அலைகள் ஓய்வதில்லை

பாரதிராஜா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அலைகள் ஓய்வதில்லை (Alaigal Oivathillai) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அலைகள் ஓய்வதில்லை
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஆர். டி. பாஸ்கர்
பாவலர் கிரியேஷன்ஸ்
கதைமணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
ராதா
ஒளிப்பதிவுபி. கண்ணன்
வெளியீடுசூலை 18, 1981
நீளம்3993 மீட்டர்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை இளையராஜா இசையமைத்துள்ளார். வைரமுத்து "ஆயிரம் தாமரை", மற்றும் "விழியில் விழுந்து" பாடல்களை இயற்றினார். கங்கை அமரன் "புத்தம் புது காலை" மற்றும் "வாடி என் கப்பா கிழங்கே" பாடல்களை இயற்றினர். காதல் ஓவியம் பாடலை பஞ்சு அருணாசலம் இயற்றினார். மீதமுள்ள சிறிய பாடல்களை இளையராஜாவே இயற்றி இசையமைத்தார். படத்தின் பாடல்கள் இன்று வரை இளையராஜாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

"புத்தம் புது காலை" பாடல் மீண்டும் பதிவு செய்யப்பட்டது. மகேந்திரன் இயக்கத்தில் மருதாணி திரைப்படத்திற்கு உருவாவதாக இருந்தது. அந்த படம் தயாரிக்கப்படாததால், இந்த பாடல் அலைகள் ஓய்வதில்லை எல்பி பதிவுகளில் மட்டுமே உள்ளது. இப்பாடலை இளையராஜா மீண்டும் 2014 இல் மேகா திரைப்படத்தில் பயன்படுத்தினார்.[1][2]

# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "ஆயிரம் தாமரை"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:30
2. "தரிசனம் கிடைக்காதா" (பெண்)வைரமுத்துஎஸ். ஜானகி 1:12
3. "தரிசனம் கிடைக்காதா" (ஆண்)வைரமுத்துஇளையராஜா 1:50
4. "காதல் ஓவியம்" (பதிவு 1)பஞ்சு அருணாசலம்இளையராஜா, ஜென்சி அந்தோனி 4:38
5. "காதல் ஓவியம்" (பதிவு 2)பஞ்சு அருணாசலம்இளையராஜா, ஜென்சி அந்தோனி 1:51
6. "லம்போதரா"  இளையராஜாஎஸ். ஜானகி 0:53
7. "புத்தம் புது காலை"  கங்கை அமரன்எஸ். ஜானகி 4:34
8. "ச ரி க ம ப"  இளையராஜாகுருவாயூர் ராஜம், எஸ். ஜானகி 2:03
9. "தோத்திரம் பாடியே"  இளையராஜாஇளையராஜா, பி. ௭ஸ். சசிரேகா 0:47
10. "வாடி என் கப்பா கிழங்கே"  கங்கை அமரன்இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கரன், ஜென்சி அந்தோனி 4:45
11. "வாழ்வெல்லாம் ஆனந்தமே"  இளையராஜாஇளையராஜா, எஸ். ஜானகி 1:27
12. "விழியில் விழுந்து"  வைரமுத்துஇளையராஜா, பி. ௭ஸ். சசிரேகா 4:03

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைகள்_ஓய்வதில்லை&oldid=3794832" இருந்து மீள்விக்கப்பட்டது