பிதாமகன்

பாலா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பிதாமகன் (Pithamagan) 2003ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா ஆகியோர் முதன்மையா ன பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இளையராஜவின் இசையில் வெளிவந்துள்ளது.

பிதாமகன்
இயக்கம்பாலா
தயாரிப்புவி.ஏ. துரை
கதைபாலா
இசைஇளையராஜா
நடிப்புவிக்ரம்
சூர்யா
சங்கீதா
லைலா
மகாதேவன்
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்எவர்கிரீன் மூவிஸ் இண்டர்நேஷனல்
வெளியீடு2003
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சித்தன்[1] (விக்ரம்) இளவயதிலேயே அனாதை ஆனவன். இறந்தவர்களின் உடல்களை எரிப்பதனையே தொழிலாகக் கொண்டிருக்கும் இவன் மிருகக்குணம் கொண்டவனாக அனைவராலும் பார்க்கப்படுகின்றான். யாரேனும் இவனையோ இவனுக்கு நெருங்கியவர்களையோ எதிர்த்தால் திடீரென கோபம் கொள்வான். அப்பகுதியில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கோமதியின் (சங்கீதா) அன்பினால் ஈர்க்கப்படுகின்றான் சித்தன். சித்தனுக்கு தன் முதலாளியிடமே (மகாதேவன்) வேலை வாங்கித் தருகிறாள் கோமதி. தொடர்ந்து, முதலாளிக்காக போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் சித்தன் சிறைக்குச் செல்கிறான். இதற்கிடையில் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தொழிலைக் கொண்டிருந்த சக்தி (சூர்யா) மஞ்சு (லைலா) என்னும் பெண்ணிடம் தகராறுகள் செய்து பின்னர் சிறையில் அடைக்கப்படுகின்றான். சிறையில் சித்தனைச் சந்திக்கும் சக்தி அவனுடன் நண்பனாகின்றான். சிறையை விட்டு விடுதலையான பின்னர் சக்தி, அவனுடைய நண்பர்கள், கோமதி, சித்தன் அனைவரும் ஒரு வீட்டில் வாழ்கின்றனர். மஞ்சுவும் இவர்களுக்கு அறிமுகமாகிறாள். சித்தனும் கோமதியும் ஒருவர் மேல் ஒருவர் அன்பாகவும் இருக்கின்றனர்.

ஒருநாள் முதலாளி கொன்று போடும் ஒருவனின் உடலை எரிக்கிறான் சித்தன். இதனால், இந்த கொலை வழக்கில் சிக்குகிறான் சித்தன். இந்த வழக்கில் முதலாளி குறித்த உண்மைகளை அறிவிக்கப் போவதாக சக்தி கூற, இதனால் துணுக்குற்ற முதலாளி ஆட்களை அனுப்பி சக்தியைக் கொல்கிறார். நண்பனை இழந்த துயர் தாங்காத சித்தன் முதலாளியைக் கொல்கிறார். பின்னர், எவருடன் சேர்ந்து வாழ விருப்பமின்றி தன் வழியே சித்தன் செல்வதுடன் திரைப்படம் நிறைவடைகிறது.

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிதாமகன்&oldid=3710170" இலிருந்து மீள்விக்கப்பட்டது