ராஜா தேசிங்கு (1960 திரைப்படம்)
ராஜா தேசிங்கு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் வரலாற்று வீரர் தேசிங்கு ராஜாவை பற்றியது. இதே கதையினை ஒட்டி 1936-ஆம் ஆண்டும் இதே தலைப்பில் "ராஜா தேசிங்கு" என்ற படம் வெளியாயிற்று.
ராஜா தேசிங்கு | |
---|---|
![]() | |
இயக்கம் | டி. ஆர். ரகுநாத் |
தயாரிப்பு | லெட்சுமணன் செட்டியார் |
கதை | கண்ணதாசன் (கதை) மக்களன்பன் (வசனம்) |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் எஸ். எஸ். ராஜேந்திரன் பி. பானுமதி பத்மினி |
விநியோகம் | கிருஷ்ணா பிலிம்சு |
வெளியீடு | 1960 |
மொழி | தமிழ் |
உசாத்துணைதொகு
- Raja Desingu (1960), ராண்டார் கை, தி இந்து, ஆகஸ்ட் 15, 2015