முதன்மை பட்டியைத் திறக்கவும்

இலட்சம்

(லட்சம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒரு இலட்சம் (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) (Lakh) என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமான ஒரு எண். நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு கோடியாகும், இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன.

இலட்சம் என்பதற்கு பதிலாக இலகாரம்[1] என்று எழுதுதல் தூய தமிழ் என்று கருதப்படுகிறது.

எடுத்துக்காட்டுதொகு

மேல் நாட்டு முறையில் பெரிய எண்களை எழுதும் போது ஆயிரம் ஆயிரமாகப் பிரித்துக் காட்டுவது வழக்கு. ஆயிரம் (1,000), மில்லியன் (1,000 x 1,000), பில்லியன் (1,000 x 1,000 x 1,000) என்றவாறு ஆயிரத்தின் மடங்குகளுக்கே தனிப் பெயர்களும் உள்ளன. ஆனால், இந்திய முறையில் ஆயிரம் (1,000), இலட்சம் (100 x 1,000), கோடி (100 x 100 x 1,000) ஆயிரத்தின் நூற்று மடங்குகளுக்கே தனிப்பெயர்கள் உள்ளன. இதனால், இந்திய முறையில் ஆயிரத்துக்குப் பின் நூறு நூறாகவே பிரித்துக் காட்டுவது வழக்கம்.

இந்திய முறை மேனாட்டு முறை
ஆயிரம் 1,000 ஆயிரம் 1,000
பத்தாயிரம் 10,000 பத்தாயிரம் 10,000
இலட்சம் 1,00,000 நூறாயிரம் 100,000
பத்து இலட்சம் 10,00,000 மில்லியன் 1,000,000
கோடி 1,00,00,000 பத்து மில்லியன் 10,000,000

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சம்&oldid=2740199" இருந்து மீள்விக்கப்பட்டது