பிரித்விராஜ் சுகுமாரன்

ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர்

பிரித்விராஜ் சுகுமாரன் (பிறப்பு: 1982 அக்டோபர் 16) ஓர் இந்திய நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழித் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 80 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

பிரித்விராஜ் சுகுமாரன்
Prithviraj Sukumaran in 2009
பிறப்புபிரித்விராஜ் சுகுமாரன்
16 அக்டோபர் 1982 ( 1982 -10-16) (அகவை 41)
திருவனந்தபுரம், கேரளா
பணிநடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2002 – அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
சுப்ரியா மேனன் (2011-அறிமுகம்)
உறவினர்கள்சுகுமாரன் (அப்பா)
மல்லிகா சுகுமாரன் (அம்மா)
இன்ஜித் சுகுமாரன் (அண்ணா)
பூர்ணிமா இன்ஜித் (அண்ணி)
விருதுகள்கேரள மாநில திரைப்பட விருது
சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது: சிறந்த நடிகர் – 2006, 2012
வலைத்தளம்
www.augustcinemaindia.com

இவர் 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள மாநிலத் திரைப்பட விருதை வென்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

பிரித்விராஜ் அக்டோபர் 16, 1982 ஆம் ஆண்டு திருவனந்தபுரம், கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை சுகுமாரன் ஒரு நடிகர். தாயார் மல்லிகா சுகுமாரனும் ஒரு நடிகை ஆவார். இவருக்கு இந்திரஜித் சுகுமாரன் என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு. இவர் மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் மனைவி பூர்ணிமா இந்திரஜித்தும், இவரும் சில மலையாளம், தமிழ்த் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.

தனிப்பட்ட வாழ்க்கை

ஏப்ரல் 25, 2011ம் ஆண்டு பிபிசி இந்தியத் தொலைக்காட்சி செய்தியாளர் சுப்ரியா மேனனைத் திருமணம் செய்து கொண்டார்.

சினிமா வாழ்க்கை

மலையாளம் சினிமா

இவர் 2002 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் நந்தனம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து புதிய முகம், போக்கிரி ராஜா, அன்வர், உருமி உள்ளிட்ட 60க்கும் மேல் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா (கோலிவுட்)

2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, 2008 ஆம் ஆண்டு வெள்ளித்திரை 2009 ஆம் ஆண்டு நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது வசந்தபாலன் இயக்கும் காவிய தலைவன் என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைத்து நடித்தார்.

தெலுங்கு சினிமா

2010 ஆம் ஆண்டு போலிஸ் போலிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்த சில திரைப்படங்கள் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

இந்தி சினிமா

2012 ஆம் ஆண்டு ஐய்யா என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவுரங்கசீப் என்ற திரைப்படத்திலும் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருடன் சேர்த்து அர்ஜுன் கபூர் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

தயாரிப்பாளர்

இவர் ஆகஸ்ட் சினிமா என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகின்றார். இந்தத் திரைப்பட நிறுவனத்தின் மூலம் உருமி, இந்திய ரூபாய், கடல் கடன்னு ஒரு மாதுகுட்டி, டபுள் பேரல் போன்ற திரைப்படங்களை தயாரித்து பல விருதுகளையும் வென்றார்.

