மனோ (தெலுங்கு: మనో) (பிறப்பு அக்டோபர் 26, 1965) தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடிவரும் ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளார். தமது திரைவாழ்வை நடிகராகத் துவங்கி பின்னர் பின்னணிப் பாடகராக புகழ்பெற்றார். சின்னத் தம்பி என்ற படத்தில் "தூளியிலே" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்றார்.

மனோ
Playback singer Mano.JPG
மனோ
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்நாகூர் பாபு
பிறப்புஅக்டோபர் 26, 1965 (1965-10-26) (அகவை 55)
விஜயவாடா, இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை, கருநாடக இசை
தொழில்(கள்)பாடகர், நடிகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1985–நடப்பு நடிகராக-(1979-நடப்பு)

இளமை வாழ்வும் திரைவாழ்வும்தொகு

 
மனோ

மனோ தெலுங்கு இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் நாகூர் பாபு ஆகும். இவரது பெயரை பிற்காலத்தில் மனோ என்று இளையராஜா மாற்றினார். தமது கருநாடக இசைப் பயிற்சியை பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார்.[1]

துவக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து 15 தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்[1]. 1984ஆம் ஆண்டு தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் தொடங்கினார். 1984ஆம் ஆண்டு கற்பூரதீபம் என்ற படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது[1]. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார். 1986ஆம் ஆண்டு இளையராஜா பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் "அண்ணே அண்ணே" என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் திருப்புமுனை தந்த "செண்பகமே", "மதுரை மரிக்கொழுந்து வாசம்" மற்றும் வேலைக்காரன் படத்தில் "வா வா கண்ணா வா", "வேலையில்லாதவன்" போன்ற பாடல்கள் மூலம் பரவலாக அறியப்படத் தொடங்கினார். சிங்கார வேலன் படத்தில் ஓர் வேடமேற்று நடித்துள்ளார்.

காதலன் படத்தில் "முக்காலா முக்காபலா", முத்து படத்தில் "தில்லானா தில்லானா" மற்றும் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் "அழகிய லைலா" போன்ற பாடல்கள் பெருவெற்றி பெற்றன.

நடித்த திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
1979 நீடா தெலுங்கு
1979 ரங்கூன் ரவுடி தெலுங்கு ராஜூ கதாபாத்திரம்
1992 சிங்கார வேலன் தமிழ் மனோவாக
2003 எனக்கு 20 உனக்கு 18 தமிழ்
2003 நீ மனசு நாக்கு தெலுசு தெலுங்கு
2014 வெற்றிச் செல்வன் தமிழ்
2015 சிவம் தெலுங்கு

பாடிய சில தமிழ் பாடல்கள்தொகு

திரைப்படம் பாடல் உடன் பாடியவர் இசையமைப்பாளர் வரிகள் குறிப்பு
பூவிழி வாசலிலே அண்ணே அண்ணே நீ இளையராஜா முதல் பாடல்
சொல்ல துடிக்குது மனசு தேன்மொழி ௭ந்தன் தேன்மொழி இளையராஜா
சின்ன தம்பி அட உச்சந்தல உச்சியிலே இளையராஜா வாலி
சின்ன தம்பி தூளியிலே ஆடவந்த இளையராஜா வாலி
காதலன் முக்காலா முக்காபுலா சுவர்ணலதா ஏ. ஆர். ரகுமான் வாலி
அமைதிப்படை சொல்லிவிடு வெள்ளி நிலவே சுவர்ணலதா இளையராஜா
உள்ளத்தை அள்ளித்தா அழகிய லைலா சிற்பி பழனிபாரதி
சின்ன கண்ணம்மா ௭ந்தன் வாழ்க்கையின் அர்த்தம் இளையராஜா

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோ&oldid=2922788" இருந்து மீள்விக்கப்பட்டது