ரேவதி (நடிகை)

சினிமா நடிகை மற்றும் இயக்குனர்

ரேவதி (Revathy, பிறப்பு: சூலை 8, 1966)[3] தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக அறியப்படுகிறார். மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.

ரேவதி

இயற் பெயர் ஆசா கேளுண்ணி குட்டி
பிறப்பு 8 சூலை 1966 (1966-07-08) (அகவை 57)
இந்தியா கொச்சி, கேரளா, இந்தியா
தொழில் நடிகை, இயக்குநர்
நடிப்புக் காலம் 1982 - தற்போது
துணைவர் சுரேஷ் சந்திர மேனன் (1988-2002)[1][2]
இணையத்தளம் http://www.revathy.com

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ரேவதி, 1966 ஜூலை 8-ல் கேரளத்தின் கொச்சியில் பிறந்தார். இவர் தந்தை கேளுண்ணி. ரேவதி, 1988 ல் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார். பின்னர், 2002 ல் இருவரும் மணமுறிவு பெற்று பிரிந்தனர்.

நடித்துள்ள திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி
1981 மண்வாசனை தமிழ்
1984 புதுமைப்பெண் தமிழ்
வைதேகி காத்திருந்தாள் தமிழ்
1985 ஆகாயத் தாமரைகள் தமிழ்
ஆண்பாவம் தமிழ்
உதயகீதம் தமிழ்
ஒரு கைதியின் டைரி தமிழ்
கன்னிராசி தமிழ்
செல்வி தமிழ்
பகல் நிலவு தமிழ்
பிரேம பாசம் தமிழ்
திறமை தமிழ்
1986 மௌனராகம் தமிழ்
லட்சுமி வந்தாச்சு தமிழ்
புன்னகை மன்னன் தமிழ்
1987 கிராமத்து மின்னல் தமிழ்
இலங்கேஸ்வரன் தமிழ்
1990 அஞ்சலி தமிழ்
அரங்கேற்ற வேளை தமிழ்
சத்ரியன் சிறப்புத் தோற்றம் தமிழ்
இதயத் தாமரை தமிழ்
கிழக்கு வாசல் தமிழ்
ராஜா கைய வச்சா தமிழ்
1991 ஆயுள் கைதி தமிழ்
1992 தெய்வ வாக்கு தமிழ்
தேவர் மகன் தமிழ்
1993 புதிய முகம் தமிழ்
மறுபடியும் தமிழ்
1994 என் ஆசை மச்சான் தமிழ்
பாசமலர்கள் தமிழ்
பிரியங்கா தமிழ்
மகளிர் மட்டும் தமிழ்
1995 அவதாரம் தமிழ்
தமிழச்சி தமிழ்
தொட்டாச்சிணுங்கி தமிழ்
1996 சுபாஷ் தமிழ்
1998 தலைமுறை தமிழ்
ரத்னா தமிழ்
1999 தாஜ்மகால் தமிழ்

இயக்கிய திரைப்படங்கள்

தொகு
  • மித்ர், மை பிரெண்ட் (ஆங்கிலம்)
  • பிர் மிலேங்கே (இந்தி)

விருதுகள்

தொகு
  • 1992 - சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது. (திரைப்படம் - தேவர் மகன்)
  • 2002 - சிறந்த ஆங்கிலத் திரைப்படத்திற்கான தேசிய விருது. (திரைப்படம் - Mitr, my friend)

மேற்கோள்கள்

தொகு
  1. நடிகை ரேவதி-சுரேஷ் மேனன் முறைப்படி விவாகரத்து தினமணி
  2. "Revathi-Suresh granted divorce Deccan Chronicle". Archived from the original on 2013-05-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-24.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-09. பார்க்கப்பட்ட நாள் 2018-01-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவதி_(நடிகை)&oldid=3946637" இலிருந்து மீள்விக்கப்பட்டது