பாணா காத்தாடி (திரைப்படம்)

(பாணா காத்தாடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாணா காத்தாடி (Baana Kaathadi) 2010 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும்.[1] பத்ரி வெங்கடேஷால் எழுதி இயக்கப்பட்டது. தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மகனான அதர்வா இதில் நாயகனாக நடித்துள்ளார்.பிரசன்னா, சமந்தா ருத் பிரபு, கருணாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்ட இப்படம் தமிழ் நடிகர் முரளியின் கடைசித்திரைப்படமாகும். முரளி இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

பாணா காத்தாடி
இயக்கம்பத்ரி வெங்கடேஷ்
தயாரிப்புசெந்தில் தியாகராஜன்
டி.அர்ஜுன்
கதைபத்ரி வெங்கடேஷ்
லட்சுமிகாந்த்
ராதாகிருஷ்ணன்
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புஅதர்வா
பிரசன்னா
சமந்தா ருத் பிரபு
கருணாஸ்
மனோபாலா
ஒளிப்பதிவுரிச்சர்ட் மரிய நாதன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்சத்யஜோதி பிலிம்ஸ்
வெளியீடு6 ஆகத்து 2010
நாடு இந்தியா
மொழிதமிழ்

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக குசராத்தில் நடந்த பன்னாட்டு பட்டம் விடும் விழாவில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[2]

நடிகர்கள்

தொகு
  • ரமேஷ் ஆக அதர்வா
  • ரவியாக பிரசன்னா
  • பிரியாவாக சமந்தா
  • குமாராக கருணாஸ்
  • மனோபாலா
  • மௌனிகா
  • டி.பி.கஜேந்திரன்
  • 'இதயம்' ராஜாவாக முரளி (கெளரவ தோற்றம்)

மேற்கோள்கள்

தொகு
  1. "Events – 'Baana Kaathadi' Exclusive Song Promo". IndiaGlitz. 2 June 2010. Archived from the original on 4 June 2010. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.
  2. "A kite festival on screen – Tamil Movie News – Baana Kaathadi | Atharva | Samantha | Prasanna | Karunaas". Behindwoods.com. 27 January 2010. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.

வெளி இணைப்புகள்

தொகு