சச்சு ( Sachu பிறப்பு 1943) சரஸ்வதி சுந்தரேசன் ஐயர் என்ற தனது பெயரை சச்சு என்று திரையுலகிற்காக சுருக்கமாக மாற்றி கொண்டார். இவர் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் பல்வேறு மொழிகளில் 500 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், நகைச்சுவை, கதாநாயகி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததே தமிழக ரசிகர்கள் மனதில் நிலைத்துவிட்டது.

சச்சு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒரு விருது வழங்கும் விழாவில் சச்சு பாராட்டு பரிசனை பெறுகிறார்
பிறப்புசரஸ்வதி சுந்தரேசன் ஐயர்
(சச்சு)

1943
புதுப்பாடி, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு
மற்ற பெயர்கள்குமாரி சச்சு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1953 – தற்போது
பெற்றோர்தந்தை : சுந்தரேசன் ஐயர்
தாயார் : ஜெயலட்சுமி
வாழ்க்கைத்
துணை
இல்லை

திரை வாழ்க்கை

தொகு
  • இவர் 1953 இல் பானுமதி நடித்த ராணி என்ற படத்தில் நான்கு வயதாக இருக்கும் பொழுதே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.[1]
  • இவர் 70களில் கொஞ்சம் பெரிய நடிகையாக வளர்ந்த போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான எம்ஜிஆர் அவர்களிடம் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்ட போது நீ கொஞ்சம் முக சாயலில் பத்மினி மற்றும் சரோஜாதேவி முகசாயலில் அழகாக இருந்தாலும் உன் குரல் மழலையின் தாக்கம் அதிகமாக உள்ளது அதாவது குழந்தை போல் உள்ளது என்று கூறிவிட்டார்.
  • அதன் பிறகு நீ தற்போது நடிக்கும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலே தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்து பிறகு நானே எனது திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க முன்மொழிகிறேன் என்று வாக்குறுதியை தந்தார் புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆனால் காலம் சச்சுவை இறுதி வரை தமிழ் திரையில் நகைச்சுவை கதாநாயகியாகவே கட்டியது.
  • மேலும் சச்சுவை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சுந்தரேசனின் சுந்தரி என்று கிண்டலாக பேசுவார்.
  • மேலும் சச்சு தமிழ் சினிமாவில் 60–70 காலகட்டத்தில் அன்றைய தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகர்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் திரைப்படங்களில் அன்றைய பிரபலமான நகைச்சுவை நடிகர்களான நாகேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன், சோ, சுருளி ராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோருடன் நடித்துள்ளார்.

விருதுகள் மற்றும் பரிந்துரை

தொகு
  • அதே போல் துணைவன் திரைப்படத்தில் இடுப்புவலி பாமாவாக நடித்ததை கண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

திரை வரலாறு

தொகு

சின்னத் திரை

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சு&oldid=3989338" இலிருந்து மீள்விக்கப்பட்டது