அருணாச்சலம் (திரைப்படம்)
சுந்தர் சி. இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அருணாச்சலம் (Arunachalam) 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்,சௌந்தர்யா,ரம்பா,மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அருணாச்சலம் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | சுந்தர்.சி |
கதை | கிரேசி மோகன் (உரையாடல்) |
நடிப்பு | ரஜினிகாந்த், சௌந்தர்யா , ரம்பா , அம்பிகா , மனோரமா, விணுசக்கரவர்த்தி, ரகுவரன், பொன்னம்பலம், விசு, செந்தில், ஜெய்சங்கர் |
வெளியீடு | ஏப்ரல் 10, 1997 |
ஓட்டம் | 166 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அருணாச்சலம் திரைப்படம் சிறந்த திரைப்படம் உட்பட மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது. சூப்பர் சுப்பராயன் மற்றும் கோபி காந்த் ஆகியோர் முறையே சிறந்த சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் சிறந்த கலை இயக்குனருக்கான விருதுகளை வென்றனர்.[2] இத்திரைப்படம் பிருசுட்டரின் மில்லியன் என்னும் புதினத்தைத் தழுவி எடுத்தப்படமாகும்
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படம் தேவாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | அல்லி அல்லி அனார்கலி | மனோ, சுவர்ணலதா | பழனி பாரதி |
2 | அதான்டா இதான்டா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
3 | மாத்தாடு மாத்தாடு | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | பழனி பாரதி |
4 | நகுமோ | ஹரிஹரன், சித்ரா | வைரமுத்து |
5 | சிங்கம் ஒன்று | மலேசியா வாசுதேவன் | வைரமுத்து |
6 | தலை மகனே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | காளிதாசன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "26 years of 'Arunachalam': Khushbu Sundar writes a heartfelt note". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 April 2023 இம் மூலத்தில் இருந்து 17 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230417071219/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/26-years-of-arunachalam-khushbu-sundar-writes-a-heartfelt-note/articleshow/99382522.cms.
- ↑ "Awards Tamilnadu Government Cinema Awards For 1997 Announced: Best Film Award For "Arunachalam", "Surya Vamsam"". Dinakaran. 27 November 1998. Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.