சத்யராஜ்
சத்யராஜ் சுப்பையன் (Sathyaraj, பிறப்பு: 3 அக்டோபர் 1954) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார்.
சத்யராஜ் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 3, 1954 கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் |
துணைவர் | மகேஸ்வரி |
பிள்ளைகள் | திவ்யா, சிபிராஜ் |
வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார்.[1]
எம்.ஜி.ஆர் பித்தன்
தொகுரங்கராஜ் என்ற இயற்பெயர் கொண்ட சத்யராஜ் என்று எம். ஜி. ஆர் 1967 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டினால் தமிழக மக்களிடையே ஏற்பட்ட அனுதாப அலையால் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் அன்றைய திமுக தலைவரும் முதல்வருமான அறிஞர் அண்ணா திமுகவின் பிரச்சார பீரங்கி என்றும் பிரச்சார ராஜா என்றும் பெயர் இட்டார். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு திரையுலகில் வெற்றி நடை போட்ட அரசக்கட்டளை திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தனது தாயார் சத்யபாமா அவர்களின் பெயரையும் அண்ணா அவர்கள் அன்புடன் அழைத்த பிரச்சார ராஜா என்று பெயரை சேர்த்து அந்த நிறுவனத்திற்க்கு சத்யராஜா என்று பெயர் இட்டார். அதை இரசிகராக கருத்தில் கொண்டு சத்யராஜ் என்று தனது பெயரை திரையுலகில் வைத்து கொண்டார்.
1987இல் சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரைப் பத்திரிகை வைத்து அழைத்தனர். அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடனும், அமைச்சர் முத்துசாமியுடனும் சென்றார். அதன்பின் திருமணத்திற்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தனது ஞாபகமாக தான் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையைப் பரிசாகக் கேட்டு வாங்கிக் கொண்டார் சத்யராஜ்.[சான்று தேவை]
பெரியார் திரைப்படம்
தொகுசத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காகப் பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக மணியம்மை வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழுணர்வு
தொகுபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். இதில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
தொகு- வேதம் புதிது
- வால்டர் வெற்றிவேல்
- மலபார் போலீஸ்
- பெரியார்
- ஒன்பது ரூபாய் நோட்டு
- குங்குமப்பொட்டுக் கவுண்டர்
- இங்கிலிஸ்காரன்
- சுயேட்சை எம்.எல்.ஏ
- வில்லாதி வில்லன்
- ஏற்போட்
- நண்பன்
- நூறாவது நாள்
- பூவிழி வாசலிலே
- அண்ணாநகர் முதல் தெரு
- சின்னதம்பி பெரியதம்பி
- ஜல்லிக்கட்டு
- அமைதிப்படை
- நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ
- கடலோரக் கவிதைகள்
- ரிக்சா மாமா
நடித்த திரைப்படங்கள்
தொகு1970 களில்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1978 | சட்டம் என் கையில் | விக்கி | கமல்ஹாசன் நடித்த திரைப்படம் |
கண்ணன் ஒரு கைக்குழந்தை | |||
1979 | ஏணிப்படிகள் | பி. என். மாதவன் | |
முதல் இரவு |
1980 களில்
தொகு1990 களில்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1990 | உலகம் பிறந்தது எனக்காக | குவாட்டர், கோவிந்தன் ராஜா |
