மலேசியா வாசுதேவன்

தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்

மலேசியா வாசுதேவன் (Malaysia Vasudevan, 15 சூன் 1944 – 20 பெப்ரவரி 2011) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவர் 8000 இற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர்.

மலேசியா வாசுதேவன்
பிறப்புசாத்து ஆறுமுகம் நாயர்
(1944-06-15)15 சூன் 1944
ராஜகிரி எஸ்டேட், கோலா சிலாங்கர் மாவட்டம், சிலாங்கூர், மலேசியா
இறப்பு20 பெப்ரவரி 2011(2011-02-20) (அகவை 66)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்சாத்து ஆறுமுகம் நாயர்
பணிபின்னணிப் பாடகர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1944–2011
வாழ்க்கைத்
துணை
உஷா வாசுதேவன்
பிள்ளைகள்யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்.

மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.

குடும்பம்

தொகு

மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி (உஷா வாசுதேவன்) ௭ன்ற பெண்ணை 1976 சனவரி 26 அன்று திருமணம் செய்து கொண்டார். இவருக்கு யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மகன் தமிழ்த் திரைப் படங்களிலும் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பின்னணிப் பாடகராகவும் திகழ்கிறார். இவருடைய மகள் பிரசாந்தினி ஒரு பின்னணிப் பாடகியாவார். வாரணம் ஆயிரம், ஆடுகளம் போன்ற பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

பின்னணிப் பாடகராக

தொகு

ஜி. கே. வெங்கடேசு இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் பாடகராக அறிமுகமானார்.[1] பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." என்ற இவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.

அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.

நடிகராக

தொகு

இவர் ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். இவர் 85 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் "சிலந்தி வலை" உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை" என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதினார்.

இசையமைப்பாளராக

தொகு

மலேசியா வாசுதேவன் 1980களில் ஒரு சில தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக சாமந்தி பூ, பாக்கு வெத்தலை மற்றும் ஆயிரம் கைகள் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

விருதுகள்

தொகு

மறைவு

தொகு

சில ஆண்டுகளாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 பெப்ரவரி 20 அன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார்[2].

இவர் நடித்த திரைப்படங்கள்

தொகு

இவர் நடித்த சில திரைப்படங்கள் [3]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்குனர்
2007 பிறகு
2007 நினைத்து நினைத்துப் பார்த்தேன்
2007 அடாவடி
2006 கொக்கி
2003 நிலவில் கலங்கமில்லை
2003 கையோடு கை
2002 புன்னகை தேசம் ஷாஜகான்
2001 பத்ரி பி. ஏ. அருண் பிரசாது
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராஜீவ் மேனன்
1999 பூப்பறிக்க வருகிறோம்
1998 தினந்தோறும்
1996 கோபாலா கோபாலா பாண்டியராஜன்
1996 சும்மா இருங்க மச்சான் சும்மா இருங்க மச்சான்
1996 பூவே உனக்காக விக்ரமன்
1994 பாண்டியனின் ராஜ்ஜியத்தில்
1994 ஜல்லிக்கட்டுக்காளை
1994 அமைதிப்படை
1993 கருப்பு வெள்ளை
1993 திருடா திருடா காவல் அதிகாரி l மணிரத்னம்
1990 நீ சிரித்தால் தீபாவளி
1990 எங்கள் சாமி ஐயப்பன்
1989 தர்ம தேவன்
1989 அன்னக்கிளி சொன்ன கதை
1989 தென்றல் சுடும் மனோபாலா
1988 தெற்கத்திக்கள்ளன்
1988 தம்பி தங்கக் கம்பி
1988 ராசாவே உன்னெ நம்பி
1988 கதாநாயகன்
1988 பூந்தோட்ட காவல்காரன் செந்தில் நாதன்
1987 தீர்த்தக் கரையினிலே
1987 பரிசம் போட்டாச்சு
1987 ஊர்க்காவலன்
1987 ஜல்லிக்கட்டு
1987 இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
1987 பேர் சொல்லும் பிள்ளை எஸ். பி. முத்துராமன்
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு சந்தான பாரதி
1986 உன்னிடத்தில் நான்
1986 ஊமை விழிகள் ராஜா அரவிந்த்ராஜ்
1986 முதல் வசந்தம் மணிவண்ணன்
1985 கொலுசு
1985 ஒரு கைதியின் டைரி பாரதிராஜா
1984 ஆயிரம் கைகள்
1983 எத்தனை கோணம் எத்தனை பார்வை
1982 நிழல் சுடுவதில்லை
1982 இதோ வருகிறேன் இதோ வருகிறேன்
1981 பாக்கு வெத்தலை
1980 சாமந்திப் பூ
1979 வெள்ளி ரத்னம்
1978 நெஞ்சில் ஆடும் பூ ஒன்று l
1977 அவர் எனக்கே சொந்தம்

இசையமைத்த திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் மறைந்த தினம் - பிப்.20, 2011. மாலைமலர் இதழ். 18-Feb-2018. Archived from the original on 2021-04-12. பார்க்கப்பட்ட நாள் 2021-04-12. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "Noted singer Malaysia Vasudevan passes away". Mathrubhumi. 2011-02-20 இம் மூலத்தில் இருந்து 2011-02-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110223093301/http://www.mathrubhumi.com/english/story.php?id=105022. பார்த்த நாள்: 2011-02-20. 
  3. "Malaysia Vasudevan Filmography". Jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-13.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியா_வாசுதேவன்&oldid=4120514" இலிருந்து மீள்விக்கப்பட்டது