பி. கண்ணன்
தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்
பி. கண்ணன் (B. Kannan, சனவரி 10, 1951 - சூன் 13, 2020) இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ், மலையாள மொழித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தவர். இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் தம்பியும் ஆவார். இவர், பிரபல தமிழ் இயக்குநர் பாரதிராஜா உடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1] 2001ஆவது ஆண்டில் வெளியான கடல் பூக்கள் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம் விருதினை வென்றுள்ளார்.[2]
பி. கண்ணன் | |
---|---|
பிறப்பு | பீம்சிங் கண்ணன் சனவரி 10, 1951 சென்னை, தமிழ்நாடு |
இறப்பு | சூன் 13, 2020 | (அகவை 69)
இருப்பிடம் | சென்னை, இந்தியா ![]() |
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1981–2020 |
உறவினர்கள் |
|
பெற்ற விருதுகள் தொகு
அலைகள் ஓய்வதில்லை (1981), கண்களால் கைது செய் (2004) ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை இருமுறை வென்றுள்ளார்.
பணியாற்றிய திரைப்படங்கள் தொகு
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1978 | ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் | தமிழ் | |
1980 | நிழல்கள் | தமிழ் | |
1981 | அலைகள் ஓய்வதில்லை | தமிழ் | வெற்றி:சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது |
1981 | டிக் டிக் டிக் | தமிழ் | |
1982 | காதல் ஓவியம் | தமிழ் | |
1982 | வாலிபமே வா வா | தமிழ் | |
1983 | மண்வாசனை | தமிழ் | |
1984 | புதுமைப் பெண் | தமிழ் | |
1985 | முதல் மரியாதை | தமிழ் | |
1985 | ஒரு கைதியின் டைரி | தமிழ் | |
1986 | கடலோரக் கவிதைகள் | தமிழ் | |
1987 | வேதம் புதிது | தமிழ் | |
1988 | கொடி பறக்குது | தமிழ் | |
1988 | சொல்லத் துடிக்குது மனசு | தமிழ் | |
1988 | சூரசம்ஹாரம் | தமிழ் | |
1990 | என் உயிர் தோழன் | தமிழ் | |
1991 | புது நெல்லு புது நாத்து | தமிழ் | |
1992 | நாடோடித் தென்றல் | தமிழ் | |
1993 | கேப்டன் மகள் | தமிழ் | |
1993 | கிழக்குச் சீமையிலே | தமிழ் | |
1994 | கருத்தம்மா | தமிழ் | |
1994 | பிரியங்கா | தமிழ் | |
1995 | பசும்பொன் | தமிழ் | |
1996 | சேனாதிபதி | தமிழ் | |
2001 | கடல் பூக்கள் | தமிழ் | |
2003 | லூட்டி | தமிழ் | |
2003 | கண்களால் கைது செய் | தமிழ் | வெற்றி: சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது |
2004 | விஷ்வ துளசி | தமிழ் | |
2005 | ஆயுள் ரேகை | தமிழ் | |
2008 | பொம்மலாட்டம் | தமிழ் | |
2011 | உளியின் ஓசை | தமிழ் | |
2011 | உச்சிதனை முகர்ந்தால் | தமிழ் |
மேற்கோள்கள் தொகு
- ↑ S. R., Ashok Kumar (16 July 2005). "Enjoyable tunes". The Hindu. Archived from the original on 28 ஆகஸ்ட் 2006. https://web.archive.org/web/20060828042404/http://www.hindu.com/mp/2005/07/16/stories/2005071601140400.htm. பார்த்த நாள்: 13 July 2013.
- ↑ Ahmed, Feroze (10 November 2002). "Winners, yes, but the race is on...". The Hindu. Archived from the original on 13 ஜூலை 2013. https://archive.today/20130713145321/http://www.hindu.com/thehindu/lf/2002/11/10/stories/2002111005800200.htm. பார்த்த நாள்: 13 July 2013.