பாகவத புராணம் என்பது பதினெண் புராணங்களில் ஐந்தாவது புராணமாகும். இது பகவான் என வைணவர் போற்றும் திருமாலின் அவதாரம் பற்றிக் கூறுவது. இதனை வடமொழி நூல்கள் ஏழு வகையான கோணத்தில் செய்துள்ளன. அவற்றுள் இரண்டு வகையான நூல்-பாங்கினை மட்டுமே தமிழ் பின்பற்றியுள்ளது.

வடமொழியிலுள்ள பாகவத புராண நூல்வகைகள்

  1. இதிகாசம்
  2. உப-சங்கிதை
  3. கௌதம-சங்கிதை
  4. சங்கிதை
  5. புராணம்
  6. விஷ்ணு-யாமளம்
  7. விஷ்ணு-ரகசியம்

இவற்றுள் இதிகாசம், புராணம் என்னும் இரண்டு வகையான நூல்கள் மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன[1].

பாகவதம்

வடமொழியில் வியாசர் எழுதிய பாகவதம் என்னும் நூல் திருமாலின் ஆறு அவதாரங்களையும் 25 கீதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு 36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது.

இதனை அருளாளதாசர் என்பவர் 130 சருக்கங்களில் 9147 பாடல்களால், 16ஆம் நூற்றாண்டில் தமிழில் பாடியுள்ளார். அருளாளதாசர் பாகவதம் என்னும் இந்த நூலில் உள்ள கதைச்செய்திகளை மு. அருணாசலம் சுருக்கமாகத் தந்துள்ளார். அவை பொருள் நோக்கில் பகுக்கப்பட்டு இங்குத் தரப்படுகிறது.

தொடக்கம்

  • முனிவர், கஜேந்திர மோட்சம், வராக அவதாரம், கபிலமுனி வரலாறு, நரசிங்க அவதாரம், துருவன், மச்சாவதாரம், கூர்மாவதாரம் [2]
  • உலகங்கள், தீவுகள் உண்டானது [3]
  • பிருதுச் சக்கரவர்த்தி, இடபராசன், வாமன அவதாரம், அஜாமினன், உருக்குமாங்கதன், அம்பரீடன், பரசுராம அவதாரம், இராகவன் அவதாரம், [4]
  • விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மணியை கடத்தி திருமணம் செய்தல் [5]
  • அக்ரூரன், சமந்தகன் வரலாறு [6]

கண்ணன் பிள்ளைமை

  • கண்ணன் பிறக்கிறான். அவன் படத்தை உருக்குமணி காண்கிறாள். (நாரதன் கூற்று) [7]
  • கம்சன் தங்கை தேவகி திருமணம். குழந்தைகள் கொல்லப்படல். எட்டாவது குழந்தை கண்ணன் யசோதையிடமும், உரோகினி பெற்ற பெண் குழந்தை தேவகியிடமும் வசுதேவரால் இடம் மாறல். பெண் குழந்தையைக் கொல்லும்போது அக்குழந்தை பறத்தல். கம்சனைக் கொல்லக் கண்ணன் வளர்கிறான் எனல்.[8]
  • கண்ணன் வெண்ணெய் திருடுதல், அவன் வயிற்றில் உலகம் காணுதல் [9]
  • ததிபாண்டன் முத்தி [10]
  • கண்ணன் தானே ஆயர் சிறுவனாயும், கன்றுகளாயும் இருந்து மாயை காட்டுதல் [11]
  • கோபியர் ஆடை கவர்தல், [12]

