இதுதாண்டா சட்டம்

செந்தில்நாதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இதுதாண்டா சட்டம் (Idhuthanda Sattam) திரைப்படம் 1992-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை செந்தில்நாதன் எழுதி, இயக்க, மைலை ஆர். வி. குருபாதம் தயாரித்தார். இத்திரைப்படத்தில் ஆர். சரத்குமார், ரேகா, ஆமனி, கவுண்டமணி, செந்தில், மன்சூர் அலி கான், வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சங்கீதா ராஜன் இசை அமைத்த இப்படம், 29 மே 1992 ஆம் தேதி வெளியானது.[1][2]

இதுதாண்டா சட்டம்
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புமைலை ஆர். வி. குருபாதம்
கதைசெந்தில்நாதன், (வசனம்: ஏ. வருணன்)
இசைசங்கீத ராஜன்
நடிப்புஆர். சரத்குமார்
ரேகா
ஆமனி
கவுண்டமணி
செந்தில்
மன்சூர் அலி கான்
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுஎம். கேசவன்
வெளியீடு29 மே 1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

கதைச்சுருக்கம்

தொகு

செல்வராஜ் (சரத்குமார்) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒரு புது ஊரில் எஸ்.பி. பொறுப்பை ஏற்று, தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு பெண் இன்ஸ்பெக்டர் அமுதா (ஆமனி) செல்வராஜிற்கு மிகவும் உதவியாக இருக்கிறாள். அந்நிலையில், தீமைக்கு பேர்போன குருசாமி (குருபாதம்), அவரது அடியாட்கள் காளி (மன்சூர் அலி கான்), தர்மா, சூரி ஆகியோரை கட்டாயமாகத் தண்டித்துக் காட்டுவதாக சவால் விடுகிறான் செல்வராஜ். செல்வராஜ் அமுதாவிடம் தன் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிக் கூறுகிறான்.

கடந்த காலத்தில், செல்வராஜ் தன் மனைவி லட்சுமி (ரேகா), குழந்தை, மாமனார் நீதிபதி வேணுகோபால் (வி. எஸ். ராகவன்) ஆகியோருடன் மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறான். தீபாவளி பண்டிகையின் போது, செல்வராஜ் குடும்பத்தினர் அனைவரும், ரவுடி குருசாமி செய்யும் கொலையை பார்த்து விடுகின்றனர். செய்த கொலைக்கு சாட்சி இருக்கக்கூடாது என்பதற்காக, செல்வராஜின் குடும்பத்தை கொலை செய்ய ஆள் அனுப்புகிறான் ரவுடி குருசாமி. அவ்வாறாக ஏற்படும் மோதலின் போது, செல்வராஜின் மனைவியும், மாமனாரும் கொல்லப்பட்டு, செல்வராஜும் அவனது குழந்தையும் அதிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். அதில் செல்வராஜ் படுகாயம் அடைகிறான். குருசாமிக்கு மரண தண்டை கிடைத்தாலும், அடியாட்களின் உதவியுடன் வழக்கிலிருந்து விடுதலை பெறுகிறான். இந்நிலையில், செல்வராஜ் குருசாமியையும் அவனது ஆட்களையும் எவ்வாறு சதி செய்து தண்டித்தான் என்பதே மீதிக் கதையாகும்.

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் சங்கீதா ராஜன் ஆவார். இப்படத்தின் பாடலாசிரியர்கள் பிறைசூடன் மற்றும் முத்துலிங்கம் ஆவர்.

வரிசை

எண்

பாடல் பாடியவர் நீளம்
1 அழகான பூந்தோட்டம் ஜெயச்சந்திரன், பி. சுசீலா 3:53
2 குருவிக் குஞ்சு கே.எஸ். சித்ரா 3:16
3 குருவிக் குஞ்சு பி. சுசீலா 3:36

விமர்சனம்

தொகு

"வசனங்கள் சிறப்பாக இருப்பதாகவும், இயக்கம் நன்றாக இருப்பதாகவும், இசை சராசரியாக இருப்பதாகவும், கட்டுக்கோப்பான உடலுடன் சரத்குமார் இருப்பதாகவும், சிறு வேடமாக இருந்தாலும் ரேகா நன்றாக நடித்திருப்பதாகவும்" விமர்சனம் செய்யப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "spicyonion.com".
  2. "www.cinesouth.com".[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்".

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதுதாண்டா_சட்டம்&oldid=4121814" இலிருந்து மீள்விக்கப்பட்டது