திரைப்படங்கள்

எண் ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர் இயக்குனர் வேடம் மொழி
1 2002 காயத்ரி ரகுராம், ஆர். நரேந்திர பிரசாத் ராஜசேனன் அனந்து மலையாளம்
2 ஸ்டோப்பு வயலன்ஸ் சந்திர லட்சுமணன், விஜயராகவன் எ. கே. சாஜன் சாத்தான் மலையாளம்
3 நந்தனம் நவ்யா நாயர், கவியூர் பொன்னம்மா ரஞ்சித் மனு மலையாளம்
4 2003 வெள்ளித்திர நவ்யா நாயர், சுதீஷ் பத்ரன் ரகுராம் மலையாளம்
5 மீரயுடெ து​:கவும்
முத்துவின்றெ ஸ்வப்னவும்
அம்பிளி தேவி, ரேணுகா மேனன் வினயன் முத்து மலையாளம்
6 ஸ்வப்னக்கூடு மீரா ஜாஸ்மின், குஞ்சாக்கோ போபன் கமல் குஞ்ஞுண்ணி மலையாளம்
7 அம்மக்கிளிக்கூடு நவ்யா நாயர், இன்னொசென்ட் பத்மகுமார் விவேக்‌ மலையாளம்
8 சக்ரம் மீரா ஜாஸ்மின், விஜீஷ் அ. க. லோகிததாசு சந்திரஹாசன் மலையாளம்
9 2004 வெள்ளி நட்சத்ரம் சர்மிலி, ஜயசூர்யா வினயன் வினோத் மலையாளம்
10 கத காவ்யா மாதவன், அப்பாஸ் சுந்தர் தாஸ்‌ நந்தன் மேனன் மலையாளம்
11 சத்யம் பிரியாமணி, திலகன் வினயன் சஞ்சீவ் குமார் மலையாளம்
12 அகலெ கீது மோஹன்தாஸ், ஷீலா சியாம பிரசாத் நீல் மலையாளம்
13 2005 அத்புதத்வீப் கின்னஸ் பக்ரு, மல்லிகா கபூர் வினயன் ஹரி மலையாளம்
14 கனா கண்டேன் ஸ்ரீகாந்த்‌, கோபிகா (நடிகை) கே. வி. ஆனந்த் மதன் தமிழ்
15 க்ருத்யம் பவித்ரா, ஜகதி ஸ்ரீகுமார் விஜி தம்பி சத்யா,
கிரிஸ்டி லோப்பஸ்
மலையாளம்
16 போலீஸ் பாவனா, இந்திரஜித் வி. கே. பிரகாசு சேகர் மலையாளம்
17 தைவனாமத்தில் பாவனா, கொச்சி ஹனீஃபா ஜெயராஜ் அன்வர் மலையாளம்
18 அனந்தபத்ரம் காவ்யா மாதவன், மனோஜ்‌ கே. ஜெயன் சந்தோஷ் சிவன் ஆனந்தன் மலையாளம்
19 2006 அச்சனுறங்ஙாத்த வீடு முக்தா, சலீம் குமார் லால் ஜோஸ்‌ ஹரிக்ருஷ்ணன் மலையாளம்
20 வர்க்கம் ரேணுக மேனோன், கேப்டன் ராஜு பத்மகுமார் ஸோளமன் மலையாளம்
21 கிளாஸ்மேட்ஸ் காவ்யா மாதவன், நரேன் லால் ஜோஸ்‌ சுகுமாரன் மலையாளம்
22 வாஸ்தவம் காவ்யா மாதவன், ஜகதி ஸ்ரீகுமார் பத்மகுமார் பாலசந்திரன் மலையாளம்
23 பாரிஜாதம் (2006 திரைப்படம்) சரண்யா பாக்யராஜ், கே. பாக்யராஜ் கே. பாக்யராஜ் சுரேந்தர், ஸ்ரீதர் தமிழ்
24 பகல் ஜோதிமயி, திலகன் எம். எ. நிஷாத் நந்தகுமார் மலையாளம்
25 ஒருவன் மீரா வாசுதேவன், இந்திரஜித்து ஜீவன் வின்னோ ஆனந்த் மலையாளம்
26 2007 மொழி ஜோதிகா, பிரகாஷ் ராஜ் ராதா மோகன் கார்த்திக் தமிழ்
27 வன் சாண்டியுடெ மகன் ஸ்ரீதேவிகா, விஜயராகவன் துளசிதாஸ் குர்யன் சாண்டி மலையாளம்
28 காக்கி மனசா, முகேஷ் பிபின் பிரபாகர் உண்ணிகிருஷ்ணன் மலையாளம்
29 வீராளிப்பட்டு பத்மபிரியா, முரளி, ஜகதி ஸ்ரீகுமார் குக்கு சுரேந்தர் ஹரி மலையாளம்
30 சத்தம் போடாதே பத்மபிரியா, நிதின் சத்யா வசந்த்‌ ரவிசந்திரன் தமிழ்
31 கண்ணாமூச்சி ஏனடா சந்தியா, சத்யராஜ் வி. பிரியா ஹரிஷ் வெங்கடராமன் தமிழ்
