ரத்னா

இந்திய நடிகை

ரத்னா (Rathna, 19 ஆகத்து 1947 – 19 சனவரி 2022) இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரத்னா
பிறப்புபன்னா சி. ஷா
(1947-08-19)19 ஆகத்து 1947
இறப்பு19 சனவரி 2022(2022-01-19) (அகவை 74)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1961-1980
உறவினர்கள்ஜி. வரலட்சுமி (மாமி)

திரைப்படத் துறை

தொகு

இரத்தினா தனது 15-ஆவது அகவையில் 1964 இல் வெளிவந்த தொழிலாளி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.[1] இவர் 1965 இல் வெளிவந்த எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் கிராமப் பெண்ணாக எம்.ஜி.ஆருக்கு சோடியாக இரண்டாவது கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

நடித்த திரைப்படங்கள்

தொகு

தமிழ்

தொகு

கன்னடம்

தொகு
  • பரோபகாரி (1970)
  • பூபதி ரங்கா (1970)
  • யாவ ஜன்மத மைத்திரி (1972)
  • திரிவேணி (1972)
  • சுபத்திரா கல்யாணம் (1972)
  • சுவாமிஜி (1980)

தெலுங்கு

தொகு
  • குலேபகாவலி கதா (1962)
  • சிறீ கிருஷ்ணா பாண்டவீயம் (1966, இடும்பி)
  • மொனகள்ளக்கு மொனகாடு (1966, மாலா)

மறைவு

தொகு

ரத்னா தனது 74-வது அகவையில் சுகவீனமுற்றிருந்த நிலையில் 2022 சனவரி 19 அன்று காலமானார். இவருக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நடிகை ஜி. வரலட்சுமி இவரது மாமி ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னா&oldid=3481680" இலிருந்து மீள்விக்கப்பட்டது