லைலா (பிறப்பு: 24 அக்டோபர் 1980)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தமிழ்த் திரைப்படங்களில் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னணியில் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

லைலா

இயற் பெயர் குயின்மேரி
பிறப்பு அக்டோபர் 24, 1980 (1980-10-24) (அகவை 43)
கோவா, இந்தியா இந்தியா
வேறு பெயர் லைலா
தொழில் நடிகை
துணைவர் மெஹதீன் (2006-தற்போது வரை)
பிள்ளைகள் 2

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

 • நடிகை லைலாவின் உண்மையான பெயர் குயின்மேரி கோவாவில் ஒரு கத்தோலிக்க கிறித்தவர் குடும்பத்தில் பிறந்தார்.
 • இவர் ஈரான் நாட்டை சேர்ந்த தொழிலதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறினார்.[2]

திரைப்படங்கள் தொகு

 • கள்ளழகர் (தமிழ்த் திரைப்பட அறிமுகம்)
 • ரோஜாவனம்
 • பார்த்தேன் ரசித்தேன்
 • தில்
 • தீனா
 • உன்னை நினைத்து
 • அள்ளித்தந்த வானம்
 • காமராசு
 • நந்தா
 • பிதாமகன்
 • மௌனம் பேசியதே (சிறப்புத் தோற்றம்)
 • திரீ ரோசஸ்
 • கம்பீரம்
 • பரமசிவன்
 • திருப்பதி (ஒரு பாடலுக்கு மட்டும் நடனம்)
 • ஜெய்சூர்யா

மேற்கோள்கள் தொகு

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-10. பார்க்கப்பட்ட நாள் 2018-01-30.
 2. http://www.seithipunal.com/cinema/actress-laila-present-situation

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லைலா&oldid=3884421" இலிருந்து மீள்விக்கப்பட்டது