கண்ணகி (திரைப்படம்)

கண்ணகி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்க் காப்பியத் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எம். சோமசுந்தரம், ஆர். எஸ். மணி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, ப. கண்ணாம்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

கண்ணகி
இயக்கம்ஆர். எஸ். மணி,
எம். சோமசுந்தரம்
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
எம். கந்தசாமி
கதைஇளங்கோவன் (உரையாடல்)
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புபி. யு. சின்னப்பா
டி. பாலசுப்பிரமணியம்
என். எஸ். கிருஷ்ணன்
எம். ஆர். சுவாமிநாதன்
பி. கண்ணாம்பா
எம். எஸ். சரோஜா
டி. ஏ. மதுரம்
யு. ஆர். ஜீவரத்னம்
விநியோகம்சவுத் இந்தியா பிக்சர்சு
வெளியீடு22 ஆகத்து 1942 (1942-08-22)[1]
ஓட்டம்228 நிமி.[1]
நீளம்20000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாத்திரங்கள்தொகு

நடிகர் பாத்திரம்
பி. யு. சின்னப்பா கோவலன்
ப. கண்ணாம்பா கண்ணகி
எம். எஸ். சரோஜா மாதவி
டி. பாலசுப்பிரமணியம் பாண்டிய மன்னன்
எம். ஆர். சுவாமிநாதன் வஞ்சிப்பத்தன்
டி. வி. நமசிவாயம் பால கோவலன்
கே. என். குளத்துமணி மாச்சோட்டான்
கே. என். ராமலிங்கம் நல்மந்திரி
வி. ரமணி துர்மந்திரி
டி. ஆர். ராமச்சந்திரன் சாத்திரி
என். எஸ். கிருஷ்ணன் இஞ்சிப்பத்தன்
குமாரி ரத்தினம் பால கண்ணகி
யூ. ஆர். ஜீவரத்தினம் கௌந்தி அடிகள்
எம். எம். ராதாபாய் பாண்டிய அரசி
டி. ஏ. மதுரம் வஞ்சிப்பத்தன் மகள்
கே. டி. சக்குபாய் இஞ்சிப்பத்தன் மனைவி

பாடல்கள்தொகு

கண்ணகி திரைப்படத்தின் பாடல்களை உடுமலை நாராயணகவி எழுத, எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார். திரைப்படத்துக்குப் பின்னணி இசை வழங்கியவர்கள் கே. வி. நாயுடு குழுவினர்.[3] டி. ஏ. ஜெயலட்சுமி, கே. ஆர். ஜெயலட்சுமி ஆகியோர் நடனமாடியிருந்தனர். டி. ஆர். ரகுநாத் நடனக் காட்சியை அமைத்திருந்தார். டி. ஆர். ரகுநாத் மாதவியாக நடித்த எம். சரோஜாவைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.[4]

"வளர்கோட்டு இளம் பிறையும்" என்ற பாடலில் மாசிலா ஆன் கன்று வயது வந்து பசுவாகி .. என ஒரு வரி உள்ளது. ஆன் என்பது பசு. ஆன் கன்று என்றால் பசுங்கன்று. சில பாட்டுப் புத்தகங்களில் ஆன் என்பதற்குப் பதிலாக ஆண் என்று அச்சிட்டுள்ளார்கள். அச்சில் உள்ள பொருட்குற்றத்தை எடுத்துக்காட்டவே இந்த விளக்கம்.

பாடல் பாடியவர் இராகம்
பூதலம் புகழ் ஜோதி நிலவும் யூ. ஆர். ஜீவரத்தினம் பூபாளம்
வளர்கோட்டு இளம் பிறையும் டி. வி. நமசிவாயம் விருத்தம் - ராகமாலிகை
சந்த்ரோதயம் இதிலே காணுவதும் பி. யு. சின்னப்பா சங்கராபரணம்
மரமேசுவரனே தேவா கண்ணகி பூசை மாண்டு
தேவி மனோகரியான ஸ்ரீமதி பி. யு. சின்னப்பா மாண்டு
அன்பில் விளைந்த அமுதமே பி. யு. சின்னப்பா நவரச கன்னடம்
மாலாகினாள் சுவாமி மங்கையும் உன் மேலே எம். எஸ். சரோஜா காம்போதி
அதிரூபமான பெண் உனக்கேற்பவே நடப்பாள் தோழிகள் பைரவி
இவர் தானா இவர் தானா எம். எஸ். சரோஜா கமாஸ்
ஓதும் காலம் கடந்த வல் விதியை யூ. ஆர். ஜீவரத்தினம் இந்துத்தானி பைரவி
வந்தனள் ஒரு சுந்தரி பி. யு. சின்னப்பா தேசிகச் சிந்து
விதியதாம் மாறாததாம் மகளே யூ. ஆர். ஜீவரத்தினம் மிஸ்ர சாரங்
தேவமகள் இவள் யார் பி. யு. சின்னப்பா பகாதி
மலர் மாரனோ தேவ மாயனோ எம். எஸ். சரோஜா செஞ்சுட்டி
மானமெல்லாம் போனபின்னே பி. யு. சின்னப்பா மிஸ்ர சாமா
ஆரண்யலாவண்யமே அருமையே பி. கண்ணாம்பா யமன் கல்யாணி
பத்தினியே உன்போல் இத்தரை மீதினில் பி. யு. சின்னப்பா சகானா
மாநில மீது ஜீவர்கள் வாழும் யூ. ஆர். ஜீவரத்தினம் பெகாக்
நண்டு சிப்பி வேய் கதலி பி. யூ. சின்னப்பா செஞ்சுருட்டி
தயாபரி சகாயம் நீ செய்யாவிடில் பி. கண்ணாம்பா இந்துத்தானி பைரவி
கண்ணா கமலக் கண்ணா - -

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Dhananjayan 2014.
  2. Kannagi 1942, தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை
  3. கண்ணகி பாட்டுப் புத்தகம், சக்தி பிரசு, காரைக்குடி, 1942
  4. "Kannagi 1942". The Hindu. மூல முகவரியிலிருந்து 23 August 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12-09-2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணகி_(திரைப்படம்)&oldid=3085321" இருந்து மீள்விக்கப்பட்டது