பாசம்
பாசம் என்பது (Affection or fondness) என்பது "அரிதான ஒருவரின் அல்லது ஒரு பொருளின் பால் மனதாலும் உடலாலும் கொண்ட பற்று"[1] என்று கூறலாம். இது மனக்கிளர்ச்சி, வியாதி, செல்வாக்கு, வாழ்தல் என பல மனவியல் சார்ந்த துறைகளில் ஆய்வுகளை நடத்த வித்திட்டுள்ளது.[2]
எடுத்துக்காட்டுகள்
தொகு- தாய் தன் பிள்ளைகளின் மீது காட்டும் பாசம்
- தந்தை தன் பிள்ளைகளின் மீது காட்டும் பாசம்
- மக்கள் தம் பெற்றோரிடம் காட்டும் பாசம்
- சகோதர சகோதரி பாசம்
- உறவினர் பாசம்
- விலங்குகளின் பாசம்
- விலங்குகளிடத்து பாசமாயிருத்தல்
- இயற்கை மீதான பாசம்
என பல வகைகளில் தாமறியாமலே பாசத்தினை மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.
பலமான உணர்வு
தொகுபாசம் என்பது எதனையும் மற்றவரிடமிருந்து எதிர்பார்க்காது காட்டும் பேரன்பாகும். எனவே, சில மனவியல் வல்லுநர்கள், இது பற்று, நட்பு, காதல் போன்ற விட அதிக சக்தி வாய்ந்ததென்று பொருந்தியும் காதலினும் சிறிது குறைத்தும் கூறுவர்.[3]
செயல்பாடுகள்
தொகுதன் பாசத்தினை[4] வெளிபடுத்த பின்வரும் பலவகையான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
- கட்டித்தழுவல்
- ஆரத்தழுவல்
- உச்சி நுகர்தல்
- முத்தமளித்தல்
- தட்டிக் கொடுத்தல்
- பாராட்டுதல்
- பல செயல்களை செய்தல் (எ-டு: குழந்தைகட்கு தாலாட்டு பாடுதல்)
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ affection - Definitions from Dictionary.com
- ↑ 17th and 18th Century Theories of Emotions > Francis Hutcheson on the Emotions (Stanford Encyclopedia of Philosophy)
- ↑ 17th and 18th Century Theories of Emotions > Francis Hutcheson on the Emotions (Stanford Encyclopedia of Philosophy)
- ↑ according to Communication professor Kory Floyd of Arizona State University