இளங்கோவன் (திரைக்கதை எழுத்தாளர்)

இளங்கோவன் (இயற்பெயர்: தணிகாசலம்) என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர், திரைப்பட திரைக்கதை, உரையாடல் ஆசிரியர், மற்றும் தயாரிப்பாளராவார்.

இவர் மணிக்கொடி இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் புதுமைப்பித்தனுடன் தினமணியில் துணையாசிரியர்களாகப் பணியாற்றியவர்.[1] 1937இல் தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி படத்துக்கு உரையாடல் எழுத வாய்ப்பு வந்ததையடுத்து, அப்படத்துக்கு முதன் முதலாக உரையாடல் எழுதினார். அவரது இலக்கிய நயமிக்க உரையாடல் மிகப்புகழ்வாய்ந்ததாக மாறியது. குறிப்பாக 1942இல் அவர் கண்ணகி படத்தில் கண்ணகி பாண்டியனின் அரசவையில் வழக்குரைக்கும் காட்சிக்கு அவர் எழுதிய வசனங்கள் சிகரத்தைத் தொட்டதாக பாராட்டுகளைப்பெற்றார். இவர் தன் இறுதிக் காலத்தின் பொருளாதார்ரீதியாக நலிவுற்றார்.[2] இவர் சுமார் 30 படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார். 1961 இல் இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை அளித்தது.

உரையாடல் எழுதிய படங்கள் தொகு

திரைக்கதை உரையாடல் எழுதியவை தொகு

கதை உரையாடல் தொகு

தயாரித்த திரைப்படம் தொகு

  • மானம் காத்த மனைவி

மேற்கோள்கள் தொகு

  1. முத்துலிங்கம் (28 ஆகத்து 2017). "வசனமா வசன கவிதையா". கட்டுரை. தினமணி. 13 ஆகத்து 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "இளங்கோவன் டைரக்டர் ஆனார்: சோமுவுடன் இணைந்து மஹாமாயாவை இயக்கினார்". கட்டுரை. மாலை மலர். 15 சூன் 2016. 13 ஆகத்து 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

இளங்கோவன் பற்றி, இது தமிழ். இணைய தளத்தில் கிருஷ்ணன் வெங்கடாசலம்