கண்ணன் மனைவியர்

  • கும்பகன் பெண் நப்பின்னையை, ஏழு காளைகளை அடக்கி மணத்தல் [13]
  • அரசன் இரவேகன் மகள் இரேவதியை மணத்தல் [14]
  • கண்ணன் குணாதிசயங்களை நாரதன் சொல்லக் கேட்டு உருக்குமணி உருகல் [15]
  • விதர்ப்பராசன் தன் மகளைக் கண்ணனுக்குத் தர எண்ணுகிறான். அவன் மகன் 'உருக்குமி' அவளைச் சிசுபாலனுக்குக் கொடுக்க முடிவு செய்து ஓலை அனுப்புகிறான். உருக்குமணி கண்ணனுக்கு ஓலை அனுப்புகிறாள். தாய் உருக்குமணியைக் கோயிலுக்குக் கூட்டிச் சென்று அங்கு வந்த கண்ணனிடம் ஒப்படைக்கிறாள் [16]
  • உருக்குமி படைகொண்டு தாக்குகிறான். பலராமன் உருக்குமியின் மார்பில் தாக்கி அவன் தலையை முறிக்கப் போகும்போது உருக்குமணி வேண்டுகோளின்படி அவனை மானபங்கப்படுத்தி விட்டுவிட்டுத் துவாரகை மீள்கிறான் [17]
  • உருக்குமணி திருமணம் [18]
  • சாம்பவதியையும், சத்தியபாபாவையும் மணத்தல் - மிகச் சிறந்த 'சமந்தக மணி ஒன்றை, சத்தராசத்து என்னும் மன்னவன் வைத்திருந்தான். கண்ணன் அதனைத் தனக்குக் கேட்டான். மன்னன் கொடுக்கவில்லை. அவன் தம்பி அதனை அணிந்துகொண்டு காட்டில் வேட்டையாடச் சென்றான். சிங்கம் ஒன்று அவனைக் கொன்று மணியோடு இழுத்துச் சென்றது. கரடி அரசன் சாம்பவான் அந்தச் சிங்கத்தைக் கொன்று மணியைத் தன் மகள் சாம்பவதிக்குக் கொடுத்தான். கண்ணன் சாம்பவதியை மணந்து அந்த மணியைத் தனதாக்கிக்கொண்டான். நிகழ்ந்ததை அறிந்த மன்னன் சத்தராசித்து தன் மகள் சத்தியபாமை என்பவளையும் கண்ணனுக்கு மணம் செய்துவைத்தான். [19]
  • கண்ணன் தன்னை விரும்பித் தவம் செய்த 'காளிந்தி' என்பவளை மணந்தான். [20]
  • மித்திர விந்தை என்பவளின் சுயம்வரத்துக்குச் சென்று அவளைக் கண்ணன் மணந்தான். [21]
  • ஏழு காளைகளை அடக்கி 'நாக்கின சிந்து' என்பவளை மணந்தான். [22]
  • பத்திரை என்ற பெண்ணை மணந்தான். [23]
  • வில் வளைத்து மச்சமீனை வீழ்த்தி இலக்கணை என்பவளை மணந்தான். [24]
  • உருக்குமி கல்யாணம் [25]
  • கண்ணன் ஒரே நேரத்தில் 16,000 கோபிமாருடன் கூடி வாழ்ந்திருத்தலை நாரதன் காணுதல் [26]

கண்ணன் வதை செய்தல்

  • இந்திர தனுவை ஒத்த ஒரு தனுவை எடுத்து ஒடித்தல், சூழ்ந்துவந்த சேனையை அழித்தல்,[27]
  • பூதனை, சகடாசுரன், காலியாகரன், குக்குடாகரன் வதை,[28]
  • மருதமரமாக வந்த அசுரர், பகாசூரன், அகாசூரன் வதை,[29]
  • தேனுகன் வதை, காளியமர்த்தனம்,[30]
  • அருட்டாசுரன், கேசி, வியோமணன் வதை,[31]
  • தாருகன் வதை,[32]
  • கம்சன் செய்யும் கொலை முயற்சி, குவலயாம்பீடம், சாணூரன், கம்சன் வதை,[33]
  • கம்சன் வதை கேட்டு அவன் மாமனாகிய ஜராசந்தன் படையொடு வந்து கண்ணனோடு போரிட்டுத் தோற்றோடுதல்,[34]
  • முனிவர்க்குத் தீங்கிழைத்த அசுரர் கோமான் சிரகாளனை அழித்தல்,[35]
  • காளயமன் வதை,[36]
  • சத்தியபாமாவின் தந்தையைச் சதத்தனுவா என்பவன் கொன்றான். எனவே சதத்தனுவாவைக் கண்ணன் வதைத்தான்,[37]
  • நரகாசுரன் வதை,[38]
  • பௌண்டரன் வதை, கதரிக்கனன் வதை, துவிந்தன் வதை,[39]
  • அங்கிசமன் திபிகன் வதை,[40]
  • சிசுபாலன், சாலுவன், தந்தவக்ரன் வதை.[41]

