ரேகா (தென்னிந்திய நடிகை)
ரேகா என்று அழைக்கப்படும் ஜோஸ்பின் 28 ஆகத்து 1970 என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார். பெரும்பாலும் தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் மலையாளத் திரைப்படத்துறையில் பரவலாக அறியப்படும் நடிகை ஆவார்.
ரேகா | |
---|---|
பிறப்பு | ஜோஸ்பின் ஆகத்து 28, 1970 ஆலப்புழா, கேரளா |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1986–1996 2002-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ஹாரிஸ் (1996 - தற்போது வரை) |
இவர் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், யே ஆட்டோ, சகரம் சாக்சி உள்ளிட்ட மலையாள வெற்றித் திரைப்படங்களிலும், புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட தமிழ் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] கேரளாவில் பிறந்த இவர் தமிழகத்தின் உதகையில் தனது படிப்பை முடித்தார்.[2] இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.[3] இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை தசரதன் திரைப்படத்திற்காக பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் கடலுணவு ஏற்றுமதியாளரை 1996ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.[4]
தொலைக்காட்சி
தொகுஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2006-2007 | கனா காணும் காலங்கள் | லட்சுமி | விஜய் தொலைக்காட்சி |
2019-2020 | குக்கு வித் கோமாளி | போட்டியாளர் | |
2020 | பிக் பாஸ் தமிழ் 4 | போட்டியாளர் |
நடித்த திரைப்படங்கள்
தொகுதமிழ்த் திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1986 | கடலோரக் கவிதைகள் | ஜெனீபர் | |
1986 | புன்னகை மன்னன் | ரஞ்சனி | |
1987 | செண்பகமே செண்பகமே | ||
1987 | உள்ளம் கவர்ந்த கள்வன் | ||
1987 | கதாநாயகன் | ||
1988 | என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு | மெர்சி | |
1988 | மேகம் கறுத்திருக்கு | ||
1988 | காவலன் அவன் கோவலன் | ||
1988 | எங்க ஊரு பாட்டுக்காரன் | காவேரி | |
1988 | ராசாவே உன்னெ நம்பி | ||
1988 | காலையும் நீயே மாலையும் நீயே | ||
1989 | பாட்டுக்கு நான் அடிமை | ||
1989 | வரவு நல்ல உறவு | ||
1989 | நினைவே ஒரு சங்கீதம் | ||
1989 | தம்பி தங்கக் கம்பி | ||
1989 | பிள்ளைக்காக | ||
1987 | வேடிக்கை என் வாடிக்கை | ||
1990 | மூடு மந்திரம் | ||
1990 | புரியாத புதிர் | ||
1991 | குணா | ரோசி | |
1991 | இரும்பு பூக்கள் | சிறப்புத் தோற்றம் | |
1991 | வைதேகி கல்யாணம் | வசந்தி | |
1992 | இதுதாண்டா சட்டம் | லட்சுமி | |
1992 | அண்ணாமலை | கீதா | |
1992 | டேவிட் அங்கிள் | மாலதி | |
1992 | திருமதி பழனிச்சாமி | சிறப்புத் தோற்றம் | |
1996 | காலம் மாறிப்போச்சு | லட்சுமி | |
2002 | ரோஜாக்கூட்டம் | பூமிகாவின் தாயார் (காவல் ஆய்வாளர்) | |
2003 | கோவில் | ஏஞ்சலின் தாயார் | |
2003 | வில்லன் | சிவாவின் தாயார் | |
2008 | தசாவதாரம் | மீனாட்சி | |
2010 | உத்தம புத்திரன் | மீனாட்சி | |
2013 | யா யா | வசந்தி | |
2013 | தலைவா | கங்கா ராமதுரை |
தெலுங்குத் திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2012 | மணி மணி மோர் மணி | கீதா மாதுரி |
பெற்ற விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.mangalam.com/cinema/interviews/146131
- ↑ "മീനുകുട്ടി വി ലവ് യൂ". manoramaonline.com. Archived from the original on 8 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kamal goes bald and will kiss onscreen". One India. 23 July 2007. Archived from the original on 9 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 11 May 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.