டி. பி. கஜேந்திரன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

டி. பி. கஜேந்திரன் (T. P. Gajendran, 1955 – 5 பெப்ரவரி 2023) ஓர் இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார்.[2] தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[3] விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார். இவர் 15இற்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 100 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த பெருமாளின் மகனாவார்.[4] நடிகை டி. பி. முத்துலட்சுமி அவரது மைத்துனி, கஜேந்திரனின் வளர்ச்சிக்கு உதவினார்.[5]

டி. பி. கஜேந்திரன்
பிறப்பு1955 (1955)
இறப்பு (அகவை 68)
பணி
  • நடிகர்
  • இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1985–2023
பிள்ளைகள்தனலட்சுமி[1]

தொழில் வாழ்க்கை

தொகு

டி.பி.கஜேந்திரன் கே. பாலசந்தர், விசு ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சிதம்பர ரகசியம்  (1985) திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். 1988 இல், வீடு மனைவி மக்கள்  திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் 2000 இற்கு முற்பகுதியில் குறைந்த செலவில் குடும்ப நகைச்சுவை நாடகத் திரைப்படங்களை இயக்கினார். இது போன்ற குடும்பத் திரைப்படங்களில் பிரபு  முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார்.[6][7] இதில் பட்ஜெட் பத்மநாபன்  (2000), மிடில் கிளாஸ் மாதவன் (2001), மற்றும் பந்தா பரமசிவம்  (2003) ஆகியவை அடங்கும். இவர் இயக்கிய நான்காவது படமான ஆசை வச்சேன் உன் மேலே திரைப்படத்திற்குப் பிறகு திரைப்படங்களை இயக்கவில்லை.[8] 2001 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படங்களின் போக்கு காரணமாக இவர் கற்பூர நாயகி என்ற இந்து பக்தித் திரைப்படத்தை உருவாக்க முயன்றார். ரோஜா மற்றும் பானுப்ரியா  நடிக்கவிருந்த  இத்திரைப்படம் கைவிடப்பட்டது.[9] 

2015 இல், இவர் திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் (CTA) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]

இறப்பு

தொகு

கஜேந்திரன் 2023 பெப்ரவரி 5 அன்று தனது 68 வயதில் உடல் நலக் குறைவால் காலமானார்.[11]

திரைப்பட விபரம்

தொகு

இயக்கிய திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1988 வீடு மனைவி மக்கள்
1988 எங்க ஊரு காவல்காரன்
1988 கன்டே மனே மக்களு கன்னடத் திரைப்படம்[12]
1989 பாண்டி நாட்டுத் தங்கம்
1989 எங்க ஊரு மாப்பிள்ளை
1989 தாயா தாரமா
1989 நல்ல காலம் பொறந்தாச்சு
1990 பெண்கள் வீட்டின் கண்கள்
1993 கொஞ்சும் கிளி
1995 பாட்டு வாத்தியார்
1997 பாசமுள்ள பாண்டியரே
2000 பட்ஜெட் பத்மநாபன்
2001 மிடில் கிளாஸ் மாதவன்
2003 பந்தா பரமசிவம் மேட்டுப்பட்டி மச்சான் திரைப்படத்தின் மறுஆக்கம்
2007 சீனாதானா 001 சிஐடி மூசா மலையாளத் திரைப்படத்தின் மறுஆக்கம்
2010 மகனே என் மருமகனே

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம்
1985 புதிய சகாப்தம் கஜேந்திரன்
1985 அவள் சுமங்கலிதான் பெர்னாண்டசு
1998 பிரியமுடன்
1998 குருப்பார்வை
2000 பாரதி குவளை
2000 பட்ஜெட் பத்மநாபன் வழக்கறிஞர்
2001 மிடில் கிளாஸ் மாதவன் சிறப்புத் தோற்றம்
2002 பம்மல் கே. சம்பந்தம் இயக்குநர்
2002 இவன் அமைச்சர்
2003 பந்தா பரமசிவம்
2003 பிதாமகன் மருத்துவர்
2003 சொக்கத் தங்கம்
2004 பேரழகன் கமிசன் மண்டி கஜேந்திரன்
2004 மகா நடிகன்
2004 ஜெயசூர்யா
2005 சந்திரமுகி
2005 மஜா மருத்துவர்
2007 சீனாதானா 001
2007 அடாவடி
2009 வில்லு திருமண விருந்தாளி
2009 தோரணை அடுக்குமாடிக் குடியிருப்பு செயலர்
2010 பாணா காத்தாடி கருணாசின் தந்தை
2010 அம்பாசமுத்திரம் அம்பானி
2010 மகனே என் மருமகனே
2011 யுவன் யுவதி தங்கமீனாவின் தந்தை
2011 வேலாயுதம் பயணச்சீட்டு பரிசோதகர்
2012 மயங்கினேன் தயங்கினேன்
2013 ஒன்பதுல குரு துரை சிங்கம்
2013 சுட்ட கதை சுடலை
2013 தீக்குளிக்கும் பச்சை மரம்
2014 இராமானுசன் எம்பெருமாள் செட்டியார்
2014 பட்டையக் கிளப்பணும் பாண்டியா மருத்துவர்
2015 துணை முதல்வர்

தொலைக்காட்சித் தொடர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Events – TP Gajendran's Daughter's Reception Movie Trailer Launch – IndiaGlitz Tamil". IndiaGlitz.com.
  2. T. P. G ajendran calls for revival of Tamil theatre. The Hindu - Cities: Tiruchirapalli (18 Jul 2012). Retrieved 2013-11-16
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-10-14. பார்க்கப்பட்ட நாள் 2016-03-22.
  4. "Sparkling presence". The Hindu. 6 சூன் 2008. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Sparkling-presence/article15398893.ece. 
  5. "T.P.Gajendran Exclusive Interview". 13 சூலை 2019 – via www.Youtube.com.
  6. "dinakaran". Archived from the original on 2001-06-14.
  7. "dinakaran". 10 February 2001. Archived from the original on 10 February 2001.
  8. "Aasai Vachen Unmele". 20 September 2003. Archived from the original on 20 September 2003.
  9. "15-12-01". Archived from the original on 30 நவம்பர் 2004.
  10. "Gajendran adjudged as CTA head". 5 அக்டோபர் 2015.
  11. Tamil actor-director TP Gajendran passes away
  12. http://kannadamoviesinfo.wordpress.com/2013/04/06/ganda-mane-makkalu-1988/

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._கஜேந்திரன்&oldid=3955973" இலிருந்து மீள்விக்கப்பட்டது