கண்ணனின் மகன் & பேரன் திருமணங்கள்

  • கண்ணன் மகன் சாம்பன் திருமணங்கள்:
    • பலராமனுக்கு அஞ்சி, துரியோதனன் தன் மகள் இலக்கணை என்பவளை, கண்ணன் மகன் சாம்பனுக்கு மணம் செய்து கொடுத்தல்,[42]
    • வானகன் என்பவனோடு போரிட்டு அவன் மகள் உடாங்கனை என்பவளைத் தனு மகன் சாம்பனுக்கு மணம் முடித்துவைத்தல்,[43]
  • கண்ணனின் பேரன் அனிருத்தன் திருமணம்: அனிருத்தனை மாயவித்தனமாக கடத்தி வைத்த பானாசூரன் மகள் உஷஸ்சுடன் திருமணம் செய்வித்தல்.

பாண்டவர் கதை

  • பாண்டவர்க்கு நேர்ந்த இன்னல்களை அக்ரூரன் சொல்லக் கேட்டல்,[44]
  • தருமன் இராசசூய யாகம் செய்தான். அப்போது தன்னை எதிர்த்த சிசுபாலனைவதைத்தல்,[45]
  • சூதில் தோற்ற பாண்டவர் மனைவி திரௌபதிக்கு வஸ்திரம் வளர அருள் பாலித்தல்,
  • பாண்டவர் வனவாசம்[46]
  • தருமபுத்திரனுக்கு வியாசர் குருகுல வரலாறு சொல்லுதல்,[47]
  • தட்ச யாக அழிவை வியாசர் கூறுதல்,[48]
  • பார்த்தன் சிவனை நோக்கித் தவம் செய்து பாசுபதார்த்தம் பெறுதல், ஊர்வசியின் சாபம் பெறுதல்,[49]
  • பீமன் மந்தார மலர் பெற்று வருதல்,[50]
  • சிறை பட்ட துரியோதரனை விடுவித்தல், சயித்திர பங்கம், நச்சுப் பொய்கை வரலாறு,[51]
  • விராடநகரம் வாசம், கீசகன் வதம்,[52]
  • கண்ணன் தூது,[53]
  • மகாபாரதப் போர்,[54]
  • பலராமன் தீர்த்த யாத்திரை,[55]
  • துரியோதனன் வதை.[56]

கண்ணன் அருள்

  • வனத்தில் இருந்த வேதியர் மனைவியருக்கு அருள் செய்தல்,[57]
  • கோவர்த்தன கிரியைத் தூக்கல், மழையிலிருந்து காத்தல், குழல் ஊதுதல்,[58]
  • அம்பிகா வனத்தில் நந்தனை நாகம் பற்றி விழுங்க, கண்ணன் திருவடி பட்ட மாத்திரத்தில் நாகம் வித்தியாதரன் ஆகி விமானத்தில் செல்லல்,[59]
  • சுதாமகா-வுக்கு அருளுதல்,[60]
  • திரீவக்கிரி என்ற கூனிக்கு அருளுதல்,[61]
  • உக்கிரசேணன் முடிசூடுதல், இறந்துபோன பிள்ளையை வருணனிடமிருந்து பெற்று, தந்தை சாந்தீப முனிவருக்குக் குரு தட்சணையாகக் கொடுத்தல்,[62]
  • கண்ணன் மதுராவில் இருக்கும்போது இடங்கன் கோகுலம் சென்று கண்ணன் பழகிய ஆனிரைகளைப் பேணுதல்.[63]

பொது

  • பெலம்பன் கதை,[64]
  • உத்தரை வயிற்றில் பரிச்சித்து பிறத்தல்,[65]
  • மிதிலை மன்னனுக்கு அருள்,[66]
  • குசேலர் அருள் பெற்றது,[67]
  • தசாவதார நடிப்பு, அந்தணன் புதல்வனை மீட்டது,[68]
  • உபதேசப் படலம், அதில் யாதவர் சாபம் பெறுதல், உத்தவன் கேட்கும் வின்னாக்களுக்குக் கண்ணன் உபதேசம் செய்தல்,[69]
  • உத்தவருக்கு உத்தவ கீதை உபதேசித்தல்,
  • துவாரகையில் இருந்தோர் முத்தி அடைதல்,[70]
  • மார்க்கண்டேயன் வரலாறு, விருகாசுரன்,[71]
  • பரீச்சித்து மோட்சம் அடைதல், சனமேயன் தந்தைக்குக் கடன் ஆற்றி, பாகவதம் கேட்டு முத்தி அடைதல்,[72]
  • பாரிசாத மலரைப் பெற்றுச் சத்தியபாமைக்குக் கொடுத்தல்,[73]
  • சுபத்திரையை அருச்சுணனுக்கு மணம் செய்வித்தல்,[74]
  • வசுதேவர் வேள்வி செய்தல்,[75]
  • கண்டகருணன் முத்தி,[76]
  • கயிலாய யாத்திரை,[77]
  • பிராத்யும்னன் பிறப்பு, சம்புராசன் வதை, அநிருத்தன் பிறப்பு,[78]
  • ஓந்தியாய் இருந்த நிருகராசன்.[79]

பிற

  • கல்கி வரலாறு, கலியுக தர்மம் [80]
  • வைணவ தேசங்களுக்குச் சாரமான திருமால் பதிகள், மூர்த்துகள், தீர்த்தங்கள் ஆகியவற்றைக் கூறி வியாசர் பாகவதம் நூலை முடிக்கிறார்.

இதனையும் காண்க

கருவி நூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், 2005

அடிக்குறிப்புக்கள்

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005 பாகம் 1 பக்கம் 235
  2. படலம் 7-13
  3. படலம் 14
  4. படலம் 15-22
  5. அத்தியாயம் 6
  6. படலம் 48
  7. படலம் 23
  8. படலம் 24
  9. படலம் 29
  10. படலம் 30
  11. படலம் 34
  12. படலம் 35-42
  13. படலம் 44
  14. படலம் 64
  15. படலம் 65
  16. படலம் 66-70
  17. படலம் 71-78
  18. படலம் 79
  19. படலம் 80-81
  20. படலம் 83
  21. படலம் 84
  22. படலம் 85
  23. படலம் 86
  24. படலம் 87
  25. படலம் 102
  26. படலம் 97-99
  27. படலம் 52
  28. படலம் 25-28
  29. படலம் 31-33
  30. படலம் 35-42
  31. படலம் 45-47
  32. படலம் 49
  33. படலம் 53-56
  34. படலம் 61
  35. படலம் 62
  36. படலம் 63
  37. படலம் 82
  38. படலம் 88
  39. படலம் 93-96
  40. படலம் 100
  41. படலம் 106-108
  42. படலம் 103
  43. படலம் 104
  44. படலம் 60
  45. படலம் 105
  46. படலம் 109
  47. படலம் 110
  48. படலம் 111
  49. படலம் 112
  50. படலம் 113
  51. படலம் 114
  52. படலம் 115
  53. படலம் 116
  54. படலம் 117
  55. படலம் 118
  56. படலம் 119
  57. படலம் 35-42
  58. படலம் 35-42
  59. படலம் 43
  60. படலம் 50
  61. படலம் 51
  62. படலம் 57-58
  63. படலம் 59
  64. படலம் 35-42
  65. படலம் 120
  66. படலம் 121
  67. படலம் 122
  68. படலம் 123
  69. படலம் 124
  70. படலம் 125
  71. படலம் 126-128
  72. படலம் 129-130
  73. படலம் 89
  74. படலம் 90
  75. படலம் 91
  76. படலம் 92
  77. படலம் 97-99
  78. படலம் 97-99
  79. படலம் 101
  80. படலம் 131
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகவதம்_(புராணம்)&oldid=4085854" இலிருந்து மீள்விக்கப்பட்டது