்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "உடன்போக்கு". பார்க்கப்பட்ட நாள் 20 மே 2014.
  2. காதல் திருமண ஜோடி போலீசில் புகார் மனு தினமலர், பார்த்த நாள், 03, ஏப்ரல், 2012.
  3. திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் - இன்பத்துப்பால் பிரிவு
  4. "கலித்தொகை - உடன்போக்குக் குறிப்பு". பார்க்கப்பட்ட நாள் 20 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_திருமணம்&oldid=3755023" இலிருந்து மீள்விக்கப்பட்டது