டி. ஆர். ரகுநாத்

டி. ஆர். ரகுநாத் (T. R. Raghunath, திமாச்சிபுரம் ராஜகோபால் ரகுநாத், 16 சூலை 1912 – 2 சனவரி 1990) தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். கிட்டத்தட்ட 30 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ராஜா சந்திரசேகரின் இளைய சகோதரர் ஆவார்.[3]

டி. ஆர். ரகுநாத்
பிறப்புதிமாச்சிபுரம் ராஜகோபால் ரகுநாத்
(1912-07-16)16 சூலை 1912
திருவனந்தபுரம், திருவிதாங்கூர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு[1]
இறப்பு2 சனவரி 1990(1990-01-02) (அகவை 77)
பணிதிரைப்பட இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
எம். எஸ். சரோஜா[2]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

ரகுநாத் 1935 ஆம் ஆண்டில் ஞானசௌந்தரி திரைப்படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். சிறினிவாசா சினிடோனுக்காக 1936 இல் தாரா சசாங்கம் திரைப்படத்தில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் கிழட்டு மாப்பிள்ளை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 1940களில் ம. கோ. இராமச்சந்திரன் இவரது சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் தோன்றி நடித்தார். 1960 இல் ம. கோ. இராமச்சந்திரன் நடித்த ராஜா தேசிங்கு திரைப்படத்தை இயக்கினார்.[1] கண்ணகி (1942) திரைப்படத்தில் டி. ஆர். ரகுநாத் நடனக் காட்சியை அமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் மாதவியாக நடித்த எம். எஸ். சரோஜாவைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.[4]

ரகுநாத் பின்னர் கற்பகம் கலையகத்தில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றினார், அதன் பிறகு அவர் இந்தியத் திரைப்படப் பிரிவின் மதராசுக் கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1]

இயக்கிய திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
1936 கிழட்டு மாப்பிள்ளை சீனிவாசா சினிட்டோன்
1939 ஜோதி ஜோதி பிக்சர்சு
1941 வேதவதி (சீதா ஜனனம்) சியாமளா பிக்சர்சு
1942 தமிழறியும் பெருமாள் உமா பிக்சர்சு
1944 மகாமாயா யுப்பிட்டர் பிக்சர்சு
பிரபாவதி கிருஷ்ணா பிக்சர்சு
1946 அர்த்தநாரி கலைவாணி பிலிம்சு
மதராசு யுனைட்டட் ஆர்ட்டிசுட்டு கார்ப்பரேசன்
1947 உதயணன் வாசவதத்தா உமா பிக்சர்சு
1951 வனசுந்தரி கிருஷ்ணா பிக்சர்சு
சிங்காரி நேசனல் புரொடக்சன்சு
1952 மாப்பிள்ளை நேசனல் புரொடக்சன்சு
1954 விளையாட்டு பொம்மை சிறீ சுகுமாரன் புரொடக்சன்சு
1955 கணவனே கண்கண்ட தெய்வம் நாராயணன் கம்பனி
மகேஸ்வரி மாடர்ன் தியேட்டர்ஸ்
1956 மர்ம வீரன் மெகுபூப் கலையகம்
1957 அலாவுதீனும் அற்புத விளக்கும் ஜெய் சக்தி பிக்சர்சு
ராணி லலிதாங்கி டி. என். ஆர். புரொடக்சன்சு
யார் பையன் விஜயா பிலிம்சு
1958 கன்னியின் சபதம் யுப்பிட்டர் பிக்சர்சு
மாங்கல்ய பாக்கியம் கிருஷ்ணா பிக்சர்சு
1959 வண்ணக்கிளி மாடர்ன் தியேட்டர்ஸ்
1960 அன்புக்கோர் அண்ணி பிலிம் சென்டர்
ராஜா தேசிங்கு கிருஷ்ணா பிக்சர்சு
1961 மருதநாட்டு வீரன் சிறீ கணேசு பிரசாத் மூவீசு
1962 கவிதா மாடர்ன் தியேட்டர்ஸ்
விக்ரமாதித்தன் ஜெயபாரத் புரொடக்சன்சு
1971 லோரா நீயேவிதே (மலையாளம்) எக்செல் புரொடக்சன்சு
திருமகள் கோவிந்தராஜா பிலிம்சு
1972 மாப்பிள்ளை அழைப்பு
1974 அங்கதாட்டு (மலையாளம்) அசீம் கம்பனி

திரைக்கதைகள் தொகு

ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
1942 தமிழறியும் பெருமாள் உமா பிக்சர்சு
1955 உலகம் பலவிதம் (திரைக்கதை) நேசனல் புரொடக்சன்சு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Rajadhyaksha & Willemen 1998, ப. 183.
  2. Rao, Sandhya (14 November 2013). "Breathing Jeeva into stories". பிசினஸ் லைன். http://www.thehindubusinessline.com/news/variety/breathing-jeeva-into-stories/article5347759.ece. 
  3. ராண்டார் கை (5 October 2013). "The forgotten heroes". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/the-forgotten-heroes/article5204125.ece. 
  4. "Kannagi 1942". The Hindu. Archived from the original on 23 August 2014. பார்க்கப்பட்ட நாள் 12 September 2015.

உசாத்துணைகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._ரகுநாத்&oldid=3937737" இலிருந்து மீள்விக்கப்பட்டது