சங்கிலி முருகன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

சங்கிலி முருகன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் தமிழ் மொழித் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார்.[1][2][3] இவரது முழுப் பெயர் முத்துவேல் முருகன் என்பதாகும்.

சங்கிலி முருகன்
பிறப்புமுத்துவேல் முருகன்
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1979– தற்போது வரை

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இவர் நடித்த முதல் திரைப்படமான ஒரு கை ஓசை திரைப்படத்தில் இவர் ஏற்ற சங்கிலி கதாபாத்திரத்தின் பெயருடன் சேர்த்துசங்கிலி முருகன் என்று அறியப்படுகிறார். முருகன் சினி ஆர்ட்சு என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். இதுவரை ஒன்பதற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

திரைப்பட விபரம் தொகு

தயாரித்த திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் இயக்குநர் மொழி குறிப்புகள்
1987 எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜன், ரேகா கங்கை அமரன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1988 சக்கரைப் பந்தல் சரண் ராஜ், சாந்திப்பிரியா கங்கை அமரன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1988 எங்க ஊருப் பூவாத்தா ராமராஜன், கௌதமி டி. பி. கஜேந்திரன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1989 பாண்டி நாட்டுத் தங்கம் கார்த்திக், நிரோசா டி. பி. கஜேந்திரன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1990 பெரிய வீட்டுப் பண்ணைக்காரன் கார்த்திக், கனகா என். கே. விசுவநாதன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1992 நாடோடிப் பாட்டுக்காரன் கார்த்திக், மோகினி என். கே. விசுவநாதன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1997 காதலுக்கு மரியாதை விஜய், சாலினி பாசில் தமிழ்
2010 சுறா விஜய், தமன்னா, வடிவேலு எசு. பி. ராஜ்குமார் தமிழ்
2016 மீண்டும் ஒரு காதல் கதை கௌதம், இசா தல்வார் மித்ரன் ஜவகர் தமிழ்

நடித்த திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Grillmill". தி இந்து. 16 October 2009. Archived from the original on 19 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 February 2010.
  2. Ashok Kumar, S. R (1 May 2009). "Ilaiyaraja on silver screen". தி இந்து. Archived from the original on 6 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 2 February 2010.
  3. "Sangili murugan filmography". www.jointscene.com. Archived from the original on 10 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கிலி_முருகன்&oldid=3552620" இலிருந்து மீள்விக்கப்பட்டது