பாரதிராஜா

'தாதாசாகிப் பால்கே விருது'க்குத் தகுதியானவர் என்று பரிந்துரைக்க வேண்டி, முக்கியமானவர்களால் முன்மொழியப்படுகிற, இந்தியாவின் தமிழ்நாட்டின் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்ற பன்முக நுண்ணறிவாளர்.

பாரதிராஜா (Bharathiraja, பிறப்பு: சூலை 17, 1941), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார்.

பாரதிராஜா
Director Bharathiraja at Salim Movie Audio Launch.jpg
2014 இல் சலீம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா
பிறப்புசின்னசாமி[1]
சூலை 17, 1941 (1941-07-17) (அகவை 79)[2]
அல்லி நகரம், தேனி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்.
செயற்பாட்டுக்
காலம்
1977 - இன்று வரை
பெற்றோர்பெரியமாயத்தேவர்,
மீனாட்சியம்மாள் (எ) கருத்தம்மாள் [3]
வாழ்க்கைத்
துணை
சந்திரலீலா
பிள்ளைகள்மனோஜ், ஜனனி
விருதுகள்பத்மசிறீ விருது (2004)

இவரது உதவியாளர்கள்

 1. பாக்யராஜ்
 2. மணிவண்ணன்
 3. மனோபாலா
 4. சித்ரா லெட்சுமணன்
 5. மனோஜ் குமார்
 6. பொன்வண்ணன்
 7. சீமான்
 8. லீனா மணிமேகலை

இயக்கிய திரைப்படங்கள்

தமிழில்

பிற

 • Jamadagni (1988)
 • Saveray Wali Gaadi (1986)
 • Ee Tharam Illalu (1985)
 • Yuvadharam Bilisindi (1985)
 • Seethakoka Chilaka (1981)
 • ரெட் ரோஸ் (1980)
 • Kotha Jeevithalu (1980)
 • Solva Sawan (1979)
 • Yerra Gulabi (1979)

எழுத்தாக்கம்

 • கண்களால் கைது செய் (2004)
 • கருத்தம்மா (1995)
 • நாடோடித் தென்றல்(1992) (திரைக்கதை)
 • Ek Hi Maqsad (1988) (கதை)
 • ஆராதனா (1987) (கதை)
 • முதல் மரியாதை(1985)
 • Seethakoka Chilaka (1981) (கதை)
 • டிக் டிக் டிக்(1981)
 • ரெட் ரோஸ்(1980) (திரைக்கதை) (கதை)
 • Padaharella Vayasu (1978) (கதை)

தயாரித்த திரைப்படங்கள்

நடித்த திரைப்படங்கள்

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிராஜா&oldid=3129657" இருந்து மீள்விக்கப்பட்டது