கோகுலதாசி

கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கோகுலதாசி (Gokuladasi) 1948ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், என். கிருஷ்ணமூர்த்தி, லலிதா, பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

கோகுலதாஸி
சுவரொட்டி
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
திரைக்கதைகே. சுப்பிரமணியம்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்[1]
நடிப்புகொன்னப்ப பாகவதர்
எம். வி. ராஜம்மா
டி. ஆர். இராமச்சந்திரன்
என். கிருஷ்ணமூர்த்தி
லலிதா
பத்மினி
ஒளிப்பதிவுபி. எல். ராய்
படத்தொகுப்புஆர். ராஜகோபால்
கலையகம்மெட்ராஸ் யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன்
விநியோகம்மெட்ராஸ் யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன்
வெளியீடு31 நவம்பர் 1948 (1948-11-31)(India)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

காமரூபன் (ஹொன்னப்ப பாகவதர்) என்ற அரசன் தனது முற்பிறவியில் பார்வதி தேவியின் சாபத்தின் காரணமாக, கோகுலம் நகரத்தில் நகைக்கடைக்காரராக பிறந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு அந்நகரத்திலுள்ள தேவதாசி அனுராதாவின் (ராஜம்மா) மீது நாட்டமுள்ளது . மற்றொருபுறம், அனுராதா, தனது முந்தைய பிறப்பில் பார்வதி தேவி மீது பக்தி கொண்ட பாடகி மற்றும் நடன கலைஞராகவும் இருந்துள்ளார். ஒரு சமயம், நாரதரை (ஹொன்னப்ப பாகவதர் ) அவமானபடுத்தியதற்காக அவரால் சபிக்கப்பட்டு, மறுபடியும் அனுராதாவாக பிறந்தார். அனுராதா தனது முந்தைய பிறப்பு ஞாபகங்களை உணராதிருப்பதை கண்டு பாகவதர் அவருக்கு அதை நினைவு படுத்த முயற்சிக்கிறார். இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு, பகவான் கிருட்டிணன் (பத்மினி) கொண்டு செல்லும் வழிமுறைகள் நகைச்சுவையாகவும், தேவதாசியின் சாபத்தை போக்குவதை நோக்கியும் கதை செல்கிறது.

நடிப்பு தொகு

பிலிம் நியூஸ் ஆனந்தன் மற்றும் தி இந்து தகவல் தொகுப்பிலிருந்து பெறப்பட்டது.[1][2]

நடனம் தொகு

படத்தயாரிப்பு தொகு

கே. சுப்பிரமணியம் தன்னுடைய மெட்ராஸ் யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் என்ற தனக்கு சொந்தமான நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியுள்ளார் [1] கதை, வசனம் இளங்கோ என்பவருடன் இணைந்து இவரும் எழுதியுள்ளார்.[1][2] நெப்டியூன் ஸ்டுடியோஸில் படத்திற்கான முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டது. திரைப்படத்தின் இணை இயக்குநர்களில் ஒருவர் எல். கிருஷ்ணன் ஆவார், இவர் பின்னாளில், மலேசிய திரைப்படவரலாற்றில் ஒரு முக்கிய திரைப்பட தயாரிப்பாளராக ஆனார். தடுக் என்ற கௌரவத்தையும் பெற்றார்..[2]

ஒலித் தொகுப்பு தொகு

எஸ். வி. வெங்கட்ராமன் அவர்கள் பாடல்களுக்கு இசைக்க பாபநாசம் சிவன் மற்றும் ராஜகோபால் அய்யர் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர்.

விமர்சனம் தொகு

திரைப்பட வரலாற்றாசிரியர் ரண்டர் கை, கோகுலதாசி ,திருவாங்கூர் சகோதரிகளின் மகிழ்ச்சியான இசை, பாடல் மற்றும் நடனங்களை நினைவுபடுத்தியது, ராஜம்மா, ஹொன்னப்ப பகவதார் மற்றும் டி. ஆர். ராமச்சந்திரன் ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தது என எழுதியுள்ளார்.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Film News Anandan (23 அக்டோபர் 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 29 மே 2017. {{cite book}}: Unknown parameter |deadurl= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 2.3 Randor Guy (29 January 2012). "Gokuladasi 1949". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170529080712/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/gokuladasi-1949/article13385074.ece. பார்த்த நாள்: 29 May 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுலதாசி&oldid=3793925" இலிருந்து மீள்விக்கப்பட்டது