அவதாரம் (1995 திரைப்படம்)

நாசர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அவதாரம், (Avatharam) 1995 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாசர் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படமே நாசர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நாசர், ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். வைத்தியநாதன் இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் சூன் 9, 1995 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது.[1][2][3]

அவதாரம்
இயக்கம்நாசர்
தயாரிப்புவைத்தியநாதன்
கதைநாசர்
இசைஇளையராஜா
நடிப்புநாசர்
ரேவதி
ஒளிப்பதிவுபீ. ஸ்ரீதரன்
படத்தொகுப்புஎம். என். ராஜா
கலையகம்கமலம் மூவிஸ்
வெளியீடுசூன் 9, 1995 (1995-06-09)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

குப்புசாமி (நாசர்) வெகுளியான மனிதன். அவனுக்கு பாண்டியினுடைய (டெல்லி கணேஷ்) நாடக குழுவில் இணைய வேண்டும் என்ற ஓர் கனவு இருந்தது. இவருடைய குழுவே இந்து சமய நிகழ்ச்சிகளில் பல கலைகளை ஆற்றிவந்தது. பாண்டியின் குழுவில் உள்ள வாசி என்பவனின் துர்நடத்தை காரணமாக பாண்டி அவனை குழுவை விட்டு நீக்கிவிட்டு குப்புசாமியை குழுவில் இணைத்துகொள்கிறார். பாண்டியின் மகள் பொன்னம்மா (ரேவதி) பார்வை அற்றவள். பின்னர் பொன்னம்மாவும் குப்புசாமியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மேடை நிகழ்ச்சிகளுக்கு பணம் கொடுப்போர் பெண்கள் மேடையில் ஆட வேண்டும் என விரும்புகிறார்கள். ஒரு மேடை நிகழ்ச்சியின் போது பாண்டி இறந்து போகவும் அவரின் குழுவில் இருதவர்கள் பிரிந்து சென்றனர். குப்புசாமியும் பொன்னம்மாவும் நடிகர்களாக மாறவேண்டும் என்ற நோக்குடன் ஊரைவிட்டு புறப்பட்டு வாசியுடன் போய் தங்குகின்றனர். ஆனால் வாசியோ பொன்னம்மாவை கற்பழித்துவிட்டு குப்புசாமியை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறான். அங்கிருந்து தப்பித்த குப்புசாமி வாசியைப் பழிவாங்குவது கதையின் இறுதி அம்சமாக இருந்தது.

நடிகர்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 1995 இல் இசை வெளியிடப்பட்டுள்ளது. ஆறு பாடல்கள் இதில் அடங்கியுள்ளது. இசையமைப்பிற்கு மூன்று நாட்களே எடுத்துக் கொள்ளப்பட்டது..[4][5][6][7] பாடல்வரிகள் வாலியால் எழுதப்பட்டுள்ளது.

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Filmography of avadharam". cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
  2. Sandya Krishna. "People". indolink.com. Archived from the original on 2012-04-27. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
  3. U. Bharat (21 மார்ச்சு 2001). "India4u - Tamil Cinema - Feature on Actor Nassar". india4u.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
  4. "Avatharam Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
  5. "Avatharam - Illayaraja". thiraipaadal.com. Archived from the original on 2013-02-04. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
  6. "Avatharam audio songs online". musicmazaa.com. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
  7. "Avatharam : Tamil Movie". hummaa.com. Archived from the original on 14 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவதாரம்_(1995_திரைப்படம்)&oldid=4118637" இலிருந்து மீள்விக்கப்பட்டது