|
வாழ்க்கைச் சக்கரம் | தங்கவேலு | ||
மல்லுவேட்டி மைனர் | ராசப்ப கவுண்டர், மாரப்ப கவுண்டர் |
||
வேலை கிடைச்சுடுச்சு | |||
நடிகன் | ராஜா/தேவராஜ் | ||
மதுரை வீரன் எங்க சாமி | |||
1991 | புது மனிதன் | கபாலி | |
பிரம்மா | ரவி வர்மன் | ||
1992 | திருமதி பழனிச்சாமி | பழனிச்சாமி | |
தெற்கு தெரு மச்சான் | சுப்ரமணி | ||
பங்காளி | சக்திவேல்/துரை | ||
மகுடம் | முத்துவேல் | ||
ரிக்சா மாமா | |||
1993 | உடன் பிறப்பு | சத்யா | |
ஏர்போர்ட் | கேப்டன் அர்ஜுன் | ||
கட்டளை | |||
வால்டர் வெற்றிவேல் | வெற்றிவேல் | ||
1994 | அமைதிப்படை | தங்கவேலு , நாகராஜ சோழன் (அமாவாசை) |
|
வீரப்பதக்கம் | |||
வண்டிச்சோலை சின்ராசு | சின்ராசு | ||
தோழர் பாண்டியன் | |||
தாய் மாமன் | ராசப்பன் | ||
1995 | எங்கிருந்தோ வந்தான் | ||
வில்லாதி வில்லன் | எடிசன்/பூவு/ வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் |
இயக்குநராகவும் | |
மாமன் மகள் | |||
1996 | சேனாதிபதி | சேனாதிபதி, சேதுபதி |
|
சிவசக்தி | சிவா | ||
1997 | பெரிய மனுஷன் | ராமகிருஷ்ணன், சுப்பிரமணி |
|
பகைவன் | வாசு | ||
வள்ளல் | துரைராசு | ||
1998 | கல்யாண கலாட்டா | ஜீவா | |
1999 | மலபார் போலீஸ் | சின்னசாமி, ராமசாமி |
|
பொண்ணு வீட்டுக்காரன் | ஜீவா | ||
அழகர்சாமி | அழகர்சாமி | ||
சுயம்வரம் | அருணாச்சலம் |
2000 களில்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2000 | என்னம்மா கண்ணு | காசி | |
புரட்சிக்காரன் | அண்ணா | ||
வீரநடை | பெரிய கருப்பன் | ||
உன்னைக் கண் தேடுதே | விச்சு | ||
2001 | லூட்டி | ராசப்பா | |
அசத்தல் | வெற்றி | ||
குங்குமப்பொட்டுக் கவுண்டர் | குங்குமப் பொட்டு கவுண்டர், கந்தசாமி |
||
ஆண்டான் அடிமை | சிவராமன் | ||
2002 | விவரமான ஆளு | மயில்சாமி | |
மாறன் | மாறன் | ||
2003 | ராமச்சந்திரா | ராமச்சந்திரா | |
மிலிட்டரி | 'மிலிட்டரி' மாதவன் | ||
சேனா | சேனா | ||
ஆளுக்கொரு ஆசை | அறிவழகன் | ||
2004 | அடிதடி | திருப்பதி | |
ஜோர் | சபாபதி | ||
செம ரகளை | |||
சவுண்ட் பார்ட்டி | குமரேசன் | ||
அழகேசன் | அழகேசன் | ||
மகா நடிகன் | சத்யா | ||
2005 | ஐயர் ஐ. பி. எஸ் | கோபால் ஐயர், வெங்கடாசலபதி |
|
மண்ணின் மைந்தன் | பிரதாப் | சிறப்புத் தோற்றம் | |
6'2 | ஜேம்ஸ்/பாலமுருகன் | ||
இங்கிலீஷ்காரன் | தமிழரசு | ||
வெற்றிவேல் சக்திவேல் | வெற்றிவேல் | ||
வணக்கம் தலைவா | மாணிக்கம் | ||
2006 | கோவை பிரதர்ஸ் | கணேஷ் | |
சுயேட்சை எம். எல். ஏ. | நம்பிராஜன் | ||
குருஷேத்திரம் | பரத் | ||
2007 | அடாவடி | பரத் | |
பெரியார் | பெரியார் | பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) | |
கண்ணாமூச்சி ஏனடா | ஆறுமுகம் கவுண்டர் | ||
ஒன்பது ரூபாய் நோட்டு | மாதவ படையாச்சி | வெற்றி, விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) | |
2008 | தங்கம் | தங்கம் | |
வம்புச்சண்டை | ஜீவானந்தம் | ||
2009 | சங்கம் | சிவய்யா | தெலுங்குத் திரைப்படம் |
2010 களில்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2010 | அகத்தன் | கரீந்திர வர்மா | மலையாளத் திரைப்படம் |