32 நாதியா கொல்லப்பெட்ட ராத்ரி காவ்யா மாதவன், சுரேஷ் கோபி கே. மது சியா முசாபிர் மலையாளம்
33 சோக்கலேட் ரோமா, சம்விருதா சுனில், ஜெயசூர்யா (நடிகர்)ஜெயசூர்யா ஷாபி சியாம் பாலகோபால் மலையாளம்
34 கங்காரு காவ்யா மாதவன், ஜெயசூர்யா ராஜ் பாபு ஜோஸ் குட்டி மலையாளம்
35 2008 வெள்ளித் திரை பிரகாஷ் ராஜ், கோபிகா (நடிகை) விஜி சரவணன் தமிழ்
36 ஒன் வே டிக்கட் பாமா, திலகன்,
மம்மூட்டி (கவுரவ வேடத்தில்)
பிபின் பிரபாகர் குஞ்ஞாப்பு
(ஜஹாங்கீர்)
மலையாளம்
37 தலப்பாவு லால், அதுல் குல்க்கர்ணி, தன்யா மேரி வர்கீஸ் மதுபால் நக்சல் ஜோஸப் மலையாளம்
38 திரக்கத பிரியாமணி, அனூப் மேனோன், சம்விருதா சுனில் ரஞ்சித் அக்பர் அகமது மலையாளம்
39 டுவென்டி 20 மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி ஜோஷி கவரவ வேடத்தில் மலையாளம்
40 அபியும் நானும் திரிசா, பிரகாஷ் ராஜ் ராதா மோகன் சுதாகர் தமிழ்
41 மஞ்சாடிக்குரு ஊர்வசி, ரகுமான் அஞ்சலி மேனன் விக்கி மலையாளம்
42 லோலிபோப்பு ரோமா, பாவனா, ஜெயசூர்யா, குஞ்சாக்கோ போபன் ஷாபி பிராங்கோ மலையாளம்
43 2009 நம்மள் தம்மில் கீது மோஹன்தாஸ், இந்திரஜித்து, ரேவதி விஜி தம்பி விக்கி மலையாளம்
44 கலண்டர் நவ்யா நாயர், முகேஷ், சாறினா வஹாப் மகேஷ்‌ ஒள்ளிக்கரை சோஜப்பன் மலையாளம்
45 புதிய முகம் பிரியாமணி, மீரா நந்தன், பாலா திபன் கிருஷ்ண குமார் மலையாளம்
46 நினைத்தாலே இனிக்கும் பிரியாமணி, சக்தி வாசு குமாரவேல் சிவா தமிழ்
47 றோபின்ஹுட் பாவனா, நரேன், பிஜு மேனோன், சம்விருதா சுனில் ஜோஷி வெங்கி
(வெங்கடேஷ்)
மலையாளம்
48 கேரள கபே ரகுமான், ஜெயசூர்யா, கீது கிரிஸ்டி சங்கர் ராமகிருஷ்னன், ரஞ்சித் Leon மலையாளம்
49 2010 புண்யம் அஹம் சம்விருதா சுனில், நெடுமுடி வேணு ராஜ் நாயர் நாராயணன் உண்ணி மலையாளம்
50 தாந்தோன்னி ஷீலா, அம்பிகா, சுராஜ், சாய்குமார் ஜோர்ஜ்‌ வர்க்கிஸ் வடக்கன்வீட்டில் கொச்சுதோமா மலையாளம்
51 போலீஸ்‌ போலீஸ்‌ ஸ்ரீகாந்த்‌, கமலினி முகர்ஜி மன்மோஹன் ரவிகாந்த் தெலுங்கு
52 போக்கிரி ராஜா மம்மூட்டி, சிரேயா சரன் வைசாக் அப்ரகாம் சூர்யா மலையாளம்
53 ராவணன் விக்ரம், ஐஸ்வர்யா ராய் (நடிகை), பிரியாமணி மணிரத்னம் தேவ் பிரகாஷ் தமிழ்
54 அன்வர் மம்தா, லால், பிரகாஷ் ராஜ் அமல் நீரத் அன்வர் மலையாளம்
55 தி த்ரில்லர் காதரின் தெரேசா, மல்லிகா கபூர், லாலு அலக்ஸ், சம்பத்து பி. உண்ணிகிருஷ்ணன் நிரனஜன் மலையாளம்
56 2011 அர்ஜுனன் சாட்சி ஆன் அகஸ்டின்,நெடுமுடி வேணு, பிஜு மேனன்,
விஜயராகவன்
ரஞ்சித் சங்கர் றோய்‌ மாத்யு மலையாளம்
57 மேக்கப்புமான் ஜெயராம் (நடிகர்), குஞ்சாக்கோ போபன், ஷீலா ஷாபி கவுரவ வேடத்தில் மலையாளம்
58 உறுமி பிரபுதேவா, ஜெனீலியா, ஆர்யா, தபூ, வித்யா பாலன் சந்தோஷ் சிவன் கேலு நாயனார் மலையாளம்
59 சிட்டி ஆப் காட் பார்வதி மேனோன், இந்திரஜித்து, சுவேதா மேனன், ரீமா கல்லிங்கல் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஜோதிலால் மலையாளம்
