வன பருவம்

மகாபாரதத்தின் மூன்றாம் பகுதி


மகாபாரதத்தின் 18 பருவங்களில் மூன்றாவது பருவம் வன பருவம். ஆரண்யக பருவம் அல்லது ஆரண்ய பருவம் என்றும் இது குறிப்பிடப்படுவது உண்டு. பாண்டவர்களின் 12 வருடக் காட்டு வாழ்வை விபரிக்கும் பருவம் இது.

மகாபாரதத்தின் 18 பருவங்களில் மிக நீளமானது இதுவே. தருமன் சூரிய பகவானிடமிருந்து அட்சயப் பாத்திரம் பெறுதல், கிருஷ்ணன் அருளால் திரௌபதி, துர்வாச முனிக் கூட்டத்தவர்களின் பசியை போக்குதல், அரிச்சந்திரன், ஆணி மாண்டவ்யர் கதை, நளாயினி கதை, நள - தமயந்தி கதை, திரௌபதியை கவர்ந்து சென்றசெயத்திரதனை பாண்டவர்களால் அவமானப்படல், தருமனுக்கு மார்கண்டயே முனிவர் இராமாயண காவியம் கூறுதல், துரியோதனன் அவமானப்படல், அருச்சுனன் இந்திரலோகம் செல்தல் மற்றும் சிவனிடமிருந்து பாசுபத அஸ்திரம் பெறல், வீமன் அனுமரைக் காணல், இயட்சன் கேள்விகளுக்கு தருமன் பதில் கூறி, இறந்த தன் உடன்பிறந்தவர்களை உயிர்ப்பித்தல், வியாசர் மற்றும் நாரதர் தருமனை சந்தித்து மன ஆறுதல் கூறல், சத்தியபாமா திரௌபதிக்கு கூறுதல் ஆகியவை இதில் விவரிக்கப்படுகிறது.[1]

உப பருவங்கள்

தொகு

இந்தப் புத்தகத்தில் 13 உப பருவங்களும் 312 அத்தியாயங்களும் உள்ளன. கீழ்க்கண்டவை சபா பருவத்தின் உப பருவங்களாகும்.

1. ஆரண்யக பருவம் (பகுதி: 1-10)
2. கிர்மிரபதா பருவம் (பகுதி: 11)
3. அர்ஜூனாபிகமன பருவம் (பகுதி: 12-37)
4. கைராத பருவம் (பகுதி: 38-41)
5. இந்திரலோகமன பருவம் (பகுதி: 42-51)
6. நளோபாக்கியான பருவம் (பகுதி: 52-79)
7. தீர்த்த யாத்ர பருவம் (பகுதி: 80-180)
8. மார்கண்டேய சமஸ்ய பருவம் (பகுதி: 181-230)
9. திரௌபதி-சத்யபாமா சம்வத பருவம் (பகுதி: 231-233)
10. கோஷ யாத்ர பருவம் (பகுதி: 234-258)
11. திரௌபதி-ஹரண பருவம் (பகுதி: 259-290)
12. பதிவிரதா-மஹாத்மய பருவம் (பகுதி: 291-308)
13. ஆரண்ய பருவம் (பகுதி: 309-312)

மேற்கோள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன_பருவம்&oldid=3832531" இலிருந்து மீள்விக்கப்பட்டது