புரியாத புதிர்
புரியாத புதிர் 1990ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த இத்திரைப்படம் ஒரு திகில் திரைப்படமாகும். இப்படம் குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். 30 நாட்கள் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு செலவு வெறும் ₹ 29 லட்சம் ஆகும்.[1] இது 1973 ஆவது ஆண்டில் இந்தியில் வெளியான தன்ட் என்னும் திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் வித்தியாசமாக உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய முதல் திரைப்படமாகும்.
புரியாத புதிர் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | கே. எஸ். ரவிக்குமார் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | ரகுமான் ரகுவரன் சரத்குமார் ஆனந்த்பாபு ரேகா சித்தாரா |
ஒளிப்பதிவு | ஏ. ஹரிபாபு |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
கலையகம் | சூப்பர் குட் பிலிம்சு |
விநியோகம் | சூப்பர் குட் பிலிம்சு |
வெளியீடு | செப்டம்பர், 71990 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- ரகுமான்
- ரகுவரன்
- சரத்குமார்
- ஆனந்த்பாபு
- ரேகா
- சசித்தாரா
- சேரன் - (சிறப்புத் தோற்றம்)
மீளுருவாக்கம்தொகு
தமிழ் மொழியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படம் மலையாள மொழியிலும் மீளுருவாக்கம் செய்யப்பட்டது.