எங்க ஊரு பாட்டுக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன் (enga ooru paattukkaaran) 1987-இல் வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். கங்கை அமரன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராமராஜன், ரேகா, சாந்திபிரியா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களிலிலும் செந்தாமரை, வினுச்சக்கரவர்தி, செந்தில், கோவை சரளா, எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். கல்யாணி முருகன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் ஏப்ரல் 14, 1987இல் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.[1][2][3][4]
எங்க ஊரு பாட்டுக்காரன் | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கங்கை அமரன் |
தயாரிப்பு | கல்யாணி முருகன் |
கதை | சங்கிலி முருகன் எஸ். கஜேந்திர குமார் (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. வி. தயாளன் |
படத்தொகுப்பு | வி. லெனின் வி. ரி. விஜயன் |
கலையகம் | மீனாக்சி ஆன்ட்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1987 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுசெண்பகம் (நிசாந்தினி) பணக்காரரின் (சீமதுரை) மகளாவாள். சீதன் பால்கறக்கும் அனாதை ஆவான். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் காதல் கொள்கின்றனர். ஆனால் இவ்விருவரும் அவர்களுக்குள் இருக்கும் காதலை நேரடியாக வெளிக்காட்டவில்லை. சீதனை, மருதமுத்து (வினுச்சக்கரவர்தி) வளர்த்து வந்தார். செண்பகத்தின் தந்தை அவளுக்கு திருமண ஏற்பாடு செய்யும் போது செண்பகம் தற்கொலை செய்து விடுகிறாள். செண்பகத்தின் மரணத்தை சீதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மருதமுத்து சீதனுக்கு காவேரி (ரேகா) எனும் பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கிறார். சீதன் திருமணம் செய்தாலும் அவனுக்கு செண்பகத்தை மறக்க முடியவில்லை.
நடிகர்கள்
தொகு- ராமராஜன் - சீதன்
- ரேகா - காவேரி
- சாந்திப்ரியா - செண்பகம்
- செந்தாமரை - செண்பகம், வடக்கு விநாயகத்தின் தந்தை
- வினு சக்ரவர்த்தி - மருதமுத்து
- செந்தில் - வடக்கு விநாயகம்
- கோவை சரளா - சக்கு
- எஸ். எஸ். சந்திரன் - சக்குவின் தந்தை
- பசி சத்யா - சக்குவின் தாய்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - கோபி
- எஸ். என். பார்வதி - செண்பகம், வடக்கு விநாயகத்தின் தாய்
- கல்லாப்பெட்டி சிங்காரம் - பஞ்சாயத்துத் தலைவர்
- கருப்பு சுப்பையா
- உசிலைமணி - அறிவுமணி
- மா. நா. நம்பியார் - கள்ளம்பட்டியான் (விருந்தினர் தோற்றம்)
- ஜெய்சங்கர் - மஞ்சம்பட்டியான், சீதனின் தந்தை (விருந்தினர் தோற்றம்)
- சங்கிலி முருகன் - இருளப்பன் (விருந்தினர் தோற்றம்)
- திலீப் - இருளப்பனின் மகன் (விருந்தினர் தோற்றம்)
- கங்கை அமரன் - சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியுள்ளார்.[5][6][7] மனோ அனைத்துப் பாடல்களையும் பாடியுள்ளார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அழகி நீ பேரழகி" | மனோ | 4:58 | |||||||
2. | "எங்க ஊரு பாட்டுக்காரன்" | இளையராஜா | 4:28 | |||||||
3. | "ஜின்ஜினாக்கு ஜினக்கு" | மனோ, எஸ். ஜானகி | 4:32 | |||||||
4. | "மதுர மரிக்கொழுந்து வாசம்" | மனோ, சித்ரா | 4:41 | |||||||
5. | "பேச்சி பேச்சி நீ" | மனோ | 4:27 | |||||||
6. | "செண்பகமே செண்பகமே" (ஆண்குரல்) | மனோ | 4:32 | |||||||
7. | "செண்பகமே செண்பகமே" (சோடிப்பாடல்) | மனோ, சுனந்தா | 4:27 | |||||||
8. | "செண்பகமே செண்பகமே" (பெண்குரல்) | ஆஷா போஸ்லே | 7:42 | |||||||
மொத்த நீளம்: |
39:47 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Filmography of enga ooru pattukkaran". cinesouth.com. Archived from the original on 2010-12-30. Retrieved 2012-09-09.
- ↑ "Enga ooru Paattukaran". popcorn.oneindia.in. Retrieved 2012-09-09.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "IndiaGlitz - Ramarajan is back - Tamil Movie News". indiaglitz.com. 2008-07-11. Retrieved 2012-09-09.
- ↑ "IndiaGlitz - Birthday wishes to Gangai Amaran - Tamil Movie News". indiaglitz.com. 2006-12-08. Retrieved 2012-09-09.
- ↑ "Enga Ooru Paatukaaran". thiraipaadal.com. Retrieved 2012-12-02.
- ↑ "Enga Ooru Paatukaran Songs". raaga.com. Retrieved 2012-12-02.
- ↑ "Enga Ooru Pattukaran". hummaa.com. Archived from the original on 25 August 2012. Retrieved 2012-12-02.