மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மனதில் உறுதி வேண்டும் (Manathil Urudhi Vendum) 1987-இல் கே. பாலசந்தரின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் நூறு நாட்கள் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்திக்கும் ஒரு செவிலியரின் கதை. குடும்பத்தில் ஓடிப்போகும் சகோதரி, சகோதரன் மரணம், கணவனின் விவாகரத்து என பல போராட்டங்களை ஒரு சேர சந்திக்கும் பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இப்படத்தின் கதை.[1] இத்திரைப்படத்தில் சுஹாசினி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீதர், விவேக், லலிதா குமாரி, சித்திரா, சந்திரகாந்த், யமுனா ஆகியோர் நடித்திருந்தனர். ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோர் விருந்தினர்களாக ஒரு பாடல் காட்சியில் நடித்தனர். இத்திரைப்படம் 1987 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்டது.

மனதில் உறுதி வேண்டும்
Manathil Urudhi Vendum
இயக்கம்கே. பாலசந்தர்
தயாரிப்புராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைகே. பாலசந்தர்
இசைஇளையராஜா
நடிப்புசுஹாசினி
ஸ்ரீதர்
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
ரமேஷ் அரவிந்த்
விவேக்
ஒளிப்பதிவுஆர். ரகுநாத ரெட்டி
படத்தொகுப்புகணேஷ்–குமார்
கலையகம்கவிதாலயா புரடக்ஷன்ஸ்
வெளியீடு21 அக்டோபர் 1987 (1987-10-21)
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நந்தினி என்ற கதாபாத்திரத்தில் சுஹாசினி நடித்த ஒரு செவிலியரின் கதையாகும். ஏழு உடன்பிறப்புகள், வேலையில்லாத பெற்றோர்கள் என அவரது மிகப்பெரிய குடும்பத்தில் ஒரே ஒரு வருமானம் ஈட்டுபவராக உள்ளார். விவாகரத்து, ஒரு சகோதரனை இழத்தல், ஓர் ஓடிப்போன சகோதரி, தோல்வியுற்ற இரண்டாவது காதல், உறுப்பு தானம் உள்ளிட்ட பல தடைகளை அவர் எதிர்கொள்கிறார். இவர் அவர்களைக் கண்ணியத்துடன் கையாளுகிறார்.

நடிகர்கள்

தொகு

இரசினிகாந்து, விசயகாந்து, சத்யராஜ் ஆகியோர் "வங்காளக் கடலே" என்ற பாடல் காட்சியில் நடித்திருந்தனர் .[3]

பாடல்கள்

தொகு
மனதில் உறுதி வேண்டும்
பாடல்கள்
வெளியீடு1987 (1987)
மொழிதமிழ்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மனதில் உறுதி வேண்டும்"  கே. ஜே. யேசுதாஸ் 4:19
2. "கண்ணின் மணியே"  கே. எஸ். சித்ரா 4:49
3. "கண்ணா வருவாயா"  கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா 5:33
4. "ஆச்சி ஆச்சி"  மனோ, கே. எஸ். சித்ரா 3:06
5. "சங்கத்தமிழ் கவியே"  கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா 4:31
6. "வங்காள கடலே"  கே. ஜே. யேசுதாஸ் 2:52

மேற்கோள்கள்

தொகு
  1. "மகளிர் தினம் ஸ்பெஷல்: பெண்மையைப் போற்றும் படங்கள் ஒரு பார்வை!". zeenews.india. Retrieved 18 November 2019.
  2. Menon, Vishal (17 April 2021). "Actor Vivekh, Best Friend To Millions, Passes Away". அனுபமா சோப்ரா. Archived from the original on 17 April 2021. Retrieved 17 April 2021.
  3. "தீபாவளி ரிலீஸ்!" [Diwali release!]. குங்குமம். 25 October 2019. Archived from the original on 12 July 2021. Retrieved 20 October 2021.

வெளி இணைப்புகள்

தொகு