கடலோரக் கவிதைகள்

பாரதிராஜாவின் இயக்கத்தில் 1986இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

கடலோரக் கவிதைகள் என்பது 1986ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கிய இத்திரைப்படத்தில், சத்யராஜ், ரேகா, ராஜா, ஜனகராஜ், கமலா காமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] மேலும் இத்திரைப்படம், சிரஞ்சீவி, சுஹாசினி நடிப்பில் ஆராதனா என தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது. கன்னடத்தில், பி. சி. பாட்டீல், பிரேமா ஆகியோரது நடிப்பில் கௌரவா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. இது, ரேகா, ராஜா, ரஞ்சனி ஆகிய மூவரும் நடித்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்.

கடலோரக் கவிதைகள்
இயக்கம்பாரதிராஜா [1]
தயாரிப்புவெ. வடுகநாதன்
சி. நடேசன்
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைபாரதிராஜா
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
ரேகா
ராஜா
ஜனகராஜ்
ரஞ்சனி
கமலா காமேஷ்
இளவரசு
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புடி. திருநாவுக்கரசு
கலையகம்மூகாம்பிகா ஆர்ட் கிரியேசன்சு
விநியோகம்மூகாம்பிகா ஆர்ட் கிரியேசன்சு
வெளியீடு5 சூலை 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்யராஜின் திரை வாழ்க்கையில் இத்திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது 200 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அடி ஆத்தாடி (சோகம்) மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வைரமுத்து 03:42
2 அடி ஆத்தாடி இளையராஜா, எஸ். ஜானகி 04:39
3 தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் இளையராஜா கங்கை அமரன் 03:00
4 கொடியிலே மல்லியப்பூ பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி வைரமுத்து 04:21
5 பொடிநடையா போறவரே சித்ரா கங்கை அமரன் 05:23
6 போகுதே போகுதே எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து 04:34

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Kadalora Kavithaigal, IMDb, retrieved 2008-10-27
  2. "Kadalora Kavithaigal Songs". raaga. http://www.raaga.com/channels/tamil/album/T0000069.html. பார்த்த நாள்: 2013-12-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலோரக்_கவிதைகள்&oldid=3712135" இருந்து மீள்விக்கப்பட்டது