இன்பவல்லி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இன்பவல்லி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், எஸ். நோடானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. எஸ். சரோஜா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர். ஆர். ஆர். ராஜகோபால ஐயர் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமனாதன் இசையமைத்தார். சேலம் ரத்னா ஸ்டூடியோவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இன்பவல்லி | |
---|---|
இயக்கம் | எஸ். நொடானி |
தயாரிப்பு | சியாமளா பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை ஆர். சி. பிள்ளை கதை பி. ஏ. குமார் உரையாடல் இளங்கோவன் |
இசை | ஜி. ராமனாதன் |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் என். எஸ். கிருஷ்ணன் எம். ஆர். சுவாமிநாதன் ஈ. ஆர். சகாதேவன் பி. எஸ். சரோஜா பி. கே. சரஸ்வதி டி. ஏ. மதுரம் எஸ். மேனகா |
ஒளிப்பதிவு | வசந்தராவ் |
வெளியீடு | செப்டம்பர் 16, 1949 |
நீளம் | 15465 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |