விதர்ப்ப நாடு
விதர்ப்ப நாடு (Vidarbha kingdom), சமஸ்கிருத இதிகாசமான மகாபாரதத்தில் குறிப்பிட்ட பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டை யது குலத்தின் ஒரு கிளையினரான போஜர்கள் ஆண்டனர். விதர்ப்ப நாட்டின் தலைநகரம் குந்தினபுரியாகும். மகாபாரதம் குறிப்பிடும் விதர்ப்ப நாட்டு மன்னர் வீமன் ஆவார். (மகாபாரதம் வன பருவம் 3:53 முதல் 77 முடிய).
அமைவிடம்
தொகுவிந்திய மலைத்தொடருக்கு தெற்கில், தற்கால மகாராட்டிர மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் விதர்பா என அழைக்கப்படும் பகுதியில் விதர்ப்ப நாடு அமைந்திருந்தது.
புராண & இதிகாச கால விதர்ப்ப நாடு
தொகுநிடத நாட்டு நளனின் மனைவியான தமயந்தி, பாகவத புராணம் குறிப்பிடும் கிருஷ்ணரின் மனைவி ருக்மணி மற்றும் அகத்தியரின் மனைவி லோபமுத்திரை ஆகியவர்கள் விதர்ப்ப நாட்டு இளவரசியாவார்கள்.[1] விதர்ப்ப நாட்டின் பட்டத்து இளவரசன் பெயர் ருக்மி ஆகும்.
குருச்சேத்திரப் போரில்
தொகுபாண்டவர் மற்றும் கௌரவர்கள் விதர்ப்ப நாட்டு மன்னருக்கு அழைப்பு விடுக்காததால், குருச்சேத்திரப் போரில் விதர்ப்ப நாட்டுப் படையினர் கலந்து கொள்ளவில்லை.
இதனையும் காண்க
தொகு- பரத கண்டம்
- நளன் மற்றும் தமயந்தி
மேற்கோள்கள்
தொகு- ↑ Lopamudra The Mahabharata, translated by Kisari Mohan Ganguli (1883 -1896), Book 3: Vana Parva: Tirtha-yatra Parva: Section XCVII.
உசாத்துணை
தொகு