குரு சிஷ்யன் | குரு | ||
பொள்ளாச்சி மாப்பிள்ளை | சிங்கலப்பா | ||
இரண்டு முகம் | சர்வேஸ்வரன் | ||
கௌரவர்கள் | தொண்டைமான் | ||
2011 | சட்டப்படி குற்றம் | சுபாஷ் சந்திர போஸ் | |
வெங்காயம் | அவராகவே | சிறப்புத் தோற்றம் | |
ஆயிரம் விளக்கு | லிங்கம் | ||
உச்சிதனை முகர்ந்தால் | நடேசன் | ||
2012 | நண்பன் | விருமாண்டி சந்தானம் (வைரஸ்) | வெற்றி, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் வெற்றி, சிறந்த துணை நடிகருக்கான SIMA விருது வெற்றி, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்) |
2013 | மிர்ச்சி | தேவா | தெலுங்குத் திரைப்படம் |
நாகராஜ சோழன் எம். ஏ., எம். எல். ஏ | நாகராஜ சோழன் (அமாவாசை ) | 200 ஆவது திரைப்படம் | |
சென்னை எக்ஸ்பிரஸ் | துர்கேஸ்வர அழகுசுந்தரம் | இந்தி திரைப்படம் | |
தலைவா | ராமதுரை | ||
வருத்தப்படாத வாலிபர் சங்கம் | சிவனாண்டி | ||
ராஜா ராணி | ஜேம்ஸ் | வெற்றி, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் பரிந்துரை—விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்) | |
2014 | கலவரம் | வெற்றிச் செல்வன் | |
சிகரம் தொடு | செல்லப் பாண்டியன் | ||
பூஜை | சிவக்கொழுந்து | ||
இசை | |||
ஏழு கடல் தாண்டி | படப்பிடிப்பில் | ||
2015 | லைலா ஓ லைலா | சாகீத் காதர் | மலையாளத் திரைப்படம் |
பாகுபலி | |||
ஒரு நாள் இரவில் | சேகர் | ||
2016 | நேனு சைலஜா | ||
கெத்து | துளசி ராமன் | ||
பிரம்மோத்சவம் | |||
ஜாக்சன் துரை | துரை | ||
ஹைப்பர் | நாராயண மூர்த்தி | ||
2017 | மொட்ட சிவா கெட்ட சிவா | கிருபாகரன் | |
பாகுபலி 2 | கட்டப்பா | ||
மெர்சல் | ரத்னவேல் | ||
களவாடிய பொழுதுகள் | பெரியார் | ||
2018 | கடைக்குட்டி சிங்கம் | ||
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் | நடராஜ் | ||
நோட்டா | மகேந்திரன் | ||
கனா | முருகேசன் | ||
பார்ட்டி | கர்ணன் | ||
2019 | ஜர்சி | ||
பிரதி ரோஜு பண்டகே | |||
தம்பி | ஞானமூர்த்தி |
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2021 | துக்ளக் தர்பார் | முதலமைச்சர் "நாகராஜ சோழன்" (அமாவாசை) | தமிழ் | விருந்தினர் தோற்றம் |
எம்.ஜி.ஆர் மகன் | எம். ஜி. ராமசாமி | தமிழ் | ||
தீர்ப்புகள் விற்கப்படும் | நலன்குமார் | தமிழ் | ||
2022 | 1945 | இராமலிங்கையா | தெலுங்கு | |
எதற்கும் துணிந்தவன் | ஆதிராயர் | தமிழ் | ||
ராதே ஷியாம் | பரமஹம்ச | தெலுங்கு, இந்தி | ||
வீட்ல விசேஷம் | தமிழ் | தயாரிப்பில் | ||
பக்கா கமர்சியல் | தெலுங்கு | படப்பிடிப்பில் | ||
TBA | பிரின்ஸ் | TBA | தமிழ், தெலுங்கு | படப்பிடிப்பில்[2] |
இயக்கிய திரைப்படங்கள்
தொகு- வில்லாதி வில்லன் (1995)9
தயாரித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | லீ | சிபிராஜ் | |
2014 | நாய்கள் ஜாக்கிரதை | சிபிராஜ் | |
2017 | சத்யா | சிபிராஜ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "லீ திரைப்பட விமர்சனம்".
- ↑ "Sivakarthikeyan's film with Anudeep is titled 'Prince' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-15.