60 மாணிக்யக்கல்லு முகேஷ், சம்விருதா சுனில், சலீம் குமார் எம். மோகனன் வினயசந்திரன் மலையாளம்
61 மனுஷ்யமிருகம் கலாபவன் மணி, பாபுராஜ் பாபுராஜ் டேவிட் மலையாளம்
62 வீட்டிலேக்குள்ள வழி இந்திரஜித்து, தன்யா மேரி வர்கீஸ் டி. பிஜு டாக்டர் மலையாளம்
63 தேஜாபாய் & பாமிலி அகிலா தீபு கருணாகரன் தேஜாபாய்/றோஷன் வர்மா மலையாளம்
64 இந்தியன் ருப்பி திலகன், ரீமா கல்லிங்கல் ரஞ்சித் ஜே.பி. மலையாளம்
65 2012 மாஸ்டர்ஸ் சசிகுமார், பியா பாஜ்பய், பிஜு மேனோன் ஜோணி ஆன்டணி ஸ்ரீராமகிருஷ்ணன் மலையாளம்
66 ஹீரோ பாலா, ஸ்ரீகாந்த்‌, யாமி கௌதம் தீபன் டார்சன் ஆன்றணி மலையாளம்
67 பாச்சு‌லர் பார்ட்டி ஆசிப் அலி, இந்திரசித்து, கலாபவன் மணி, நித்யா மேனன் அமல் நீரத் கவுரவ வேடத்தில் மலையாளம்
68 ஆகாசத்தின்றெ நிறம் இந்திரசித்து, நெடுமுடி வேணு, அமலா பால், அனூப் சந்திரன் டி. பிஜு டோக்டர் மலையாளம்
69 ஸிம்ஹாஸனம் திலகன், சித்திக், மணியன்பிள்ளை ராஜு, வந்தனா, ஐஸ்வர்யா தேவன் ஷாஜி கைலாஸ் அர்ஜுன் மாதவ் மலையாளம்
70 மோளி ஆன்றி றோக்குஸ் ரேவதி, லாலு அலக்ஸ், கே. பி. ஏ. சி. லலிதா ரஞ்சித் சங்கர் பிரணவ் ஐ.ஆர்.எஸ். மலையாளம்
71 அய்யா ராணி முகர்ஜி சச்சின் குந்தாள்கர் சூர்யா ‌‌ இந்தி
72 அயாளும் ஞானும் தம்மில் பிரதாப்‌ போத்தன், நரேன், கலாபவன் மணி, சலிம் குமார், ரீமா கல்லிங்கல், சம்விருதா சுனில், ரம்யா நம்பீசன் லால் ஜோஸ் ரவி தரங்கன் மலையாளம்
73 2013 செல்லுலோயிட்[1] மம்தா மோகன்தாஸ், சாந்தினி கமல் ஜே. சி. டானியல் மலையாளம்
74 மும்பை போலீஸ் ஜெயசூர்யா, ரகுமான், அபர்ணா நாயர், சுவேதா மேனன் ரோஷன் ஆன்ட்ரூஸ் ஆன்டணி மோசஸ் மலையாளம்
75 அவுரங்கசீப் அர்ஜுன் கபூர், ரிசி கபூர் அதுல் சபர்வாள் ஆர்யா பொகட்டு இந்தி
76 மெமரீஸ் மேகனா ராஜ், நெடுமுடி வேணு, மியா, விஜய ராகவன், சுரேஷ் கிருஷ்ணா, மதுபால் ஜித்து ஜோசப் சாம் அலக்ஸ் மலையாளம்
77 2014 லண்டன் பிரிட்ஜ் ஆன்ட்ரீயா, நந்திதா ராஜ், பிரதாப்‌ போத்தன் அனில் சி மேனன் விஜய் தாஸ் மலையாளம்

பின்னணி பாடகர்

இவர் புதிய முகம், தாந்தோன்னி, போக்கிரி ராஜா, அன்வர், உருமி, ஹீரோ, செவன்த் டே போன்ற திரைப்படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார்.

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Prithviraj Sukumaran
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "சினிம" (in மலையாளம்). மலையாளம் வார இதழ். 2013 மார்ச்சு 08 இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306112038/http://malayalamvaarika.com/2013/march/08/essay4.pdf. பார்த்த நாள்: 2013 ஜூப் 10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்விராஜ்_சுகுமாரன்&oldid=3935722" இலிருந்து மீள்விக்கப்பட்டது