பானுமதி ராமகிருஷ்ணா

இந்திய நடிகை, பாடகி, இயக்குநர், இசையமைப்பாளர்
(பி. பானுமதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பி. பானுமதி (Paluvayi Bhanumathi Ramakrishna, பானுமதி இராமகிருஷ்ணா, 7 செப்டம்பர் 1925 – 24 டிசம்பர் 2005) பல மொழிகளில் நடித்த ஓர் இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரின் பெரும்பாலான திரைப்படப் பங்களிப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலேயே அமைந்திருந்தன. திரைப்படத்துறைக்கு இவராற்றிய பங்களிப்பிற்காக 2003ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டார்.

பானுமதி இராமகிருஷ்ணா
(பி. பானுமதி)
இந்திய அஞ்சல் தலையில் பானுமதி
பிறப்பு(1925-09-07)7 செப்டம்பர் 1925
ஓங்கோலிற்கு அருகிலுள்ள தோடவரம், பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு24 திசம்பர் 2005(2005-12-24) (அகவை 80)
சென்னை, இந்தியா
பணிநடிகை, பாடகி, எழுத்தாளர், இயக்குனர்
வாழ்க்கைத்
துணை
பி. எஸ். ராமகிருஷ்ண ராவ்

பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை தொகு

7 செம்படம்பர் 1925 அன்று ஆந்திராவில் உள்ள தோடவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் பானுமதி. அவர் சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய தந்தை அவருக்குக் கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக்கொடுத்தார். தன் முதல் படத்திலேயே தியாகராஜ கீர்த்தனைகள் பாடிப் புகழ் பெற்றார் பானுமதி.[1]

திருமணம் தொகு

1943 ஆம் ஆண்டு கிருஷ்ண பிரேமா படப்பிடிப்புக்காக சென்னை வந்தவர், அங்கு உதவி இயக்குனராக இருந்த பலுவை ராமகிருஷ்ணாவை சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். ஆனால் இவர்களின் காதலை பானுமதியின் பெற்றோர் எதிர்த்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஏ. ராமைய்யாவின் மனைவி கண்ணாமணி மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.[1]

திரைப்படத் துறை தொகு

திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பானுமதி முடிவெடுத்திருந்த நிலையில், பி. என். ரெட்டி தன்னுடைய ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார். ராமகிருஷ்ணாவும் இதைக் கடைசிப் படமாக நினைத்து நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் பானுமதி சம்மதித்தார். ஆனால் அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. அவர் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழில் ரத்னகுமார் படத்தில் பி. யூ. சின்னப்பாவுடனும், முக்தி படத்தில் தியாகராஜ பாகவதருடனும் இணைந்து நடித்தார். 1947இல் வெளிவந்த ரத்னமாலா பானுமதியும் அவர் கணவரும் இணைந்து தயாரித்த முதல் படம். 1952இல் அவர்கள் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினர். பானுமதி இயக்கிய முதல் திரைப்படம் சண்டிராணி. இது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டது.[1] 1992 ஆம் ஆண்டு வெளிவந்த 'செம்பருத்தி', தமிழில் அவரது கடைசிப் படம்.[1]

நடித்த திரைப்படங்கள் தொகு

இசையமைத்த திரைப்படங்கள் தொகு

விருதுகள் தொகு

பெற்ற சிறப்புகள் தொகு

  • தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

இறப்பு தொகு

பானுமதி 2005 டிசம்பர் 24 சனிக்கிழமை இரவு காலமானார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "பானுமதி - முழுமையான சினிமா ஆளுமை". தி இந்து. 11 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2013.
  2. "Department of Arts and Culture". பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2013.
  3. "Veteran actor-director P. Bhanumathi passes away". The Hindu. 26 டிசம்பர் 2005 இம் மூலத்தில் இருந்து 2006-02-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060208191448/http://www.hindu.com/2005/12/26/stories/2005122606471500.htm. பார்த்த நாள்: 12 அக்டோபர் 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானுமதி_ராமகிருஷ்ணா&oldid=3766391" இலிருந்து மீள்விக்கப்பட்டது