நந்தா (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர்
(நந்தா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நந்தா (Nandha Durairaj) என்று பரவலாக அறியப்படும் நந்தா துரைராஜ் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[1] சங்கரின் தயாரிப்பில் வெளியான ஈரம் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.[2] இவர் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
நந்தா துரைராஜ் | |
---|---|
பிறப்பு | கோவிந்த் செந்தரம்பாளையம் துரைராஜ் கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | நந்தா |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002- தற்போது வரை |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர், கோவையில்[3] துரைராஜ் - ராணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு கார்த்திக் என்ற இளைய சகோதரர் உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு. கண்ணப்பனின் பேரன் ஆவார்.[4]
திரைப்பட விபரம்
தொகுநடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
2002 | மௌனம் பேசியதே | கண்ணன் | |
2003 | புன்னகை பூவே | வெங்கட் | |
2005 | கோடம்பாக்கம் | சுகவண்ணன் | |
செல்வம் | செல்வம் /கண்ணன் | ||
அகரம் | திரு | ||
2006 | ஆணிவேர் | மருத்துவர் நந்தா | |
2007 | உற்சாகம் | கணேசன் | |
2009 | ஈரம் | பாலகிருஷ்ணன் | பரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) |
2010 | ஆனந்தபுரத்து வீடு | பாலா | |
2011 | வந்தான் வென்றான் | ரமணா | |
வேலூர் மாவட்டம் | முத்துக்குமார் | ||
2014 | அதிதி | மதியழகன் | [5] |
2015 | கதம் கதம் | நந்தா | |
புதிய திருப்பங்கள் | ஆதித்யா | முன் தயாரிப்பு | |
வில்லங்கம் | படப்பிடிப்பில் [6] | ||
அதிபர் | டேவிட் | படப்பிடிப்பில் |
பின்னணி குரல் கொடுத்தவை
தொகுஆண்டு | திரைப்படம் | நடிகர் | குறிப்புகள் |
2014 | ஜே சி டேனியல் | பிரித்விராஜ் | செல்லுலாய்டு மலையாளத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத்தில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.sify.com/movies/nanda-weds-vidyaroopa-imagegallery-kollywood-nhprOmjgcgd.html
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/water-water-everywhere-eeram/article659914.ece
- ↑ Sandesh (2013-07-15). "Actor Nandha's marriage photos". www.filmibeat.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
- ↑ "05-04-03". 2007-12-18. Archived from the original on 18 December 2007. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Trouble-in-Nandhaa-Ananyas-paradise/articleshow/26583399.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-29.