நாரதர்
நாரதர் அல்லது நாரத முனி (ஆங்கிலம்: Narada; சமஸ்கிருதம்: नारद) வைணவ சமயத்தின் ஒரு முனிவர் ஆவார். இவரைப் பற்றியச் சிறப்புகள் பாகவதப் புராணம், இராமாயணம், போன்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகமவிதிகளைப் பற்றி நாரதர் எழுதிய பஞ்சரத்ரா எனும் நூல் வைணவ மூர்த்தங்களுக்கு பூசைசெய்யும் முறைகளை விளக்கியுள்ளது. ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் மத்தியில் இந்நூல் மிகவும் முக்கியமானது. இதற்குக் காரணம் அவர்களும் இதே நாரதக் குருப் பரம்பரையில் வந்தவர்கள். நாரதர் எப்பொழுதும் தன்னுடன் ஒரு வீணையும் வைத்திருப்பார். நாராயண என்ற திருமாலின் நாமத்தை எப்போதும் சொல்வார். பக்தி யோகா முறையையும், நாரத பக்தி சூத்திரங்களையும் இவர் இயற்றியுள்ளார். நாரதஷ்ம்ரிதி எனும் தருமசாச்திரத்தையும் இவர் வழங்கியுள்ளார். இது துறவறம் மற்றும் தவத்தின் முறைகளை எடுத்தியம்புகிறது.
நாரதர் | |
---|---|
![]() நாரத முனிவர் | |
அதிபதி | பிரபஞ்சத்தின் ரிஷி |
தேவநாகரி | नारद |
வகை | விஷ்ணு பக்தர், தேவ ரிஷி |
இடம் | பிரம்மலோகம் மற்றும் விஷ்ணுலோகம் |
மந்திரம் | ஓம் நாரதாய நமஹ |
பெற்றோர்கள் | பிரம்மன் (தந்தை) |
நூல்கள் | நாரத புராணம் |
விழாக்கள் | நாரத ஜெயந்தி |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Possibly_Narada%2C_the_inventor_of_the_Vina..jpg/220px-Possibly_Narada%2C_the_inventor_of_the_Vina..jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Sage_Sanathkumar_teaching_Narada_muni.jpg/220px-Sage_Sanathkumar_teaching_Narada_muni.jpg)
பிறப்பு
தொகுஇவர் பிரம்மாவின் மானச புத்திரனாக கருதப்படுகிறார். முற்பிறவியில் கந்தர்வனாக பிறந்த இவர், ஒரு சாபத்தால் அடுத்தப்பிறவியில் ஒரு முனிவரின் வீட்டில் பிறந்தார். அங்கு விஷ்ணு புராணத்தைப் படித்து தேர்ச்சிபெற்ற இவர் பின்பு பரமாத்மாவை நினைத்து தவமிருந்து விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்றார். விஷ்ணுவின் ஆசீர்வாதத்தால் நினைக்கும் பொழுது அவரது தரிசனம் பெறும் பாக்கியத்தையும் பெற்றார்.
சிறப்பு
தொகுஇவர் கந்தர்வ குலத்தில் பிறந்து ரிஷியானதால் இவரை தேவரிஷி என்று வேதங்கள் கூறுகின்றன. விஷ்ணு புராணத்தின் படி பன்னிரண்டு மகாஜனங்களில் இவரும் ஒருவர். நாரதர் முக்காலங்களையும் மூன்று லோகங்களையும் கடந்து செல்லக்கூடியவராகவே எல்லா புராணங்களும் கூறுகின்றன. எனவே அவரை திரிலோக சஞ்சாரி என்றும் அழைப்பர். போகும் இடங்களில் கலகங்களை தொடங்கிவைப்பதால் இவரை கலகப்பிரியர் என்றும் கூறுவார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "நாரதர் வரலாறு". தினகரன். 21 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)