எங்கள் சாமி ஐயப்பன்

எங்கள் சாமி ஐயப்பன் (Engal Swamy Ayyappan) 1990 ஆம் ஆண்டு தசரதனின் இசை மற்றும் இயக்கத்தில், ரமணியின் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படமாகும்[1][2].

எங்கள் சாமி ஐயப்பன்
இயக்கம்தசரதன்
தயாரிப்புரமணி
கதைதசரதன்
இசைதசரதன்
நடிப்பு
ஒளிப்பதிவுசாரி - சகா
படத்தொகுப்புஆர். தேவராஜன்
கலையகம்தீபா ஹரி பிலிம்ஸ்
வெளியீடுதிசம்பர் 28, 1990 (1990-12-28)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

அய்யப்ப பக்தர் (தசரதன்) சொல்லும் ஐயப்பனைப் பற்றிய ஐந்து கதைகளின் தொகுப்பே திரைப்படம்.

முதல் கதை: ஐயப்ப பக்தரான ராஜசுவாமி (ஹரிராஜ்) தனக்கு வேலை கிடைத்தால் சபரிமலைக்கு வருவதாக ஐய்யப்பனிடம் வேண்டுகிறார். அவருக்கு வாகன ஓட்டுநராக வேலை கிடைக்கிறது. அவரது முதலாளி (மலேசியா வாசுதேவன்) ராஜசுவாமி ஏழை என்பதால் அவரை அடிக்கடி அவமானப்படுத்துகிறார். ராஜசுவாமியும் அவரது முதலாளியும் ஒரே நாளில் பூஜைக்கு ஏற்பாடு செய்கின்றனர். முதலாளி வீட்டுக்கு மாறுவேடத்தில் சிறுவனாக வரும் ஐயப்பனை விரட்டிவிடுகிறார். அங்கிருந்து ராஜசுவாமி வீட்டுக்குவரும் சிறுவனை வரவேற்று உபசரிகிறார் ராஜசுவாமி. ஐயப்பனின் மனம் மகிழ்ந்து ராஜசுவாமிக்கு அருள்புரிகிறார். அவரது முதலாளியை மன்னிக்கிறார்.

இரண்டாவது கதை: சுவாமி (ஆனந்த் பாபு) சபரிமலைக்கு செல்லும்வழியில் அவருடைய உடைமைகள் திருடுபோகிறது. ஐயப்பனை மனமுருகி வேண்ட அவரின் உடைமைகள் ஒரு யானையின் மூலம் திரும்பக் கிடைக்கிறது.

மூன்றாவது கதை: பாஸ்கரசுவாமி (திலீப்) ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலை அணிவதால் சைவ உணவுமுறையைப் பின்பற்றுகிறார். அவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் சரசு அசைவ உணவை சமைத்து பாஸ்கருக்கு இடையூறு தருகிறார். ஐயப்பன் சரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்கிறார். சரசு பாசகரிடம் மன்னிப்பு கேட்கிறாள்.

நான்காவது கதை: பிரசாந்த்சுவாமியின் மனைவி கௌரி (கோகிலா) மற்றும் மகள் சவும்யா. அவர் ஒரு கொலை வழக்கில் சாட்சி கூறி குற்றவாளியை சிறைக்கு அனுப்புகிறார். அவனால் பாதிக்கப்படும் குற்றவாளியின் நண்பர்கள் அவனது மகளைக் கடத்த திட்டமிடுகின்றனர். பிரசாந்த்சாமியின் கனவில்வந்து எச்சரிக்கும் ஐயப்பன் அவரையும் அவர் மகளையும் சபரிமலைக்கு வரச்சொல்கிறார். சபரிமலையில் தொலைந்துபோகும் சவும்யாவை சலீம் பாய் (நாகேஷ்) பத்திரமாக தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். சவும்யாவைத் தேடிவரும் எதிரிகள் அங்குவந்து சவும்யாவையும் சலீம்பாயின் பேரனையும் அடித்துவிடுகின்றனர். படுகாயமுற்ற இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்குவரும் ஒரு கிறித்தவர் குருதிக்கொடையளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.

ஐந்தாவது கதை: வாசுசுவாமி (பார்த்திபன்) சபரிமலைக்கு சென்று வீட்டுக்கு வருகிறார். அவருடைய தந்தை இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாசுவையும் அவன் தாயையும் வீட்டைவிட்டு விரட்டுகிறார். வீட்டை விட்டு வெளியேறிய வாசுவை ஒருநாள் காவல்துறை கைது செய்கிறது. அவனது அப்பாவைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஐயப்பன் அருளால் உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட வாசு விடுதலையாகிறான்.

நடிகர்கள்

தொகு

படத்தின் பாடல்களை எழுதி இசையமைத்தவர் தசரதன்.

வ.எண் பாடல் பாடகர்(கள்) காலநீளம்
1 ஆசையோட பூசை கே. ஜே. யேசுதாஸ் 5:13
2 எம்மதமும் சம்மதமும் கே. ஜே. யேசுதாஸ் 4:39
3 சங்கடம் போக்கிட எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:51
4 சுவாமியப்பா சரணம் மனோ 2:51
5 வாங்க வாங்க சுவாமிகளே பரந்தாமன் 4:20

மேற்கோள்கள்

தொகு
  1. "எங்கள் சாமி ஐயப்பன்". Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
  2. "எங்கள் சாமி ஐயப்பன்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கள்_சாமி_ஐயப்பன்&oldid=3711665" இலிருந்து மீள்விக்கப்பட்டது